கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 8, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஒவ்வொரு கணத்திலும் வாழ்வது

 

 இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல. பிறக்கும் மனிதர்கள் எல்லோரும் இறந்துதான் ஆக வேண்டும். மரணங்கள் இயல்பாகவும் ஏற்படலாம். யாரும் எதிர்பாராத நேரத்தில் சடுதியாகவும் ஏற்படலாம். இதில் மிகப்பெரிய துன்பம் என்னவென்றால் நாம் மனதில் ஆழமாக அன்பு செலுத்துபவர்களை மரணம் எதிர்பார்க்காத நேரத்தில் கணப்பொழுதில் பறித்துக் கொள்வதுதான். அப்படி ஒரு சம்பவம்தான் திவ்யாவின் அண்ணன் ஜீவாவின் அன்பு மனைவி ஆனந்திக்கு நடந்தது. ஒரு பாவமும் அறியாத அவளை பாதையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார்


குப்பை

 

 “ம்ம்மா…, குப்பேய்…!” அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய குரல், இரண்டு பக்கமும் அப்பார்ட்மென்ட் கட்டடங்களும், மாடி வீடுகளும் நெருக்கியடித்து நின்றிருந்த அந்த வீதியின் தொடக்கத்திலிருந்து கேட்டது. குரலின் தொடர்ச்சியாக வீதிக்குள் திரும்பி கொண்டே, நுழைந்தது இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, அடர்த்தியான பச்சை நிற குப்பை வண்டி. வண்டியின் உள்ளே இரண்டு பெரிய பிளாஸ்டிக் ட்ரம்கள். பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில், வெயிலில் வெளுத்துப் போய் கிட்டத்தட்ட பச்சையாகவும், சிவப்பாகவும் இருந்தன. வண்டியின் ஒரப்பகுதிகள், ட்ரம்களில் மாநகராட்சியின் பெயர், வெள்ளை பெயிண்ட்டால்


நான் – அவள் – காதல்

 

 நான் – (உண்மையில் நான்) என்னுடைய கல்யாணம், நான் காதலித்த பெண்ணோடு இல்லாமல், பெற்றவர்கள் பார்த்து நிச்சயித்த பெண்ணோடு நடந்தது. ஏன் அவள் என்ன ஆனாள்..? அவள் நேசித்து என்னுடன் பழகி இருந்தால், ஒரு வேளை என் கல்யாணம் காதல் கல்யாணமாக இருந்திருக்கும். நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒருதலை காதல் கூட பெற்றவர்களால் நிறைவேறி இருக்கிறது. என் காதல் அவளது குடும்பத்தினரால் அழிக்கப்பட்டு விட்டது. நடுநிலைப் பள்ளியில் படித்து முடித்து மேல்நிலைப் பள்ளிக்கு மாறும் போது தான் எனக்குள்


பேனா

 

 நேற்று இரவு நல்ல மழை. விறைகால் நெல்வயலில் நாற்றுகளை கலைத்து நட ஆள்விட்டு உள்ளதாக கௌரிசாமி அண்ணன் போன் செய்தார். வழக்கமாக அப்பா அம்மா இருவரும் வயலுக்கு செல்வதுதான் நடமுறை. அப்பாவும் அம்மாவும் சொந்தகாரர்கள் திருமணத்திற்கு சென்று உள்ளதால், நான் நாத்துநடும் சனங்களுக்கு கூலிக்கொடுக்க சென்றேன். காவிரிநீரில் கொள்ளிட பாசனத்தில் இருபோகம் விளைந்த நஞ்சைவயல்கள் இன்று விறைகால் ஆகிவிட்டது. நான் மூன்றாம்வகுப்பு படிக்கும்போது ஐப்பசி மாதம் முப்பதுநாளும் மழைபெய்து குளம்போல இந்த வயல்கள் இருந்ததைப் பார்த்து இருக்கிறேன்.


அன்புள்ள காதலிக்கு!

 

 காலை 9 மணி 22 நிமிடம். நாள்: 15.11.1999. ‘லவ் லட்டர்!’- ஐ கொடுக்க, அந்தச்சிறுவன் சென்று, இந்த நிமிடத்துடன், பன்னிரெண்டு நிமிடமும் முடிந்து விட்டது! அவன் வயதுக்கு ஒரே ஓட்டமாக ஓடிப்போய், ஓடிவந்தால், ஐந்தாறு நிமிடங்களே கூட தேவைப்படாது! அப்படியிருக்க, அவன் இன்னும் வந்து சேரவில்லை! நான் மிகுந்த பரபரப்புடன், பஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தேன். அவசரத்தில், அந்தப் பொடியனின் பெயரைக்கூட கேட்டுக்கொள்ளாமல், அவன் அணிந்திருந்த பச்சை நிற சட்டையை அடையாளம் வைத்துக்கொண்டு, அசட்டுத்தனமாக லட்டரை கொடுத்து


செண்பகத்தாயின் அழுகை

 

 செண்பகத்தாய் வீட்டினுள் சுவரில் சாய்ந்த வண்ணம் கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகாமையில் சுவரில் சாய்த்து நிறுத்தியிருந்த போட்டோவுக்கு போடப்பட்டிருந்த மாலை வாடிப்போயிருந்தது. போட்டோவில் இருக்கும் செண்பகத்தாயின் கணவர் நாச்சிமுத்து நான்கு நாட்களுக்கும் முன்பாக மாரடைப்பால் மரணமடைந்திருந்தார். நாச்சிமுத்து இந்திய இராணுவத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றதும் சும்மாயிராமல் பதினைந்து வருட காலமாக பக்கத்து ஊரிலிருக்கும் பெரிய நூல் மில் ஒன்றிற்கு வாட்ச்மேனாக சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தார். மூன்று ஷிப்டுகள் என்று மாற்றி மாற்றி


பூர்வா

 

 இப்பொழுது அவள் என் கனவில் வந்தாள். ஏளனம் செய்யும் அவள் புன்னகையுடன் என் பின்னால் வந்து என் பேரை என் காதண்டை சொல்லி, என் தோளைத் தொட்ட மாதிரி இருந்தது. ‘பூர்வா!’ என்று அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன். என்னைச் சுற்றி இருட்டுத்தான். கண்ணைத் தேய்த்துக் கொண்டேன். கண்கள் கண்ணிரில் நனைந்திருந்தன. தூக்கத்திலும் என்னையும் அறியாமல் நான் அழுதிருக்கிறேன். ‘டாங்’– எங்கேயோ மணி ஒன்று அடித்தது. இனி விடியும் வரையில் தூக்கம் எனக்கு வரப் போவதில்லை. திரும்பத் திரும்ப


யாருப்பா அது? – ஒரு பக்க கதை

 

 ‘ பிரபல சினிமா தயாரிப்பாளர் சின்னான் குத்திக் கொலை ! ‘ தினசரிகளை புரட்டிய சினிமா வட்டாரமே அதிர்ந்து. ரொம்பத் தங்கமான ஆள். முதல் படத்திலேயே சூப்பர், டூப்பர் கொடுத்து பணத்தை ஒன்றுக்குப் பத்தாக அள்ளி குறுகிய காலத்திலேயே பெரிய தாயாரிப்பாளராக வளர்ந்தவர். அவருக்கு எதிரி..! – நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை,. ” கொலை செய்தவன் யாராய் இருக்கும்….? ” – ஊட்டியில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்த பேர் சொல்லும் பெரிய இயக்குனர்களில் ஒருவனான கணேஷ்


என்னாலே முடியும் தம்பி…

 

 ராஜர் இங்கிலாந்தில் ஒரு பல்களைக் கழகத்தில் படித்து விட்டு MBA பட்டம் வாங்கினான். ’கான்வகேஷன்’முடிந்து தன் கையிலே ‘டிகி¡£’வந்ததும்,பல கம்பனிக்கு களுகு எல்லாம் போய் வேலைத் தேடிவந்தான்.அவன் போன எல்லா கம்பனிகளும் ராஜரைப் பார்த்து” நீ இப்போ தான் MBA பட்டம் வாங்கி இருக்கே,உனக்கு இன்னும் நிறைய ‘சர்வீஸ்’ ஆனாத் தான் அதிக சம்பளம் தர முடியும்” என்று சொல்லி விட்டு கம்மியான சம்பளத்தைத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் ராஜர் தனக்குத் திறமை நிறைய இருக்கு என்று


மர்டர் க்ரைம்

 

 *** ஆசிரியர் திரு.எஸ்.கண்ணன் அவர்களது 400வது சிறுகதை. சிறுகதைகள் தளத்தின் சார்பாக வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். *** வெள்ளிக்கிழமை. பெங்களூர் கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிந்தபோது, போன் வந்தது. “ஸார் என்னோட பெயர் ராஜேஷ். இங்க ஒன்பதாவது க்ராஸில் பன்னிரண்டாம் நம்பர் வீட்டின் மாடியில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள். உடனே வாங்க ஸார்… ப்ளீஸ்” “நீங்க எங்க இருந்து பேசறீங்க?” “நான் பக்கத்துவீடு. நம்பர்