கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2020

137 கதைகள் கிடைத்துள்ளன.

ஊர் வம்பு

 

 கணவர் அலுவலகம் சென்றபின் வீட்டை பூட்டிக்கொண்டு,அவசரம் அவசரமாக நான்கு வீடுகள் தள்ளியிருந்த தனது தோழி நித்யா வீட்டுக்கு சென்றாள் மல்லிகா. வாங்கக்கா,என வரவேற்றாள் நித்யா. உனக்கு சேதி தெரியுமா? அந்த கோவிந்தராசு வீட்ல சொத்து தகராறுல அடிதடி சண்டையாகி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டுதாமே? என ஊர்வம்பை ஆரம்பித்து வைத்தாள். ஆமாக்கா,நான் கூட கேள்விப்பட்டேன் என்றாள் நித்யா. அக்கா உங்களுக்கு தெரியுமா? அந்த கல்யாணி அவளது மாமியாரை வீட்டைவிட்டு தொரத்திவிட்டுட்டாளாம். அவ புருஷன் பொண்டாட்டி பேச்சை கேட்டுக்கினு


அய்யாசாமி – ருக்கு சாவுத் தீட்டு

 

 காலாங்கார்த்தாலே எனக்கு கனவிலே ரயில் வந்தது, விடியற்காலையிலே நாய்கள் ஊளையிட்டது ருக்கு, அப்படி இருந்தால் என்ன சொல்லுவா ருக்கு?. ம். ரயில் நின்றதா? ஓடியதா? என கேட்டாள் ருக்கு. அது ஞாபகம் இல்லை என்றவர். நின்றால் என்ன? ஓடினால் என்ன? என கேட்டார். தீட்டு செய்தி வரும் என்பார் என் மாமியார் என்றாள் ருக்கு. நம்மாத்திலே யாரு உடம்பிற்கு முடியாமல் இழுத்துண்டு இருக்கா? என கேட்ட ருக்குவிடம் யாரு?என் மாமா தான், மூனு வருஷமா சீரியஸா இருக்கார்.டிபியோட


மீன் குஞ்சு

 

 கனகன்,கடைக்குத் தேவையான குளித்துப் போட்டு நிற்கிற பெண்களைப் போல நீர்த்துளிகளுடன் சிலிர்த்துக் கொண்டிருக்கிற கிடக்கிற‌ மரக்கறிகளைத் தெரிந்து வாங்கிக் கொண்டு , சங்கானைச் சந்தையிற்கு முன்னால் இருந்த‌ சாமிச்சகோதரர் பலச்சரக்குக் கடையிற்கு சென்று சீனி தொட்டு பருப்பு,அரிசி,மற்றும் தாளினைச் சரக்குகள்…என கமலம் தந்த‌ பட்டியல் நீண்டு கொண்டு போறதைப் பார்த்த போது சிறிது கலக்கமும் தொற்றி விட்டது.இவன் ஓரளவிற்கே பணத்தைக் கொண்டு வந்திருந்தான்.கடைக்கு வாரவர்கள் சொல்லுற சாமான்களைச் சேர்த்திருக்கிறது வழமை தான்.கடைசியாக சந்தைக்கு வந்து சாமான்கள் வாங்கி


அக்கினிப்பிரவேசம்

 

 சென்னை சென்ரல் ரயில் நிலையம். ராமுசார், என்றழைக்கப்படும் ராமச்சந்திரன் சென்னைக்கு சில முறை வந்திருந்தாலும், சென்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு முதன்முதலாய் வருகிறார். எண்ணிலாப் பேருக்கு அடையாளம் தந்த சிங்காரச் சென்னையின் கம்பீர அடையாளமாய் நிமர்ந்து நிற்கும் சென்ட்ரல் இரயில் நிலையக் கட்டிடத்தை பார்க்கும், ரசிக்கும், பிரம்மிக்கும் மனநிலையில் இல்லை அவர். ஸ்டேசனில் நுழைந்ததும் – இதுவரை அவர் பார்த்து உணர்ந்திருந்த, இதோ இப்போது வந்து இறங்கிய டவுன்பஸ் வரை அவருடன் தொடர்பில் இருந்த தமிழகத்திற்கு மிக அந்நியமான


அங்கிள் – அப்பா

 

 கடந்த இருமாதங்கள் ஆதித்தன் தனது அழகிய பெண் குழந்தையின் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. ஒரு தகப்பனுக்கு அவனது மகள்தான் இந்த உலகில் மற்ற எந்தக் குழந்தையையும் விட அழகானவள்.ஆதித்தனுக்கும் அவனின் ஒரே ஒரு குழந்தையான லலிதா ஒரு அழகிய குழந்தை. அகிலத்தையும் படைத்த.பார்த்துக் கொண்டிருக்கும் இயற்கையின் தெய்வீகத்தின் பிரதிபலிப்பான களங்கமற்ற புன்சிரிப்பை முகத்திலும் கண்களிலும் பொருத்திக்கொண்ட ஒரு அழகிய பெண்குழந்தைப் பிறப்பு அவள். அவளின் அழகிய கன்னங்களில் முகம் பதித்து முத்தமிடும்போது முற்று முழுதான,அப்பழுக்கற்ற பளிங்குச் சிலையை அவன்


ஒரு காதல் கதை!!

 

 பேசி முடித்து தொலைபேசியை அதன் இடத்தில் வைத்த சந்திராவைப் பார்த்து ‘‘என்னடி ஆபீஸ் கிளம்பணுமா?’’ என்றாள் அவள் அம்மா. அன்று சனிக்கிழமை விடுமுறை நாள். விடுமுறையில் கூட வேலைக்குப் போகணுமா என்பதுதான் அம்மா கேட்க வந்தது. ஆனால், அம்மா எப்போதும் இப்படித்தான் கேட்பாள். “ஆமாம்மா, கொஞ்சம் வேலை…’’ என்றபடி கைப்பையை எடுத்தபடி கிளம்பினாள்.“தலையை வாரி கிளிப்பாவது போட்டுட்டுப் போடி…” என்றாள் அம்மா. அம்மாவுக்காக இல்லையென்றாலும் ஆனந்துக்காகவாவது கண்டிப்பாக தலைவாரிப் போகவேண்டும். இல்லையென்றால் அதை முன்னிட்டு ஒரு ஐந்து


மஹாபலி

 

 சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் முடிவு முறியடித்த கோரக் களை முகத்தில் கூத்தாடியது. போகப் போக, ஒரு காகம் பறந்து வந்து நெற்றியில் உட்கார்ந்து கண்ணைக் கொத்த முயன்றது. பின்னாலேயே ஈக்கூட்டங்களும் எறும்புச் சாரிகளும் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மூக்கிலும்


தப்பு!

 

 கதிர்வேலுவிற்குச் சங்கடமாக இருந்தது. எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. மனதளவில் நிறையவே நினைத்து நொந்தான். அலுவலகம் விட்டு முகம் தொங்கி, வாடி, வதங்கி… வீடு திரும்பினான். மாலாவிற்கு கணவனைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. ஒருநாள் கூட இப்படி சோர்ந்து, சோம்பி, துவண்டு ஆள் வீடு திரும்பியதில்லை. “என்னங்க…?”பதறி துடித்து கதிர்வேல் எதிரில் வந்தாள். இவனுக்கு மனைவியை ஏறெடுத்துப் பார்க்கப் பிடிக்கவில்லை. பேச மனமில்லாமல் தலைகுனிந்து உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தான். மாலாவிற்குப் பதறியது. “உடம்பு சரி இல்லையா..?”சட்டென்று


மணியை ஒரு ‘பலி ஆடு’ ஆக்கிட்டேன்…

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 மணி ஒரு பிரபல ‘எஞ்சினியரிங்க்’ காலேஜில் மூன்றாவது வருட BE பா¢க்ஷயிலே ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ ‘கோர்ஸிலே’ வகுப்பிலே முதாலவது ‘ராங்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணீனான். அதே காலேஜ்லே, அதே ‘கம்ப்யூட்டர் சயன்ஸ் கோர்ஸிலே’ படித்து வந்தார்கள் நளினியும், அவள் இணை பிரியா தோழி மஞ்சுளாவும்.இருவரும் நகமும் சதையும் போல பழகி வந்தார்கள். “நள்,எனக்கு நாளைக்கு பர்த்டே,நான் எண்ணைத் தேய்ச்சுக் குளிச்சிட்டு கோவிலுக்குப் போய் விட்டு வந்து,பட்டுப் பாவாடை தாவணிப் போட்டுக் கிட்டு வரப்


பேய்க் கதைகள்

 

 பேயைப் பற்றி படிப்பதும், அவைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் நமக்கு அலுக்காத விஷயங்கள். முதலில் ஒன்றைத் தெளிவு படுத்திவிடுகிறேன். பேய் என்றால் பெண்கள். பிசாசு என்றால் ஆண்கள். அதனால் எனக்கும் இளம் வயதுப் பேய்களைப் பார்க்க வேண்டும்; அவைகளிடம் நைச்சியமாகப் பேசி அவைகளை காதலிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. ஏனென்றால் பேய்களைக் காதலித்தால் அவைகளிடம் ரகசியமாக அடிக்கடி தாச்சிக்கலாம். தவிர, எனக்கு வேண்டிய இன்னபிற காரியங்களையும் சாதித்துக் கொள்ளலாம். ம்ஹும்… அந்த