கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 5, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

 அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 “ஒரு நிமிஷம் இரு” நந்தினிக்கு ஃபோன் பண்ணேன் நந்தினி: “ஹலோ” நந்தா: “என்னை பெரிய வம்புல மாட்டிவிட்ருவ போல” நந்தினி: “என்ன வம்பு. சும்மா உளறாம சொல்றத செய்ங்க” நந்தா: “இது எதோ பைத்தியம் போலருக்கு” ரேவதி பலமாக சிரிக்கிறாள் நந்தா: “பாரு. கத்திய காட்டுனா பயப்படாம சிரிக்குது. நீ நினைக்கிற மாதிரி இது தானா எல்லாம் சாகாது” நந்தினி: “கத்திய காட்டி பயப்படாம இருந்தா


இனி எல்லாம் இன்பமே

 

 தினம் தினம் நடக்கும் வழக்கமான நிகழ்வுதான் அது. அன்றைக்கும் எனக்கு அது நடந்தது. அந்த நிகழ்வு நடந்தது எனது வீட்டுக்குள்தான் என்றதால்,மெல்ல நகர்ந்து ஒவ்வொரு சுவிட்ச் போர்டாய் சென்று பார்த்தேன்.இன்னேரம் புரிந்திருக்குமே உங்களுக்கு..என் ஃபோனில் சார்ஜ் போடத்தான் இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று? அனைத்து சுவிட்ச் போர்டுகளும் பிஸியாகவே இருந்தது. குழந்தைப்பேறு இல்லாதவர்கள்,கோவிலிலிருக்கும் ஆலமர விழுதுகளில் கட்டி தொங்கவிடும் பொம்மைத்தொட்டில் நினைவுக்கு வந்தது எனக்கு. ஒவ்வொரு சுவிட்ச் போர்டிலும் ஒவ்வொன்று தொங்கிக்கொண்டிருந்தது. சுவிட்ச் போர்டு ஒன்றின் ப்ளக்கில்,


பாடும் கடல் கன்னி காஞ்சனமாலா

 

 முன்னுரை மீன் பாடுவதாக ஒரு நம்பிக்கை கிழக்கு இலங்கையில் உள்ள மட்டகளப்பு சமூகத்தில் இருந்து வருகின்றது. பாடும் மீனையே “பாடுமீன்” என வழங்குவதாக அறிய முடிகிறது. இத்தகு பாடுமீன் இனம் இலங்கையில் கல்லடியிலும் கலிபோர்னியாவிலுமே உள்ளதாகக் கருதப்படுகின்றது.இது ஒரு வகை ஊரி என்பது ஆய்வாளர்கள் கருத்து. ஆனாலும், இத்தகு பாடுமீன்கள் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இன்னும் நம்பகமற்ற அல்லது நம்பலாமா? நம்பக்கூடாதா? என்ற நிலையிலையே உள்ளன. எவ்வாறாயினும், நாம் இன்று பாடுமீன் பற்றிய சில சுவர்சிமான செவி


நடுவுல ஒரு லட்சத்தைக் காணோம்!

 

 வெளியில் மினுக் மினுக் என்று எரிந்து கொண்டிருந்த “…..இது உங்களுடைய பாங்க்” அறிவிப்பின் பின்னால் அமைந்திருந்தது அந்த வங்கி. சாதாரண கால கட்டத்தில் அந்த வங்கிக்குள் திருவிழா போல கூட்டம் நிற்கும். அவரவருக்குத் தெரிந்த சிப்பந்தியைப் பிடித்து, வாடிக்கையாளர்கள் முன்னுரிமை புதுப்பித்துக் கொண்டு, அவர்களின் வேலைகளை முடித்துக் கொள்ளும் இலாவகம்! சேட் பாங்க் மாதிரி டோக்கன் முறை ஏற்படுத்தப் படவில்லை. இன்று கோவிட் காலம்! வங்கியினுள் நுழையவும் வெளியேறவும் மிகவும் ஸ்லோ மோஷனில் செய்ய வேண்டியுள்ள கட்டாயம்.


அக்கினி மனசு

 

 மூணு மாசம் ஆச்சு. வேலை வெட்டிக்கு போக முடியல. சாப்பாட்டுக்கு கஷ்டம். இந்த சூழல்ல என்னதான் பண்றது. தினமும் பொலம்பி தவிக்க வேண்டியதுதான். மணி மனசுக்குள்ள பொலம்பி கொண்டிருந்தான். “ஏங்க , இப்படியே உட்கார்ந்திருந்தால் சாப்பாட்டுக்கு என்ன தாங்க செய்யிறது. நாளைக்கு பொட்டு அரிசி கூட கிடையாது”. “என்னங்க .நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு ஒக்காந்து இருக்கீங்க” “ஏம்மா , என்னை என்ன செய்ய சொல்ற. துட்டு வச்சுக்கிட்டா ஒக்காந்து இருக்கேன். எனக்கு என்ன


எல்லோருக்குமான மரியாதை

 

 வாசலில் உட்கார்ந்திருந்த தசரதன், உள்ளே எட்டிப்பார்த்து ஊர்மிளாவிடம் ஏங்க, அனு அம்மா உங்களை யாரோ கூப்பிடுறாங்க என்று குரல் கொடுத்தார். வெளியே வந்த ஊர்மிளா, தசரதனை வெறுத்து எரித்து விடுபவள் போல் பார்த்து விட்டு, வந்தவளிடம் தகவல் சேகரித்து கொண்டு திரும்ப உள்ளே சென்று விட்டாள். ஏங்க வீட்டுக்குள்ளே மட்டும் கூப்பிட்டுக் கொண்டிருந்த அந்த மனுஷன் இப்போ வெளிமனுஷால் முன்னாலேயும் ‘அனு அம்மா’, ‘அனு அம்மா’,ன்னு கூப்பிட்டு மானத்தை வாங்குகிறார், எனக்கு பத்திக்கிட்டு வருது என்றாள் ஊர்மிளா.


கொரோனா கிச்சன்..!

 

 இந்தக் கொரோனா எத்தனையோ பேருக்கு உலகம் முழுக்க எத்தனையோ விஷயங்களைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது…! அதற்கு எப்படி பயப்படுவது..? எப்படி கட்டுப்பட்டு நிற்பது..? எப்படி மீறுவது ..? ஏன்..!? எப்படி அதை அலட்சியப் படுத்துவது வரை.. !! எனக்கும் சொல்லித் தந்து கொண்டிருக்கிறது.. எப்படி நாக்கிற்கும் சிறிது ருசியாக சமைப்பது என்று…!! எப்படி வேளா வேளைக்கு வீட்டைப் பெருக்குவது.. ஸிங்க் கில் ரொம்பிக் கிடக்கும் பாத்திரங்களைத் தேய்ப்பது..!! சமையலறை மோடையைத் துடைப்பது.. !நாலஞ்சு நாள் பாத்ரூம் வாஷ்பேஸின்


அம்பு..!

 

 நாங்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது. ஊரில் சாவு விழ வேண்டுமென்று எதிர்பார்த்தோம். ! அது அவர்கள் வீட்டிலேயே நிகழுமென்று எதிர்பார்க்கவில்லை. !! ஏன் எதிர்பார்த்தோம்..? ?…. அது பெரிய கதை. ஊரே சம்பந்தப்பட்டது. ஆனால் இருவர் ஈடுபட்டது. அப்போது… வளைத்த இடமெல்லாம் என் இடமென்று இருந்த காலம். அன்று தண்டபாணி பிள்ளை பெரிய பணக்காரர். அவர் ஊரில் பெருமாள் கோவில் காட்டினாராம். அதற்கு குளமும் வெட்டினாராம். எங்கள் அனந்தக்குடி ஊருக்கு அன்று முதல்


புயலுக்குப் பின் அமைதி

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 நளினிக்கும் அப்பா சொல்றது ரொம்ப சா¢ என்று பட்டது. அவள் மனசும் அழுதுக் கொண்டு இருந்தது. அப்பாவிடம் “என் வாழ்க்கை இப்படி ஆயிடுத்தே. நான் பண்ணது ரொம்ப தப்புப்பா.முதல் தடவை எனக்கு ‘விஸா’ கிடைக்காத போதே,நான் ‘அவர் கிட் டே ‘போன்’லே பண்ணி மன்னிப்பு கேட்டு இருக்கணும்”என்று சொல்லி மனம் வருந்தினாள் நளினி. கொஞ்ச நேரம் ஆனதும் கிருஷ்ணன “நீ மட்டும் தப்பு பண்ணலேம்மா.நீ அமொ¢க்காவிலே இருந்து எங்க கிட்டே பேசினப்ப,நானும் நம்ம


சாம்பலான முதல் கதை

 

 ஜெயகாந்தன் கதைகளில் இருந்த சப்தமும் வாதமும் சுவாரஸ்யமாக இருந்தன. அது என்ன மாதிரியான சுவாரஸ்யம் என்றால், தீபாவளிப் பட்டாஸ் வெடிக்கிறதைப் பார்த்து ரசிக்கிற சுவாரஸ்யம். தீபாவளிப் பட்டாஸ் அந்த ஒருநாள்தான் வெடிக்க வேண்டும். தினசரி வெடித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் ஜெயகாந்தன் தினசரி வெடித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் பின்னாளில் புஸ் வாணமாகிப் போக நேர்ந்தது. அவரிடம் திடீரென சரக்கு தீர்ந்து போயிற்று. கதைகளின் கதாபாத்திரத் தன்மைகளில் ஜெயகாந்தன் அவருடைய அபிப்பிராயங்களையும், அபிப்பிராயப் பேதங்களையும் மோத வைத்து