கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 26, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

முரண்கள்

 

 யமதர்மராஜாவின் இராச்சியம் தர்ப்பார் நடந்து கொண்டிருக்கிறது,,, சித்திரபுத்த்திரன் பாவ புன்னியக் கணக்கை படித்துக் கொண்டிருக்கிறான். தேவ கணங்கள இறந்த ஆன்மாக்களை அவர்களது கணக்குப் பிரகாரம் நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிம்மாசனத்தில் வீற்றிருந்த யமனாரின் நெற்றிப்பொட்டு சுருங்குவது அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் மனக் கண்ணின் முன் தராசு….அதில் உள்ள முள்ளு பாவக் கணக்கின் பக்கம் மிகவும் சாய்ந்து கிடக்கிறது… கலி முற்றிவிட்டதா….என்னதான் பூவுலகில் நடக்கிறது ….?ஓருமுறை அங்குசென்று பார்த்துவர அவர் விரும்பினார்… உருவமா


அஸ்வத்தாமா

 

 அன்னைக்கு நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கு!!, சில கனவுகள் உண்மையாகவே நடந்தது மாதிரி இருக்கும், ஆனால் கண் விழித்ததும், “ச்ச!! கனவு!!” என்று சலித்து கொண்டு அதனை மறந்து விடுவோம்!! ஆனால் அன்னைக்கு எனக்கு நடந்த அனுபவம்!! அதிலும் அந்த பெரியவரின் பேச்சும் தோற்றமும் மறக்குற மாதிரியா இருந்தது!!? அது கனவா!? நனவா!? எதுவும் யோசிக்க விரும்பல, அந்த சம்பவத்திற்கு பிறகு என் வாழ்க்கையே பெரிய மாற்றத்தை அடைஞ்சிருச்சி!! அன்னைக்கு அந்த சம்பவம் நடந்ததுலருந்து இரண்டு


எழும் பசும் பொற்சுடர்

 

 எங்கிருந்தோ பாரதியாரின் பாடல் வரிகள் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. “எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி……” சுடர்; அந்த பாடலைப் பெரிதும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். அமெரிக்காவிலிருந்து தன் பெற்றோருடன் தன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்த அவளுக்கு, இந்தியா ஒரு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாளைக்கு பக்கத்து ஊரில் இருக்கும் சின்ன தாத்தா வீட்டிற்குப் போகப் போகிறார்கள். அங்கு அவள் சந்திக்கப் போகும் தன் உயிர்த் தோழி, புனிதாவை நினத்தாலே அவளுக்கு இறக்கை கட்டிப் பறக்க வேண்டும்


தொலைந்த கனவுகள்

 

 வேகமாக வந்த அந்த போலீஸ் ஜீப் கீறீச்சிட்டு அந்த வீட்டின் முன் நின்றது …விறு விறுவென நான்கைந்து போலீஸ்காரர்கள் இறங்கினர்… வீட்டின் முன் சூழ்ந்திருந்த கூட்டத்தினரை பார்த்து ” கலைஞ்சி போங்கய்யா” வேலை செய்ய விடுங்க, வேடிக்கை பாக்காதீங்க …என ஏட்டு கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே போக முயன்றார்… “பாடி “எங்கைய்யா கிடக்கு ..பாருய்யா என்றார் இன்ஸ்பெக்டர்.. இங்கே தான் சார் கிடக்கு… “அந்த வெப்பனும் இங்க தான் ஸார் இருக்கு ” எனறார் ஏட்டு..


முதல் புத்தகம்

 

 நான் கொஞ்சம் கதைகள் எழுதியிருக்கிறேன், அதை புத்தகமா போடலாமுன்னு நினைக்கிறேன். தாராளமா போடலாம், எவ்வளவு காப்பி வேணுமின்னு நினைக்கிறீங்க? என்கிட்ட பணவசதி அவ்வளவு இல்லை. குறைஞ்சபட்சம் எவ்வளவு காப்பி குறைவான பட்ஜெட்டுல போடமுடியும். முந்நூறுலிருந்து எவ்வளவு வேணுமின்னாலும் போடலாம். எவ்வளவு ஆகும்? அவர் தொகையை சொன்னதும் மலைத்து போகிறான், அவ்வளவு ஆகுமா? ஆமாங்க, அதுக்கு மேலே காப்பி அதிகமாக அதிகமாக உங்களுக்கு தொகை குறையும். ஆனால் குறைந்த பட்சம் இத்தனை காப்பியில இருந்துதான் போடமுடியும். இவன் யோசனையில்