கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2020

137 கதைகள் கிடைத்துள்ளன.

ஜாலி அண்ணாச்சி

 

 பரமசிவத்துக்கு ஜாலி அண்ணாச்சி என்ற பெயர் பொருத்த மாகத்தான் இருந்தது. அடிக்கடி தமாஷ் பண்ணிக் கொண்டிருக் கும் சுபாவம் அவரிடம் அமைந்திருந்தது. அது சிறு பிராயத்திலிருந்தே வளர்ந்து வந்த குணம். சிறு குறும்புகள் புரிந்து, தன்னோடு இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும் எனும் ஆசையினால் தான் அவர் அநேக காரியங்களை செய்து வந்தார். பரமசிவத்தின் சில்லறை விளையாட்டுகள் பிறருக்குத் தொந்தரவும் வேதனையும் கொடுத்து விடுவதும் உண்டு. ஆனாலும் அதற்காக அவர் மனவருத்தம் கொள்வதுமில்லை; தனது போக்கை மாற்றிக்கொள்ள


மனம் தேற மருந்து

 

 கைலாசம் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்த்துப் போவதற்காகப் பலபேர் வந்தார்கள். அவன் இளம் கவிஞன். கலைஞன், இலக்கிய ரசிகன். சதா புத்தகங்களைப் படித்து, ரசித்து, அவற்றின் நயங்களில் ஆழ்ந்து கிடப்பவன். இப்படி அவனைப் பலரும் அறிந்து வைத்திருந்தார்கள். ஆகவே, அவன் நண்பர்கள், தெரிந்தவர்கள், அவனைப் பற்றிக் கேட்டிருந்தவர்கள் என்று பல ரகத்தினரும் வந்தார்கள், அவன் என்னென்ன மருந்துகள் சாப்பிடுகிறான், எந்த வைத்தியரிடம் சிகிச்சை பெறுகிறான் என்பன போன்ற விஷயங்கள் குறித்தும் அனுதாபத்தோடு கேள்விகள் கேட்டார்கள். ஆதரவாகச்


சிவத்தப்புள்ளை

 

 சிவத்தப் புள்ளையூர் – அந்த ஊர்க்கு முன்பு இருந்த பெயர் மறைந்து போகும் படியாக, அந்த ஊர்காரர்களே மறந்து விடும்படி, இந்தப் பெயர் நிலைபெற்று அநேக வருடங்கள் ஆகிவிட்டன. அந்த ஊருக்கு இப்படி ஒரு பெயர் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த ரஞ்சிதம் கதை முடிந்தும் சில வருடங்கள் ஓடி விட்டன. சில விசித்திரமான பெயர்கள் எத்தனை காலமானாலும் மாறுவதில்லை. “பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்தவள் ஓடை” என்ற பெயர் ஒரு சிற்றோடைக்கு நிலைத்து, கால காலமாக வழங்கி


கம்பீரஜன்னி

 

 எண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அவனைத் தெரிந்து வைத்திருத்தவர் பலரும், “கைலாசம் தானே! ஒரு மாதிரி டைப். முற்றிலும் லூஸ் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனமாகக் காரியங்கள் செய்கிறான் என்றும் சேர்த்துக் கொள்ள முடியாது. அசடு, அப்பாவி என்று தோன்றும் அவனைப் பார்த்தால். அவன் செய்து விடுகிற சில செயல்களைக் கவனிக்கையில், அயோக்கியன் – வீணன் என்றே அவனை மதிப்பிடத் தோன்றும்!” என்று சொல்லுவார்கள். கைலாசம் மற்ற எல்லோரையும் போல நடந்து கொள்வ தில்லை. “உலகத்தோடு ஒட்ட


துரும்புக்கு ஒரு துரும்பு

 

 சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன். எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர். “அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் தேடுறது? தள்ளுவண்டியை இழுத்திட்டுப் போயி, ரயில்வே ஸ்டேஷனிலே கிடக்கிற ஒரு பார்சலை எடுத்துக்கிட்டு வா” என ஏவுவார் இன்னொரு கடைமுதாளி. ஒவ்வொரு கடைக்காரருக்கும் எடுபிடி வேலை செய்து வெளியே அலைவதற்கு ரங்கன்


அக்கரைப் பச்சை

 

 கடற்கரைக் கோயிலை ஒட்டிய வெளிப்புறத்தில், சிறிய கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். பிரகாரத்தில் போய் வந்து கொண்டிருந்த ஆட்கள் நல்ல வேடிக்கைப் பொருள்களாக விளங்கிய போதிலும், கிழக்கே விரிந்து கிடந்த கடலும் வானமும், கரையை ஒட்டியிருந்த மணல் மேடும் ஒரு சில மரங்களும் தந்த காட்சி இனிமையே அவருக்கு மிகுதியும் பிடித்திருந்தது. இவை எல்லாம் அவருக்கு மன அமைதியைத் தந்தன என்று சொல்வதற்கில்லை. அந்த அமைதியும், அதனால் பிறந்த ஆனந்தமும் அவரை


பொன்கொன்றை பூக்கும்போது

 

 அதோ, என் எதிரே, அந்த மரம் மீண்டும் பூத்துக் குலுங்குகிறது. முகமெல்லாம் சிரிப்பேயாகி, சிரிப்பினால் முழு உருவமும் தனியொரு எழிலேயாகி நிற்கும் அழகுப் பெண் போல, அது முழுவதும் சிரிக்கும் மலர்களாகவே விளங்குகிறது. சரம் சரமாகத் தொங்கும் மஞ்சள் பூக்கள். பெயருக்குக்கூட மரத்தில் ஒரு இலையைக் காணோம். அதற்கு ஏன் இத்தனை உள்ளக் கிளர்ச்சி? ஏதுக்கு இத்தனை சிலிர்ப்பு? மங்கையின் உள்ளத்தில் கிளுகிளுக்கும் பருவகாலக் கனவுகள் அவள் முகத்திலும் அங்கங்களிலும் – அவள் மேனி முழுவதிலுமே பூத்துப்


வேலைக்காரி

 

 ”நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேணும்” என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம். “ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?” என்று கேட்டார் பிள்ளை. ”அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!” என்று சொல்லி, சிவராமன் பொருள் பொதிந்த சிரிப்பை உதிர்த்தார். “என்ன விஷயமய்யா? இப்ப அவ உங்க வீட்டிலே இல்லையா?” அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவா சூரியன் பிள்ளையைத் தூண்டியது. ஆனால், பசி பசி என்று


உடைந்த கண்ணாடி

 

 “காந்தி!” குளுகுளு என்று பசுமை கவிந்திருந்த மாந்தோப்பில், மாமரங்களுக்கிடையே வளைந்து நெளிந்து அழுத்தமாகப் பதிந்து கிடந்த ஒற்றையடித் தடத்தில் அவசரமற்று நடந்து கொண்டிருந்த யுவதியைக் குலுக்கியது அந்த அழைப்பு. தனது நினைப்பும் தானுமாய் மெது நடை நடந்த அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். முன்னாலும் பின்னாலும் சுற்றுப்புறத்திலும் அவளது மருண்ட பார்வை புரண்டு சுழன்றது. விடிவின் வெளிச்சம் இருள் அணையை உடைத்துக் கொண்டு வேகமாகப் பாய்ந்து பரவும் வேளை. புத்துணர்வும் புதிய எழிலும் இளமையும் குளிர்ச்சியும் எங்கும்


யாரைக் காதலித்தான்?

 

 தெருவில் வந்து கொண்டிருந்த சந்திரன் காதுகளில் அவ்வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவன் அந்த வீட்டை நெருங்குவதற்குச் சில அடி தூரமே இருந்தது. அவன் காதுகளை எட்டாது எனும் தைரியத்தில் தான் அந்தப் பெண் பேசியிருக்க வேண்டும். அவள் உரத்த குரலில் சொன்னது கணிரென்று அவனுக்குக் கேட்டது. “அதோ வருகிறாரே அவர் தினசரி இந்த வழியாகப் போகிறார். போகும்போதெல்லாம் இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டே போகிறார்.” கதவின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, வாசலுக்கு வெளியேயுமில்லாமல் வராந்தாவிலுமில்லாமல், உள்ளும் புறமுமாக நின்று