Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2020

80 கதைகள் கிடைத்துள்ளன.

செகண்ட் ஹேண்ட்

 

 சுமதி! சுமதி! நித்யா அக்கா என்னைக் கூபிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது நான் கண்ணாடியில் பார்த்தபடி சுடிதாரில் ஷாலைப் பின் குத்திக்கொண்டிருந்தேன். இந்த சுடியும் கூட என் அக்காவினுடையதுதான். எப்போதும்போல பத்திரப்படுத்தி வைத்திருந்து அம்மாவால் எனக்கு தரப்பட்டது. தீபாவளி, என் பிறந்த நாள் ஆகிய தினங்களில் மட்டுமே எனக்கு புத்தம்புது ஆடைகள் கிடைக்கும். நான் அணிந்து கொள்ளும் மற்ற எல்லா ஆடைகளும் என் அக்காவினுடயதுதான். இதே மாதிரியே அக்கா விளையாடிய பொம்மைகள், நடைவண்டி,போன்ற அனைத்தும் அடுத்த குழந்தைக்கு உபயோகமாக


அடைமழை

 

 வடக்கு திசையில் கருமேகக்கூட்டங்கள் சேர்ந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் வீசும் காற்றினால் சைக்கிளை அழுத்த முடியவில்லை.பெரிய மழை வரக்கூடும் என்பதால் அருகில் இருந்த குடிசை வீட்டில் ஒதுங்கினேன். சைக்கிள் ஸ்டாண்டை போட்டு நிறுத்தியவுடனே மழை பிடிக்க ஆரம்பித்துவிட்டது. கார்ப்ரேஷனுக்கு வேலை வைக்காமல் தெருவில் உள்ள குப்பைகளை அடைமழையே அடித்துச் சென்றது.காய்ந்த தென்னை மரப்பட்டைகள் நிமிடத்துக்கு ஒன்று என்னும் கணக்கில் கீழே விழுந்தது. தூரத்தில் சட்டை அணியாத இரண்டு சிறுவர்கள் டைட்டானிக் கப்பலாக காகித கப்பலை மழைநீரில் விட்டு


மனைவியின் காதல்

 

 “வாழ்த்துக்கள் சார் …” என அனைவரும் வரிசையாக நின்று கொண்டு ஒவ்வொருவராக சேகரின் அறைக்குள் சென்று வாழ்த்திய வண்ணம் இருந்தனர் . எல்லோரும் வாழ்த்தி முடித்த பின்னர் அவருடைய நண்பர் சுந்தரம் அந்த அறைக்குள் நுழைந்தார். ஜில்லென்று ஏசி காற்று அறையை நிரப்பி இருந்தது. “வாழ்த்துக்கள் சார் … உங்களுக்கு புரமோஷன் கிடைச்சதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம் …” என்று கை குலுக்கினார் . நேற்று வரை “சேகர்” என்று அழைத்து வந்தவர் தான்… என்னதான் நண்பராக


பிடித்த வேலை – ஒரு பக்க கதை

 

 கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன். சே! இந்த நகர வாழ்க்கை வர வர எரிச்சலூட்டுகிறது.காலை எழுந்ததில் இருந்து ஒரே பரபரப்பு! மனைவி கவிதாவுக்கும் டென்சன். பாப்பாவை ஸ்கூலுக்குத் தயார் செய்ய வேண்டும். எனக்கு மதிய சாப்பாடு ,காலை டிபன் தயாரிக்க வேண்டும்.அரை மணி நேரத்தில் போக வேண்டிய ஆபிஸுக்கு இந்த டிராபிக்கால் ஒரு மணிநேரம் ஆகும்.அங்கே போனால் அந்த மேனேஜர் “உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்”என்று மேலும் டென்சனை ஏற்றி


பாட்டி கொடுத்த பரிசு

 

 ஊருக்குப் போவதென்றால் அதனை வட மகிழ்ச்சியான ஒரு சம்பவம் வாழ்வில் இருக்க முடியாது. அங்கே தான் எனது தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அந்தை, மாமாவின் பிள்ளைகள், அருண், தேவி, தாருண்யா எல்லாம் இருக்கிறார்கள். அங்கிருக்கும் மலை, அருவி, ஆறு, குருவிகள், மைனாக்கள் இப்படி எல்லாமே எனக்குப் பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல அங்கே யார் வந்தாலும் திரும்பிப்போக விரும்பமாட்டாங்க. ஆத்துக்குப் போனால் மீன்பிடிக்கலாம் தெப்பம் விடலாம், நீச்சல் அடிக்கலாம் நாள் முழுதும் விளையாடலாம். ஆனால் இவற்றையெல்லாம்


பிள்ளை பிடிப்பவள்

 

 மாடத்திக்கு, தான் சின்னப் பிள்ளையா இருக்கப்ப இருந்தே குழந்தைங்கன்னா ரொம்பப் புடிக்கும். – எந்நேரமும் ஏதாவது ஒரு பிள்ளையை இடுப்புல இடுக்கிக்கிட்டே அலைவா. தம்பி தங்கச் சின்னாலும் சரி… சொந்தக்காரப் புள்ளைங். கன்னாலும் சரி… அப்படிப் பார்த்துக்கிடுவா… கூச்சப்படாம குழந்தையோட மூக்கை சிந்துறது என்ன. ஆய் இருந்தா கால் கழுவுறது என்ன… பெத்தவ கூட சமயத்தில அக்யானியப்படுவா. இவ கூச்சமே பட மாட்டா. அதயைலெலாம் பாத்துட்டு எல்லாரும் அப்படித்தான் ஆச்சரியப்படுவாங்க. அவளைப் பார்த்தாலே பிள்ளை பிடிக்கிறவ வந்துட்டா


பாட்டாளி வர்க்கம்..!

 

 நான் சின்ன வயசுல இருந்தது ஒரு சிமெண்ட் ஃபேக்டரியோட குடியிருப்புல..! அப்பாவுக்கு அங்க தான் வேலை..! எல்கேஜி முதல் பளளி இறுதியாண்டுவரை அங்கேயேதான் படிப்பு.! வீட்ல நான் தான் ஒரே ஆம்பளப் பையன் ஆரம்ப நாட்கள்ல.. ஏன்னா அண்ணன் மெட்ராஸ்ல பாட்டி வீட்ல இருந்தான்..! ஆறாவதுல இருந்துதான் எங்க வீட்டுக்கு வந்தான்..! என் அப்பா அம்மாவுக்கு எல்லா வீட்டு வேலைக்கும் நான்தான் எடுபிடி..! வீட்ல பெரிய தோட்டம் உண்டு.. கனகாம்பரம் ல இரு்து.. டிசம்பர் குண்டு மல்லி..சென்ட்டு


நிஜமான மாறுதல்…

 

 பணத்தை எண்ணி படுக்கையைச் சுருட்டிய வினோதினி மெத்தையின் அடியிலிருந்து பர்ஸ் விழ…. துணுக்குற்றாள் . ‘யாருடையதாய் இருக்கும்….? ! ‘ – யோசனையுடன் எடுத்துப் பிரித்தாள். உள்ளே சின்ன அளவு புகைப்படத்தில் இளைஞன் ஒருவன் புன்னகைத்தான். ‘இப்போது வந்துவிட்டு சென்றவனுக்கும் முதல் ஆள் !’ -இவளுக்குப் பளிச்சென்று புரிந்தது. ‘மறதியாக விட்டுப் போய்விட்டானா…? !’- பணம் இருக்கும் அறையைப் பிரித்தாள். உள்ளே ஐந்து இரண்டாயிரம் நோட்டுகள். மூன்று ஐநூறு தாட்கள். ஐந்து நூறு… சில பத்து ரூபாய்க்கள்.


உனக்கும் எனக்கும் இல்லேடா…

 

 விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் ஒரு புகழ் பெற்ற காலஷேப கலாநிதி.அவர் காலக்ஷபம் என்றால் சபையில் கூடம் நிரம்பி வழியும். அவருக்கு நாலு சிஷ்ய கோடிகள் இருந்தார்கள்.சாஸ்திரிகள் காலக்ஷபம் முடிய ஒரு அரை மணி நேரம் இருக்கும் போது, அவர்கள் நாலு பேரும் ஒரு பொ¢ய தாம்பாளத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு,அந்த சபையிலே காலக்ஷபம் கேட்க வந்தவர்களிடம் எல்லாம் காட்டிக் கொண்டு வருவார்கள். காலக்ஷபப் பிரியர்கள் அவர்கள் தாம்பாளத்தில், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐந்து ரூபாய் என்று போட்டு


நாய்க் குணம்

 

 எல்ஐஸி யில் வேலை செய்பவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அசோசியேஷன் அமைத்துக்கொண்டு வெற்றிகரமாக ஒற்றுமையுடன் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மூன்றுமாடிக் குடியிருப்பு அது. அடுத்தடுத்து பலர் கிரகப்பிரவேசம் செய்துவிட்டு அதில் குடியேறினார்கள். சியாமளாவும் அவளது கணவர் ரவீந்திரன் மற்றும் பி.ஈ கடைசி வருடம் படிக்கும் ஒரே மகன் முரளி இரண்டாவது மாடியில் குடியேறினார்கள். ரவீந்திரன் குடிநீர் வடிகால் வாரியத்தில் எக்சிகியூட்டிவ் இஞ்சினியர். அவர்கள் ப்ளாட்டிற்கு எதிர் ப்ளாட்டில் எல்ஐஸியில் சியாமளாவுடன் பணிபுரியும் நேத்ராவதி, கல்லூரியில் படிக்கும் ஒரேமகள்