கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 6, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

இது தான் காதல் என்பதா?

 

 அன்று சோழர் தலைநகரமான புகார் விழாக்கோலம் பூண்டிருந்தது. கற்பக கோட்டத்தில் வெள்ளை யானை கொடி ஏற்றப்பட்டு, அமரர் கோன் இந்திரனுக்காக எடுக்கப்பட்ட விழா தொடங்கியது. விழாவின் போது சமயக்கணக்கர்களும் , அமயக் கணக்கர்களும் , பல்வேறு மொழி பேசும் மக்களும், ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் புகாரில் ஒருங்கே நிறைந்திருந்தனர். வச்சிர கோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த போர் முரசு, பட்டாடை அணிந்த யானையின் பிடரியின் மேல் ஏற்றப்பட்டது. முதுகுடிப் பிறந்த முரசு அறைவோன் வீதி வீதியாகச் சென்று மன்னனின் விழா கோள்


எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு?

 

 எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது? எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல. ரொம்ப நேரமா யோசிக்கிறேன். என்ன யோசிச்சுப் பார்த்தாலும் நினைவுக்கு வந்து தொலைய மாட்டேங்குது. இதுக்கு முன்னால நுங்கம்பாக்கத்தில் இருந்த வீடு நினைவுக்கு வருது. இப்போ அடையார் பக்கம் வீடு மாத்திக்கிட்டுப் போனோம். அஃது என்னவோ ஒரு நகர். சாஸ்திரியா? காந்தியா? இந்திராவா? சுத்தமா நினைவுக்கு வரலையே. வயசாயிடுச்சா? எந்தப் பஸ்ல ஏறது? இல்ல ஆட்டோலப்


என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?

 

 மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்களே அது மீனாவின் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. பெரும் பணக்காரர் மஹாலிங்கத்தின் ஒரே வாரிசு; மீனா; பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர இருந்த அந்த தருவாயில் விதி, அவளை வீதிக்கு கொண்டு வந்ததை சின்னஞ்சிறு பெண்ணான அவள் தாங்கித்தான் ஆக வேண்டும். விதி வலியது அல்லவா? கனகதாரா இண்டஸ்ட்ரீஸ் பெருமளவில் பெயரும் புகழும் பெற்ற ஒரு ஸ்தாபனம். அதன் நிறுவனர் மஹாலிங்கம்; உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி இவற்றிற்கு உதாரணமாக திகழ்ந்தவர். இன்னும்


1800களின் பிற்பகுதி

 

 1,800 களின் பிற்பகுதி, அன்றைய பேச்சுத்தமிழே, காதில் தேன்வந்து பாய்ந்தது போல் சுவைக்கும். மண்மணக்கும் அந்த அழகிய கிராமத்தின் சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டே புதிதாய் பூத்த மஞ்சள் ரோஜாவை ரசித்து நின்றவள் காதில், உரக்கக்கேட்டது… “பூ… எங்கம்மா இருக்க….?” ஆனால் பூங்குழலி அக்குரலை சட்டை செய்யவில்லை. மஞ்சள் ரோஜாவை விட்டுவிட்டு அதனருகிலிருந்த சிகப்பு ரோஜாவை ரசிக்கச் சென்றுவிட்டாள். அடுத்து சமீபமாயிருந்த வேப்பமரத்திற்குச் சென்று, தன் கரங்களுக்கு எட்டிய தொலைவிலிருந்த ஒரு குச்சியை உடைத்து, பற்களைத் துலக்க ஆரம்பித்தாள்.


மனக்கவலை

 

 அலுவலகத்துக்கு போன பின்னால் தான் தெரிந்தது பாலகிருஷ்ணனுக்கு திடீரென்று “ஹார்ட்அட்டாக்” வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று. அப்பொழுதே நான்கைந்து பேர் ஒரு மணிநேர அனுமதி பெற்று போய் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள். நான் போகவில்லை. போன உடன் பார்த்துவிட்டு வரும் நட்பு அல்ல எங்கள் நட்பு. அதனால் மாலை அங்கு சென்று பார்த்து விட்டு நிதானமாய் போகலாம் என்று முடிவு செய்து கொண்டேன். மாலை நாலு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று ஹாஸ்பிடலுக்கு சென்றேன். கண்டுபிடிப்பது ஒன்றும்