கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 11, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

நிழலைத் தேடுபவன்

 

 அடர்த்தியான பனிக்காற்று நாசித் துவாரங்களில் நுழைந்து நெஞ்சுக் கூட்டை நிரப்பிக் குளிர வைத்தது. தலையோடு சேர்த்துக் காதுகள் இரண்டையும் மப்ளரால் மூடிக் கழுத்தில் கட்டியிருந்தாலும் உடல் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது. இந்த மப்ளர், பல வண்ண நூல்களால் அன்புடனும் பாசத்துடனும் பின்னப்பட்டது. வண்ணக் கலவைகள் ஒழுங்கில்லாமல் பரவியிருந்தாலும் அதன் மீது எனக்குத் தனிப்பட்ட காதலே உண்டு. முக்கால் பாகத் தலையை மூடியிருக்கும் மப்ளர் ஒரு அஃறிணைப் பொருளாகக் கண்களுக்குப் புலப்பட்டாலும், அதன் உள்ளீடுகளில் உயிரோட்டமான உணர்வுகளே ஊடுருவி


என்றென்றும் காதல்

 

 தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள் ஹேமா. அருகில் கணவன் செழியனும் உறங்காமல்தான் இருந்தான். “என்னடா… தூக்கம் வரலையா? விசுக் விசுக்னு புரண்டு படுக்கக் கூடாதுன்னு உங்க அம்மா சொன்னாங்களே… மெதுவா திரும்பிப் படு. கொஞ்சம் காத்தாட பால்கனில உக்காந்துக்கறியா?” “இல்லைங்க… அதெல்லாம் வேண்டாம். அம்மா ஒரு மாதிரியா இருக்காங்க, நீங்க கவனிச்சீங்களா? ஏதும் உடம்புக்கு முடியலையா… என்னன்னு தெரியல?” “ஆமா ஹேமா… நானும் கவனிச்சேன். அத்தைகிட்டேயே கேட்டேன்…. உடம்புக்கு ஏதாவது முடியலையா? இங்கே உங்களுக்கு சௌகரியப்படலியா…? எல்லாம்


காலம் மறைத்த மக்கள்

 

 அத்தியாயம்–2 | அத்தியாயம்–3 நான் எழுந்த போது நன்றாக விடிந்திருந்தது. அஜோர் குத்துக்காலிட்டு மான் கறியை மரக்கரியின் குவியலில் போட்டு வாட்டிக் கொண்டிருந்தாள். நம்பினால் நம்புங்கள், புது நாளின் விடியலைப் பார்த்ததும் எழுந்தவுடன் மான் கறி சமையலின் இனிமையான வாசனை நுகர்ந்ததும் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புது நம்பிக்கை பிறந்தது. நேற்றைய இரவு நடந்த கொடூரங்கள் எல்லாம் மறைந்து போயின. மெல்லிய தேகம் கொண்ட அழகான முகம் கொண்ட அந்தப் பெண்ணும் ஒரு காரணமாக இருக்கலாம்.


சாமிநாதன்

 

 புரபசர் செந்தில்நாதன் வகுப்பை முடித்துவிட்டு காரில் ஏறியபோது, செல் போனில் ’டிங்’ என்று ஒரு சத்தம். ’வாட்ஸ் அப்’பில் செய்தி. போனை எடுத்து பாஸ்வேர்ட் டை கோலம் போடுவதுபோல எண்களின் மீது சுட்டுவிரலால இழுத்துவிட்டு, திறந்து, போனின் மேல் பகுதியை புத்தகத் தாள் தள்ளுவது போல தள்ளி, வாட்ஸ் அப் இருக்கும் பகுதிக்கு நகர்ந்தார். ”வரும் புதன் இரவு இந்தியா வருகிறேன். வியாழன் அன்று உங்களை சந்திக்க விரும்புகிறேன். இயலுமா? நன்றி. ராஜன்.ரங்கராஜன்”. ’ஓ! ராஜனா? ஏன்


மாரியம்மாளின் முடிவு

 

 விடியல் வேலையில் புழக்கடைக்கு போவதற்காக கதவை திறந்த மாரியம்மாள் எதிரில் ஒரு உருவம் தாடியுடன் வாசலில் நின்று கொண்டிருந்த்தை பார்த்தவள் ஒரு நிமிடம் திக்கென்று நின்று விட்டாள். அடுத்த நொடி நின்று கொண்டிருப்பவன் தன் மகன் தியாகராசந்தான் என்பதை கண்டு கொண்டவுடன் ஐயோ மகனே என்று ஓடி வந்து கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். அவனை தடவி தடவி பார்த்து தலையில் அடித்து அழுதாள். உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே. இப்படி அநியாயமா உருக்குலைஞ்சு போயிருக்கையேடா, மார்பில் அடித்து

Sirukathaigal

FREE
VIEW