கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 18, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

மேரி

 

 வானம் இலவம் பஞ்சுக் கூட்டத்தால் நிறைந்து கிடந்தது. சுற்றிலும் ஆள் அரவமற்ற தனிமையின் சூழலை உணர்ந்தேன். மனம் ஒரு நிலையற்றுத் தாவித்தாவி அலைந்தது. ஏனோ என் நினைவுகள் எங்க ஊர் கடற்கரையை நோக்கி நகர்ந்தது. கொடியில் காயப்போட்ட ஆச்சியின் சேலையைப்போல் பரவைக்கடல் பரந்து விரிந்து உறக்கமற்று என்னைப்போல் கிடந்தது. சிந்தையில் ஏதேதோ நினைவுகள் வந்து மனதை அலைக்களித்தது. கடந்துவிட்ட என் வாழ்க்கையில் வந்துபோன உறவுகளின் நினைவுகள் ஏக்கத்தைச் சுமந்தும், ஒருசில வலிகளைச் சுமந்தும் இதயத்தை வருடிச் சென்றன.


காய்க்காத பூக்கள்

 

 அறிமுகம்: ராஜேஷ் ரேவதி தம்பதிகள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷ் டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்து வருகிறார். இவரது குடும்பம் தென் தமிழகத்தின் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷின் தந்தை மாணிக்கம் அந்த கிராமத்திலேயே பெரும் பணக்காரர். அவர் சொல்வது தான் அங்கு சட்டம். சாதி வெறியில் ஊறிப் போனவர். அவரது மனைவி மீனாட்சி. மீனாட்சியும் மாணிக்கத்திற்கு சளைத்தவர் இல்லை. மிகவும் பிற்போக்கான இந்த குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் ராஜேஷ் சக மனிதர்களை மதிக்கும் பண்புடையவராகவே


மஞ்சள் பட்டி மர்மம்

 

 தொலைக்காட்சியில் முக்கிய செய்தி ஒன்று scroll ஆக ஓடிக் கொண்டிருந்தது, “மஞ்சள்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அங்கீகரிக்கபட்ட கட்சியான மக்கள் முன்னேற்ற முன்னணியின் வேட்பாளர் கந்தசாமி அகால மரணம் அடைந்ததால் ரத்து செய்யப்படுகிறது” , தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் , என தமிழ் நாடு தேர்தல் அலுவலர் அறிவிப்பு . மக்கள் முன்னேற்ற முன்னணியின் வேட்பாளர் கந்தசாமி தேர்தல் பிரச்சாரம் முடிந்து முதல்நாள் இரவு சுமார் 12.00 மணியளவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது தேசிய


அச்சம் தவிர்த்தான்

 

 ரயில்வே கேட்டைக் கடந்து, கிருஷ்ணன்கோவில் கண்மாயின் மேட்டில் ஏறி, வளைந்து சென்ற அந்த மேட்டில் பயணித்து. பின் சரேலென்று இறங்கி, வலது புறம் இருந்த காவல் கோபுரத்துடன் கூடிய கிறித்தவ தேவாலயத்தைக் கடந்து, அத்திகுளம், கிராமத்தின் சாயாக்கடைகள், சைக்கிள் கடைகள், ஊர்ப்பொதுச்சாவடி யாவும் கடந்து, ஒடுங்கிய தார்ச்சாலையின் வலது பக்கம் வண்டியை ஒடித்த போது, ஸ்கூட்டரின் முன்பக்கம் கைப்பிடியுடன் மேலும், கீழுமாய் தடால் தடாலென்று குதித்தது. இந்த வட்டாரத்திலேயே மிகவும் மோசமான சாலை என்று பேரெடுத்தது அத்திகுளத்திலிருந்து


பூத்தலும்… துளிர்த்தலும்…

 

 தனிமை பீடித்திருந்த இந்த இரவில் எங்கள் தெருவில் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு வாசலிலிருந்து எட்டிப் பார்த்தேன். நாலைந்து வீடு தள்ளியிருக்கின்ற தெருமுனை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த குட்டி யானை வாகனத்திலிருந்து ‘தணியாத தாகம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்..’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அநேகமாக அது வானவில் பண்பலை ஒலிபரப்பாக இருக்க வேண்டும். அதில் தான் இரவு பத்தரைக்குப் பிறகு ‘இரவின் மடியில்’ என்ற நிகழ்ச்சியில், இந்த


ஒரு காதலின் கதை

 

 இந்தக் கதை நடக்கிற காலம் டெலிபோன்கள் மட்டுமே இருந்த காலம். பேஜர் அறிமுகமாயிருந்த காலம். அவளுடைய சில கவிதைகள் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன. அவளுக்கு நிறைய கடிதங்கள் வரும். பெரும்பாலான கடிதங்கள், ஒரு பெண் பெயரைப் பார்த்தாலே, பெண் பெயருடன் ஒரு முகவரியைப் பார்த்தாலே வருகிறவை. சில, ‘உங்கள் கவிதை இப்படியிருந்தது அப்படியிருந்தது’ ரகம். சில மிரட்டும் ‘நீ என்ன பெரிய இவளா..? ரதியா? நல்லா எழுத மாட்டியாடி நீ…’ இப்படி. இவை எதிலும் சேராமல், எங்கிருந்து


கணுக்கள்

 

 அம்மாவின் மடி நிறையக் காய், மடி பிதுங்கிற்று. ஆனாலும் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவரைப் பந்தலின் இன்னொரு பக்கத்தில் ஏணியைத் திருப்பிப் போட்டாள். நாங்கள் பந்தலுக்கடியில் விளையாடிக் கொண்டிருந் தோம். நான், அம்பி, பாப்பா எங்கள் தலைக்குமேல் காய் கொத்துக் கொத்தாய்த் தொங்கிற்று. அதுவும் இந்தத் தடவை சரியான காய்ப்பு: தினம் மாற்றி மாற்றி அவரைக்காய் கறி, அவரைக்கா புளிக்கூட்டு, அவரைக்காய் பொரித்த கூட்டு, அவரைக்காய் பருப்பு உசலி அப்பா உள்ளேயிருந்து வந்தார், வழக்கப்படி வலது கையால் இடது


இருட்டிலே விளையாடுங்க…

 

 இரவு மணி 10 .10. ‘ பதினொன்றாம் வகுப்புப் படிப்பு. வயசுப் பிள்ளை. ஆளைக் காணோம்.! ‘ – செந்தமிழ்செல்வனுக்குள் திடீரென்று கலக்கம் வந்தது. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன். வீண் கட்டுப்பாடுகளால் ஆர்வத்தைக் கெடுக்கக் கூடாது. அது அவன் முன்னேற்றத்தைப் பாதிக்கும் ! – என்று நினைத்து விட்டது தப்போ..? – அவனுக்குள் யோசனை ஓடியது. ‘ பிள்ளை இவ்வளவு நேரம் வீடு வராமல்… எங்கு, என்ன செய்கிறான்..? ” மனசுக்குள் கேள்வி எழும்ப…


நான் துரோகம் பண்ணலே…

 

 “அத்யா நோ தேவ சவித: ப்ரஜாவத் ஸாவீ: ஸௌபகம் பரா துஷ்வப்னியம் ஸுவ விஸ்வானி தேவ சவித: துரிதானி ப்ராஸுவ யத் பத்ரம் தன்மே ஆஸுவா” என்று மந்திரத்தைச் சொல்லி பஞ்ச பாத்திர பாத்திரத்தில் மீதி இருந்து ஜலத்தை கையில் விட்டு,தான் உட்கார்ந்திருந்த இடத்தில் தெளித்து விட்டு, பறகு தன் மோதிர விரலை அந்த ஜலத்தைத் தொட்டு எடுத்து,தன் சிரஸில் இட்டுக் கொண்டார் சாம்பசிவ ஐயர். மீதி ஜலத்தை காவோ¢யில் விட்டு விட்டு,படித்துறையை விட்டு மெல்ல ஒவ்வொறு


மறுபடியும்…

 

 “ப்ளீஸ் டாக்டர், நான் சாகிறதுக்கு முன்னால ஒரேயொரு தடவை என் மனைவியையும், மகளையும் பார்த்துப் பேசிவிட வேண்டும்… எனக்கு எப்படியாவது ஒரு வீடியோ கால் ஏற்பாடு பண்ணிக் கொடுங்கள் டாக்டர்.” “கண்டிப்பா ராகவன்… ஆனா கொரோனா வைரஸால் நீங்க சாகக்கூடாது என்பதற்காகத்தான் நாங்க இவ்வளவு தூரம் போராடிக்கிட்டு இருக்கோம். நீங்க சீக்கிரமே குணமடைஞ்சு வீடு திரும்புவீங்க ராகவன்…” அந்த டாக்டர் உயரமாக வாட்டசாட்டமாக இருந்தார். உடம்பு முழுவதையும் மூடியிருந்தாலும், அவரது கண்களில் ஏராளமான கருணை வழிந்தது. ரொம்ப