கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 14, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

பிரம்மாண்டம்

 

 சிகாகோ நகரின் ஓ’கேர் சர்வ தேச விமான நிலையத்தில் சுந்தரி பயணித்த விமானம் தரை இறங்கிய பொழுது அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தியாவில் லோக்கல் விமானங்கள் ஏறி பழக்கமில்லாத அவள், முதன் முறையாக சர்வதேச விமானத்தில் பயணித்து, அதுவும் 21 மணி நேரம் பயணித்து, சிகாகோ வந்து அடைந்திருக்கினறாள். அதை விட அவள் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? சுந்தரி, உள்ளூரில் தனியாகச் செல்வதற்கே பயந்து கொண்டிருப்பவள். இன்று கிட்டத்தட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வான் மைல்களைக்


திருமகள் தேடி வந்தாள்

 

 என் தாத்தா; என் பாட்டியை “நாச்சியார்” என்று வாய் நிறைய அழைப்பார்கள். அவர்கள் அழைப்பதைப்பார்த்து, நான் “நாச்சி” என்று மழலையில் அழைக்கத் துவங்கி, அப்படியே இன்று வரைக்கும் பழக்கமாகிவிட்டது. எங்கள் குடும்பம் அன்பு நிறைந்த குடும்பம். அதற்கு காரணம் முழுக்க முழுக்க என் நாச்சிபாட்டிதான். அவர்களின் அன்பான, கனிவான பேச்சு எல்லோரையுமே அன்பினால் கட்டிப் போட்டு அன்பினால் நிரப்பி இருந்தது. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதுதான் என் நாச்சியை நான் பிரிய நேரிட்டது. அப்பாவுக்கு


காலம் மறைத்த மக்கள்

 

 அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 நாங்கள் அந்த மலை உச்சியில் இரு நாட்கள் ஓய்வெடுத்து உடம்பைத் தேற்றினோம். ஒரு சிறிய விலங்கு ஒன்றும் கண்டோம். அதனால் இறைச்சியும் கிடைத்தது. எங்கள் தாகத்தைத் தணிக்க மழை நீர்க் குட்டையும் இருந்தது. நாங்கள் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே கதிரவன் எட்டிப் பார்த்தான். அதன் வெம்மையில் சமீபத்திய நிகழ்வுகளினால் ஏற்பட்ட எங்களைப் போர்த்தி இருந்த சோர்வுகளையும் உதறி விட்டோம். மூன்றாவது நாள் காலையில் கீழிருக்கும் பள்ளத்தாக்கிற்குச்


கறார்

 

 கொரோனா தொற்றுக்கு அஞ்சி சொந்த ஊர் வந்து இருபது நாட்களாகிவிட்டது. சொந்த ஊர், சொந்த வீடு. நகராட்சி விடும் தண்ணீர் காலை 6 மணி முதல் 7 மணி வரை தொட்டியில் வந்து விழும். மோட்டார் போட்டு ஏற்றி விட்டால் போதும். கண்ணாடி போல சுத்தமாகவும் ஐஸ் போன்ற ஜில்லிப்புடன் இருக்கும் குளிர்ச்சியான தண்ணீர். குளிப்பதற்கு சுகமாக இருப்பது மட்டுமல்ல. குளித்துமுடித்து உடுத்திக்கொண்டு உலவும் அடுத்த ஒரு மணி நேரத்துக்கும் தண்ணீரின் குளிர்ச்சி உடம்பில் இருந்து மனதை


ஜமீலா கிளினிக்

 

 இயற்கை எழில் மிகுந்த கிராமம், போச்சம்பட்டி. மாலை நேரம். ‘ஜமீலா கிளினிக்’கில் கிராமவாசிகள் குவிந்திருந்தனர். டாக்டர் முனவ்வர் ஒரு நோயாளிைய பரிசோதித்துக் கொண்டிருந்தார். ‘‘எல்லோரும் டாக்டருக்கு கொஞ்ச நேரம் கொடுங்க. அவருக்கு இப்ப இப்தார் டைம்…’’ குரல் கொடுத்தபடி வந்தான் முருகன்.இப்தாருக்கு அவர் உண்ண நோன்பு கஞ்சி, உளுந்து வடை, பழங்கள் ஆகியவற்றை தன் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்தான். தினமும் அப்படித்தான். ஒவ்வொரு இந்து வீட்டிலிருந்தும் டாக்டருக்கு அதிகாலையில் ஸஹர் சாப்பாடும், மாலையில் இப்தார் விருந்தும் வந்துவிடும்.