கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 3, 2020

9 கதைகள் கிடைத்துள்ளன.

மருதாணி

 

 “என்னாதிது?” அறை கதவை அடைத்துவிட்டு கைலியை மடித்துக் கட்டிக்கொண்டே கேட்டான். “பின்ன? நேத்து அரச்சது எப்டியிருக்கும்?”, அவள் நிமிர்ந்து கூட பார்க்காமல் எரிச்சலுடன் கூறியது அவனை சுடவில்லை, புன்னகைத்துக்கொண்டான். அவளின் பொய் கோபங்கள் கூட தெரியாதவனில்லை. கைபேசி திரையை தடவிக்கொண்டே கட்டிலயே சுற்றி சுற்றி பார்த்தான், மனம் மருதாணி வைத்துகொண்டிருக்கும் அவளையே சுற்றி வந்தது. அவளிடம் எதாவது பேசலாம், சில்மிஷம் செய்யலாம் என்றது. கைபேசியை அணைத்துவிட்டு அருகே போய் அமர்ந்தான். “குடு நா வக்கிறேன்”, கையை நீட்டினான்.


அட்டைப் பெட்டி மர்மம்

 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார்.


கோமியம் பிடித்த கதை

 

 என் அம்மா மிகவும் ஆச்சாரம் பார்ப்பவர். பூஜைகள் முறைப்படி நடக்க வேண்டும் என்பார். ஒரு முறை எங்கள் வீட்டில் புண்ணியாவசனம் பண்ண வேண்டியிருந்தது. காலை 5 மணிக்கு என்னை எழுப்பி விட்டார்கள். கோமியம் வேண்டுமாம். கோமியம் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? எளிமையான வார்த்தைகளில் சொன்னால், அது பசு மாட்டு மூத்திரம். நெய். பால், தயிர், இலை, தேங்காய், அரிசி. காய்கறி, சமித்து (உங்களை பாராட்டுவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். காய்ந்த சுள்ளிக் குச்சிகளுக்கு பெயர், சமித்து) எல்லாம்


மகாவின் ஆசை பொம்மை

 

 பொரி,பொரி,காரப்பொரி என்று பொரிக்கார் சுப்பையா உரத்த குரலுடன் பொரியை மகாவின் தெருவில் விற்றுக்கொண்டிருந்தார். பொரிக்காரர் குரலை கேட்டவுடன் மகா தனது உண்டியலில் இருந்து பத்து ரூபாயை சில்லரையாக எடுத்துக்கொண்டு பொரிக்காரரை நோக்கி ஓடினாள். பொரியை வாங்கி வாயில் போட்டுக்கொண்டே வீடு திரும்பினாள்…. மகாவின் முழுப்பெயர் மகாலட்சுமி. ஐந்து வயது சிறு குழந்தை. தன் ஒரு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் வளர்ப்பில் வளர்கிறாள். தாய் செல்வி வீட்டுவேலை செய்து மகாவை வளர்த்து வருகிறாள். தினமும் மகா அவள்


தாத்தா!

 

 சம்பந்தமூர்த்தி தெருவிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு நடந்து போவது ஒண்ணும் சிரமமேயில்ல. மேல மாசி வீதியில் நுழைந்து , கோபால கொத்தன் தெருவில் புகுந்தால் கோயிலின் மேற்கு வாசல் கிட்டக்கதான். பாலு கூட இருந்தால் பேசிக்கொண்டே நடப்பதில் தூரமே தெரியாது . முன்னெல்லாம் இருபது நிமிஷத்தில் போய்விடுவோம்.இப்போதோ நாப்பது நிமிஷமாகிறது. ஜனக்கூட்டம் பெருகிவிட்டதா அல்லது எங்களுக்கு வயசாச்சா , புரியவில்லை. பாலு ஒண்டிக்கட்டை….. சரஸ்வதியுடன் அதிக நாள் சேர்ந்து வாழ குடுத்து வைக்கவில்லை. சுயம்பாகம். என்னைத்தவிர, யாருடனும்

Sirukathaigal

FREE
VIEW