கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 4, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

தொங்கட்டான்கள்

 

 வழியெல்லாம் வட்டில் கிணறு நிறைந்து நீர். பாத்தி கட்டி பசுமை. சங்கரி துர்க்கம் தாண்டிற்று ரயில்வண்டி. ஐந்தாம் முறையாய் காதுக்குள் இளையராஜாவின் குடகு மலை காற்றில் ஒரு பாட்டு. கண்களைக் கடக்கும் மொட்டை பனைகளை போல, துடைச்சுவிட்ட மாதிரி இருக்கு மனசு. ரயில்நிலையம் நெருங்கியதும் தோள் பையும் பெட்டியுமாய் எழுந்தாயிற்று. இறங்கியதும் ‘வணக்கம்’ என்றவாறு அருகில் வந்த இளைஞனை முருகன் என்று அனுமானிக்க முடிந்தது. ‘சங்கரையா..’ என்றதும், ‘ஆமாம், அவர்தானம்மா என்னை அனுப்பிச்சார் . முருகன் .


அன்பைத் தவிர என்னிடம் சொல்ல எதுவும் இல்லை

 

 ‘ஆண்டவா.. இருக்கற எல்லா பிரச்சனைக்கும் விமோச்சனமே இல்லையா..?’ என மனதிற்குள் வேண்டிக்கொண்டே தொழிற்சாலைக்கு கிளம்பினார் குருசாமி… எடுபிடி வேலை தான்.. ஆனாலும் வயது அதிகமாகிவிட்டதால் ஓடியாடி வேலை செய்ய முடிவதில்லை.. ஒரே பரபரப்புடன் காலை வேலை முடிந்து சுள்ளென்று பசிக்க ஆரம்பித்தது. துளி நேரம் ஒருவரும் உட்கார விடவில்லை. கை அலம்பி வரும் போது தான் அந்த சத்தம் கேட்டது. “தயிர் இல்லாத மதிய சாப்பாடா? சான்ஸே இல்ல.. எனக்கு தயிர் வேணும்.. இந்தா பத்து ரூபா..


தேன்சிட்டு கூடு

 

 காலையில இந்த தண்ணி வண்டிக்காரனுங்க தொல்லை தாங்கமுடியல. ஓயாம ஹாரன் அடிச்சிட்டே தெரு முழுக்க சுத்தி சுத்தி வர்றான். வீட்ல தண்ணியில்லாதவங்களுக்கு ஒரு தடவ ஹாரன் அடிச்சா கேக்காதா. ஏன் இப்படி காது கிழியிற அளவுக்கு ஹாரன் அடிக்கிறான்? இதை கேக்க யாருமே இல்லையா. ஒருத்தர் இந்த தெருவுல இருக்காரே. போன வாரங்கூட ரோட்டில வேகமா கார் ஓட்டிக்கிட்டு போன ஒருத்தர மறிச்சு எதிர் வீட்டுக்கார் சண்டை போட்டாரே. அவரு இதையெல்லாம் தட்டி கேக்கமாட்டாரா? கேட்கமாட்டார். ஏன்னா


காலம் மறைத்த மக்கள்

 

 அத்தியாயம்–1 | அத்தியாயம்–2 | அத்தியாயம்–3 நான் மலைச் சிகரங்களுக்கு மேலே பறக்கும்போது கண்ட கேஸ்பக்கின் என் முதல் அனுபவத்தை என்றும் மறக்க மாட்டேன். பனி மூட்டத்துக்குக் கீழே மங்கலாகத் தெரிந்த நிலப்பரப்பை நோக்கினேன். குளிர்ந்த அண்டார்க்டிக்கின் காற்று கேஸ்பக்கின் வெப்பமான ஈரப்பதமுள்ள வளி மண்டலத்துடன் கலப்பதால் அங்கே ஒரு புகை மண்டலமாகக் கட்சி அளித்தது. அதனால் அது மெல்லிய நாடா போன்று நீர்த்திவலைகளைப் பசிபிக் கடலில் நீண்ட தூரம் பரப்பியது. மிக பிரமாண்டமான பாவியல் ஓவியம்


மாமியின் அட்வைஸ்

 

 ஜன சந்தடியற்ற அந்த நெடுஞ்சாலையில் வேகமாக ஸ்கூட்டரில் போவது பரசுராமனுக்கு சுலபமாக இருந்தது. மாலதிக்கும் அந்த சுத்தமான காற்று சுகமாக இருந்திருக்க வேண்டும். பரசுராமன் ஏதோ சொல்ல, காற்றின் வேகத்தில் அவள் காதில் எதுவும் விழவில்லை. அவனை இன்னும் நெருங்கி, ”என்னங்க” என கத்தினாள். ஆமாம், கத்தினால்தான் என்ன? யார் காதில் விழப் போகிறது? இது என்ன அவர்கள் குடியிருக்கும் ஒண்டுக் குடித்தனமா, குரலைத் தாழ்த்திப் பேச! இப்பப் பார்க்கப் போகிற வீடு, ஆயிரம் சதுர அடியாமே!