கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 2, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

 அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 “எத வெச்சு கொலைக்கு வாய்ப்பு அதிகம்’னு சொல்றீங்க?” “ஃபிங்கர் பிரிண்ட்ஸ் வெச்சு தான்” “இப்ப தான் தேர்ட் பர்சன் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எதுவும் கிடைக்கலனு சொன்னீங்க” “ஆமா. இங்க ஃபிங்கர் பிரிண்ட்ஸ் இல்லங்கிறது தான் லீடே. ரேவதி மரண வாக்குமூலம் எழுதுன A4 ஷீட்ல வெறும் கையால ஹேண்டில் பண்ணதுக்கான எந்த ட்ரேஸஸும் இல்ல. பொதுவா பேப்பர்ல இந்த மாதிரி கை ரேகை துல்லியமா எடுக்குறது


சிறுவனும் தானியங்கியும்

 

 ஒரு சிறுவன் மரக்குச்சிகளை வண்டிலுக்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு தானியங்கியைச் சந்தித்தான். வணக்கம் கூறி, விளையாடுவோமா? என்று கேட்டான். தானியங்கி மின்னியது: ஆம்! அவர்கள் விளையாடினார்கள். சிறுவன் மகிழ்ச்சியாக இருந்தான். இருவரும் இறக்கமான பாதையில் ஓடியதால் தானியங்கியின் பொத்தான் ஒரு கல்லில் அடிபட்டுவிட்டது. அதனால் தானியங்கி நிறுத்தப்பட்டுவிட்டது. என்ன நடந்தது? என்று சிறுவன் கேட்டான். தானியங்கி பதில் சொல்லவில்லை. வருத்தமாக இருக்கிறதா என்று சிறுவன் மீண்டும் கேட்டான். தானியங்கி அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை. நான்


முடிச்சி

 

 “வாங்க ரைட்டர் சார், என்ன வேணும்?” அண்ணாச்சி மோதிர விரல்களால் கரன்சி நோட்டை எண்ணிக்கொண்டே அதியனை வரவேற்றார். பாலவாக்கம் ஏரியாவுல அண்ணாச்சி டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்னா எல்லாருக்கும் தெரியும். “டேய் பசங்களா நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு கடைக்கு லாரில சரக்கு வருது. ரெண்டு பெரும் வேலைய முடிச்சிட்டு நைட் கடையிலேயே படுத்துகோங்க” கடையில வேல பாக்கும் பசங்ககிட்ட பேசிக்கொண்டே தன் பார்வையை அதியன் பக்கம் திருப்பினார். “சாரி சார், சொல்லுங்க தோசை மாவுதான?” என்று புன்னகைத்தார். அண்ணாச்சிக்கு


எம்மை ஆளுடையாள்

 

 தலைக்குமேல் மத்தாப்பாய் பொரியும் அக்கினி நட்சத்திர சூரியன். தனா என்கிற தனசேகரன் கிழக்கு மேற்காய் விரிக்கப்பட்டதுபோல் கிடந்த ஒழுங்கையில் நின்று ஆயா வீ்ட்டைப்பார்த்தார். ஒழுங்கைமணல் சூட்டில் பழுத்துக் கொண்டிருந்தது. சடைச்சி மடியில் படுத்திருப்பதுபோல் அந்த புளியமரத்தின் முன்னால் அகலம் நீண்டு கிடந்தது ஆயாவீடு. பாதி மண்டைவரை நெற்றி வளர்ந்து விரிந்ததுபோன்ற வழுக்கை. கிருதாவில் தொடங்கி பின் தலை முழுவதும் பஞ்சு ஒட்டியிருப்பது போன்ற முடி. மெல்லிய தங்கபிரேமில் பதிந்த மூக்கு கண்ணாடி. பிடித்து முறுக்கமுடியாதளவு வெட்டப்பட்ட வெள்ளைமீசை.


ஐந்து லட்சம்

 

 ‘எப்படிங்க உங்களால இப்படி இருக்கமுடியுது? அதப்பத்தி உங்களால பேச முடியலனா உங்க தம்பிகிட்ட நா பேசுறேன். நாம எப்படிங்க சும்மா இருக்கமுடியும்? நீங்க ஒன்னும் பெரிய பணக்காரன் இல்ல. உங்களுக்கும் நாலு பிள்ளங்க இருக்கு. மூத்த பொண்ணுக்கு நிச்சயமும் ஆயிடிச்சி. கல்யாணம் பண்ணனும். அடுத்தவன் ஆஸ்திரேலியாவில் படிச்சிகிட்டு இருக்கான். எவ்வளவு செலவு இருக்கு. அது உங்க பணங்க. அத கேட்க ஏங்க இவ்வளவு யோசிக்கிறீங்க?’ காயத்ரி வைத்த கண் வாங்காமல் அவனைப்பர்த்து நின்றாள். அவள் கணவன் பதில்