கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 19, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

முத்து கிருஷ்ணன்

 

 ரகு விலாஸில், எப்போதும் உட்காரும் டேபிளில் போய் உட்கார்ந்தார் கிருஷ்ணன். அவரைப் பார்த்ததும், சலாம் வைத்துவிட்டு, சற்று நேரத்தில் காஃபியைக் கொண்டு வந்து வைத்தான் சர்வர் ராஜு. “வேற ஏதாவது சார்…’” என்றான். வேண்டாம் என்பது போல் கைகாட்டினார் கிருஷ்ணன். காஃபியைத் தவிர, அவர் எப்போதும் வேறு எதுவும் கேட்கமாட்டார் என்று தெரிந்திருந்தாலும், ராஜுவுக்கு பழக்க தோஷம். ஒவ்வொரு முறையும் கேட்பான். அவரும் இதேபோல் சைகை செய்வார். அவருடன் எப்போது வரும் முத்துவேல் இல்லாமல் எதிர் இருக்கை


உன்னோடுதான் நான்

 

 அன்பை அனுபவித்திருக்கிறீர்களா நீங்கள்? அதுவும் உன்னதமான, தூய்மையான அன்பை? இப்பப் போய் நாகராஜன் என் நினைவுக்கு வந்தான். எல்.கே.ஜி இலிருந்து நான்காம் வகுப்பு வரை நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தோம். “கோகிலா! கோகிலா! என்று அவன் அழைப்பதே அருமையாக, அன்பாக இருக்கும். என்ன பேசுவது? எதைப்பற்றி பேசுவது? ஒன்றும் தெரியாமல் பேசிக்கொண்டே இருப்போம். அவனை டீச்சர் அடித்தால் எனக்கு ஏன் அழுகாச்சியா வருது? நாகா, படிப்பில் சுட்டி என்றாலும் குறும்புகள் செய்து அகப்பட்டுக் கொள்வான். எனக்குப் பிடிக்கும்


சிகப்பு வட்ட மர்மம்

 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். அவர் ஒரு தனியார் உளவாளி. அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர். பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற


சாது மிரண்டால் (அ) குணங்கள்

 

 விழிப்பு வந்த பொழுது மணி சரியாகத் தெரியவில்லை. படுக்கை அறையின் கண்ணாடி ஜன்னல்களின் திரைச்சீலையினை மனைவி நன்றாக இழுத்து மூடியிந்ததும் ஒரு காரணம். ஓ..! இன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா, அதுதான். லீவு நாள் என்றால் அவள் அப்படித்தான் செய்வாள். அப்பொழுது , ‘சரட்’ என்று ஏதோ ஒரு பிளாஸ்டிக் பை கீழே விழுந்த சத்தம் கேட்டது. அந்தப் பை ‘கம்ப்பியூட்டர் டேபிள்’ மேல் அல்லவா இருந்தது. அது ஏன் கீழே விழுந்தது? அதை யார் தள்ளியது? முழுவதும்


பிணைக்கைதி

 

 மதிய நேர பயணம் மிகவும் சுகமாக இருந்தது. அதுவும் பொள்ளாச்சி பஸ் நிலையத்தின் எதிரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு பஸ்ஏறியவன் பஸ் அந்த மலைப்பகுதியில் வளைந்து வளைந்து செலவது மனசுக்கு ஊஞ்சல் ஆட்டுவது போல் உணர்த்த அப்படியே கண்ணயர்ந்துவிட்டேன். திடீரெனகண்டக்டர் “வண்டிஅஞ்சுநிமிசம்நிக்கும்” டீ சாப்பிடறவங்க சாப்பிட்டுட்டு வந்துடலாம் “அறிவிப்பை கேட்டு சட்டென விழிப்பு வர எங்கிருக்கிறோம்? என்றேதெரியாமல் இரண்டு நிமிடங்கள் நிதானித்தேன். பிறகுதான் பஸ் ஏறியதும், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு அப்படியே சீட்டில்