கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 14, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

மனைமோகம்

 

 மென்வெய்யிலும், காற்றில் சீதளமும் மிதந்திருக்கும் அருமையான மாலை. வாங்கிவைத்திருக்கும் பூவிதைகளையும் பூக்கன்றுகளையும், வீட்டின் பின்கோடியிலமைந்த தோட்டத்தில், நடலாமாவென்று வர்ஷி யோசித்துக்கொண்டிருந்தாள். Bremen இல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் சொந்தமாக வாங்கியவீடு அது. யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவந்த மல்லிக்கோப்பியில் ஒன்றைப் போட்டுக்குடித்துவிட்டு தோட்டத்துக்குப் போகலாமென்றிருக்கையில் தொலைபேசி அழைத்தது. அழைப்பு வந்த நேரம், இடத்தைவைத்தே அது அகிலாதான் என்று ஊகித்துக்கொண்டதும் வர்ஷிக்குச் சலிப்பாக இருந்தது, அது தொடர்ந்து அனுங்கி எரிச்சலூட்டவும், அலுத்துக்கொண்டுபோய் ஒலிவாங்கியைத் தூக்கினாள். ‘ இவ்வளவு நேரமாய் அடிக்கவிட்டன்………


நாய்க்குட்டிக்கு பிடிசோறு

 

 இரவு 11 மணி.. ஏனோ தூக்கம் வரவில்லை.., உடல் வெளிக்காட்டும் அளவிற்கு மனம் நிதானமாக இல்லை., உள்மனதில் விரக்த்தி, கற்பனைகள், தைரியம், நம்பிக்கை, பாசாங்கு, பயம் என பலவிதமாய் கலக்கி குழப்புவதால் எதைப்பற்றியும் கனிக்க இயலாமலேயே அழுத்தமான வெறுமை கடந்துக்கொண்டு இருக்கிறது.. வீட்டின் வராண்டாவில் அந்த நாய்க்குட்டியின் முனகலும், புலம்பலும், அழுகையும், ஓலமும், அச்சமும் என நிமிடத்திற்கு ஒருமுறை மாறிமாறி ஒலிக்கும் ஓசையால் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கோபமும், எல்லைகடந்த எரிச்சலும், உச்சந்தலையில் ஊசியை ஏற்றிக்கொண்டு இருந்தது..


இரு கடிதங்கள்

 

 அவன் பயப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றும் பயந்து கொண்டே இருந்தான் அதனால் இன்றும் பயப்படுகிறான். அவனிற்கு பயம் மேசை மீதுள்ள அந்த இரண்டு கவர்களலாலும், காரணம், அந்த இரண்டு கவர்களின் கீழ் உள்ள காகிதங்கள் கூறவிருக்கும் விடயங்கள் யாவும் அவன் அறிந்ததே, ஒன்று அவனை கையெழுத்து போட விடாமல் இருப்பதற்காக, மற்றையது அதற்கு நேர் எதிர், கையெழுத்திட வைப்பதற்கு. அவனிடம் இருந்த சகல தைரியத்தையும் ஒன்று திரட்டி அவற்றை வெளியெடுத்து வாசித்தான், 1வதுமடல்: அப்பா, நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்


தவப்புதல்வன்

 

 மொபைல் ஒலித்தது, யார் இந்த நடு இரவில் போன் செய்கிறார்கள் என எண்ணியபடி போன் -ஐ எடுத்தான் நரேன். எதிர்முனையில்இந்தியாவிலிருந்து அப்பா பரமேஸ்வரன், என்னப்பா இந்த நேரத்தில் போன் செய்யுறீங்க? என கேட்டான் அப்பா பரமேஸ்வரன், பதட்டத்துடன், அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக், ஆஸ்பத்திரியில் சேத்துருக்கேன், நிலைமை கிரிட்டிக்கலா இருக்கு, 72 hours தாண்டனுமுன்னு டாக்டர்சொல்லிட்டார்,உனக்கு விஷயம் சொல்லணுமேனு போன் பண்ணினேன் என்றார். அதிர்ச்சியடைந்த நரேன், அம்மாக்கு இப்போ எப்படி இருக்குப்பா? என கேட்டான், icu -லதான் வச்சிருக்காங்க,


முத்தா

 

 ஶ்ரீவைணவ சம்பிரதாயத்தில், ‘திருநாடு அலங்கரித்தார் ‘என்பதும், ‘வைகுண்ட பிராப்தி அடைந்தார் ‘என்பதும், ஆசார்யன் திருவடி அடைந்தார் ‘என்பதும் ஒரே அர்த்தம் தரும் பல சொற்றொடர்கள். இயற்கை எய்தினார் என்று பகுத்தறிவுவாதிகளால் சொல்லப்படும். காலமாகி விட்டார் என்றும் சொல்லப்படுவதுண்டு. இறந்து விட்டார் என்பது பொதுவான வார்த்தைப் பிரயோகம். முத்தா ஆசார்யன் திருவடி அடைந்தார். முதிர்ந்த வயது பேரன், பேத்திகளைப் பார்த்து விட்ட பூரண ஆயுளோடு அவர் திருநாடு அலங்கரித்தார். இனி அவர் செய்து முடிக்க இங்கு பூமியில் கடமைகளோ,