கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 3, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

தாயாய், தாதியாய்..!

 

 (அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன) ‘அம்மா, நீ கட்டாயம் வேலைக்குப் போகணுமா..?’ அருகே படுத்து இருந்த ஆறு வயது கடைசிப் பெண் சங்கீதா கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டாள். ‘ஆமா, கண்ணு கட்டாயம் போகணும், நீ சமத்தாய் தூங்கு. அக்கா பார்த்துக் கொள்ளுவா’ அவளுக்கு ஆறுதல் சொல்லி, தட்டிக் கொடுத்து அணைத்து தூங்க வைத்தாள். பக்கத்துக் கட்டிலில் இரண்டாவது


ரகசிய டைரி

 

 மதன்……மதன்…என்று கூறி கொண்டே வந்தான் வருண். பின் மதனை பார்த்ததும்,மச்சான் வாடா ஜாகிங் போவோம் என்றான்.அதற்கு மதனோ எல்லாரும் காலையில தான் ஜாக்கிங் போவாங்க ஆனா நீ மட்டும் மத்தியானம் இந்த மொட்டை வெயிலை ஜாகிங் போறது மட்டும் இல்லாம அதுக்கு என்ன வேற துணைக்கு கூப்பிடுற என்னடா மச்சான் நியாயம் என்றான். வருணோ மதனை பிடிச்சு இழுத்து வாடா என்றான்.வருணும் மதனும் ஓடி விட்டு சாலையில் ஒரு ஓரமா அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.அங்கு ஒரு டைரி


நீயா !?

 

 அன்று அந்த புகழ் பெற்ற வில்லன் நடிகர் ஜெகன், சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் சத்தியமூர்த்தியின் எதிரே அமர்ந்து தன் மனக்குழப்பத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். ஜெகன் நடிகிறார் என்றாலே அப்படம் வசூலில் சக்கை போடு போடும். சமீப காலமாக அவருக்கு கதாநாயகனாக நடிக்கும் விஸ்வாவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரே வெறுப்பாக வரும் காரணம் புரியவில்லை. விஸ்வா, ஜெகனுக்கு நல்ல நண்பன். கதாநாயகனாக ஜொலித்துக்கொண்டிருப்பவர். “கொலை செய்து விடலாம் போல ஒரு வெறுப்பு ஏன் வரவேண்டும் டாக்டர் ? என்னை குணப்படுத்திக்கொள்ள வேண்டும்”.


சமையல்

 

 அடுப்பில் குழம்பு கொதித்து கொண்டிருந்தது..ஓருபுறம் உலை வைத்தபடியே..வாழைக்காயை அரிந்து கொண்டிருந்தாள் சரஸ்வதி…இன்னும் வடைக்கு ஊற போட்டதை அரைக்க வேண்டும்.. சரஸூ ஆச்சா….சீக்கிரம் இலை போடணும்..நேரமாகுது..என்ற மாமியார் தனம்மாள் …கனத்த சரீரத்தை தூக்கி நடந்தபடி குரல் கொடுத்தாள் “இன்னும் கொஞ்ச நேரத்துல ரெடியாகிடும் அத்தே…” சர்க்கரை பொங்கலுக்கு வெல்லம் இடிக்க வேண்டும். பாயசத்திற்கு பாலை காய்ச்சணும்..தலைக்கு மேலே வேலை இருந்தது சரஸூவிற்கு…நெற்றியில் ஆறாக பெருகிய வியர்வையை தன் புடவை தலைப்பால் ஒற்றிபடி வேலையை தொடர்ந்தாள்..ஆயாயமாக இருந்தது சரஸூவிற்கு. விடியலில்


சைக்கிள்

 

 இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு போகவர வழியில்லாமல். .மனைவியின் கத்தலால், பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடிவந்தேன். என்ன கமலா ஏன் இப்படி கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்த கேள்வியை கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னை பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதைய வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. இங்க


வெங்கி தாத்தாவும் வெற்றிலைப் பெட்டியும்!!!

 

 ‘வெண்ணிலாவும் வானும்போலே வீரனும் கூர்வாளும்போலே’ என்று பாடிய பாரதிதாசன் வெங்கட்டைப் பார்த்திருந்தால், ‘வெங்கியும் வெற்றிலைப் பெட்டியும் போலே!’ என்று இன்னொரு வரியை கட்டாயம் சேர்த்திருப்பார்! வெங்கி என்று செல்லமாய் அழைக்கப்படும் வெங்கட்ராமன் வெற்றிலை செல்லத்திற்கு எப்படி அடிமையானார்??? அடிமை என்றால் அடிக்ட் ஒன்றும் கிடையாது! ஒரு எஜமான விசுவாசம்….. அவ்வளவுதான்…!!! வேறு எந்தப் பழக்கமும் இல்லை ! எப்பவுமே இல்லையா என்றால் ஒருகாலத்தில் இருந்தது! வெங்கட்ராமன் அமெரிக்கன் கல்லூரியில் , ஆங்கில துறையின் விரிவுரையாளராக இருந்து பின்னர்


நரபலி

 

 ஜோதிடர் சொன்னது அடிக்கடி ரகுபதி மனதில் நிழலாடிச் சென்றது. ”இன்னைக்கு நம்ம திட்டத்த எப்படியும் நிறை வேத்திடனும்” என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டான். இப்பொழுதெல்லாம், தனது மகன் விக்னேஸ்வரனை வெறுப்புடன் பார்க்கத் தொடங்கியிருக்கிறான், ரகுபதி. அவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. ஹோட்டலில் ஏற்கனவே வேலை செய்த அனுபவம் இருந்ததால், திருமணத்திற்குப் பின் அவன் வசிக்கும் பகுதியிலேயே சிறிய உணவகம் ஒன்றைச் சொந்தமாக தொடங்கி நடத்தி வந்தான். தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் மூலதனமாக்கி நடத்தி வந்த


நேசம்..!

 

 இரவு மணி 10.10. “என்னங்க..! நம்ப பொண்ணு இப்படி இருக்காளே….! அவளுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா…?”கேட்டு கட்டிலில் தன் அருகில் படுத்திருக்கும் கணவன் பக்கம் ஒருக்களித்துப் படுத்தாள் அம்புஜவள்ளி. “என்ன செய்யிறது அம்புஜம்..? அது அவளோட விதின்னு விட்டுட வேண்டியதுதான். !”சாம்பசிவத்திற்குச் சொல்லும்போதே துக்கம் தொண்டையடைத்தது. “அப்படி விட்டுட முடியுமா..? !. அவளை பார்க்கப் பார்க்க என் பெத்த வயிறு பத்தி எரியுதுங்க…”விசும்பினாள். “எனக்கும் தெரியுதுதான். சொன்னா கேட்கமாட்டேன்கிறாளே…?!”இவரும் கமறினார். “அவள் தான் குழந்தை. பிடிவாதம் பிடிக்கிறாள்ன்னா


மீராகிருஷ்ணன்

 

 காதல் முதலும் முடிவாய் போகுமென்று அறியாமல் சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தேன் அவள் கூறுவதை. ‘இங்க பாருங்க என்மேல உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்குன்னு நினைக்கிறேன் ப்ளீஸ் மன்னிச்சிடுங்க அன்ட் என் பின்னால இப்டி வராதிங்க எனக்கு வருத்தமா இருக்கு. வீட்ல எனக்கு கல்யாணம் பேசிற்றுக்காங்க எனக்கு மேரேஜ் ஃபிக்ஸாகப்போகுது இன்னும் இரண்டு மாசத்துல அனேகமா எங்கேஜ்மென்ட் முடிவாகலாம் ‘ என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க எனக்கோ… அவள் சொல்வது பொய்யா மெய்யா என்பதை சிந்திப்பதற்கில்லை இதுவரை என் கண்களுக்கெட்டிய நிலாவாக


கசக்கும் உண்மைகள்

 

 என் பெயர் நிர்மலா. சுவையற்ற உணவும், பொருந்தாத ஆடையும் போலவே நானும் எதற்கும் பயன் படாமல் இருந்தேன். குழந்தையாக இருக்கும்போதே எனது பெற்றோர்களால் கைவிடப் பட்டவள் நான். எனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, இல்லை. நான் அனாதை இல்லை. அது மிகவும் வேதனைக்குரியது. எனது பெற்றோர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள். நான் வாழும் இதே சிட்டியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னிடம் வேற்று நபர் போல் நடந்து கொள்வார்கள். பசி வந்தால் வீல் என்று