கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 5, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

வீம்பு

 

 ஞாயிறு மாலை ஆறு மணி. பாலவாக்கம் கடற்கரையில் பாஸ்கர் தன் வெள்ளைநிற பென்ஸ் காரின் ஏஸியை மெலிதாக இயங்கச் செய்துவிட்டு காயத்ரிக்காக காரினுள் காத்திருந்தான். பாஸ்கரும் காயத்ரியும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலிக்கின்றனர். அடுத்த வருட ஆரம்பத்தில் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கின்றனர். அவர்களின் காதல் திருமணத்தில் பிரச்சினை எதுவும் ஏற்படாது என திடமாக நம்புகின்றனர். காரணம் இருவரும் ஒரே ஜாதி, மதம்; கல்வித் தகுதிகள்; பணம். பாஸ்கர் சென்னையின் ஒரு புகழ் பெற்ற பெரிய ஹாஸ்பிடலில்


ராஜாராம் ஷெட்

 

 ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு இரண்டு வாசல்கள் உண்டு. கிழக்குப் பார்த்த வாயிலில் உயர்ந்த இரும்பு கேட். அதன் நீட்சி இரட்டை வரிசையில் உள்ள கல் மண்டபமும், அதில் உள்ள கடைகளும். ஆண்டாள் கோவிலுக்குத் தென்புறம் உள்ள இரும்பு கேட், காலையில் திறக்கப்பட்ட உடனே வெளியே வெளிச்சத்தில் தெரிவது தெற்கு மாட வீதி. ஸ்வாமி புறப்பாட்டின் போது, ஆண்டாள்–ரெங்கமன்னார் முதலில் கால் பதிப்பது அந்த தெற்கு மாட வீதியில் தான். தென்புற வாயிலில் இருந்து பார்த்தால், நேர், எதிராகத்


வலி

 

 சரண்யாவிற்கு சீமந்தம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிறது. அவள் சீமந்திற்காக வந்த அவளின் தங்கை அக்காவிற்கு ஒத்தாசையாக சரண்யா வீட்டில் தங்கியிருந்தாள். சரண்யாவிற்கு இது இரண்டாம் பிரசவம். ஆதலால் சீமந்தம் முடிந்து அம்மா வீட்டிற்கு செல்லும் சடங்கு எதுவும் கிடையாது. சொல்லபோனால் இரண்டாவது குழந்தைக்கு சீமந்த சடங்கே கிடையாது என்று தான் அவள் தாய் கூறினாள். ஆனாலும் தனது ஆசைக்காக சரண்யா அவள் கணவனிடம் தனக்கு சீமந்தம் நடத்த கேட்டதால் அவனும் அவளின் ஆசைக்காக அவன் செலவிலேயே


வானதி

 

 “வாடாமலர்” பத்திரிகையை மேற்கொண்டு நடத்த முடியவில்லை; முன்போல் என்னால் இயங்க முடியாததும் ஒரு காரணம்… உன்னால் இங்கு உடனே வர முடிந்தால், ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லாவிடில், விற்றுவிடலாம் என்று நினைக்கிறேன்.” – அப்பாவின் கடிதம், கனகாவை உறைய வைத்திருந்தது. அப்பாவிற்கு, அம்மா ஒரு கண் என்றால், அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வந்த வாடாமலர் மாத இதழ் மற்றொரு கண்ணாக இருந்தது. நாற்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த வாடாமலர், அம்மா


அவள், அது, நான்!

 

 அலுவலகம் முடிந்து நான் வீட்டிற்குள் வந்தவுடனேயே, எனது பார்வையில் உடனடியாக பட்டுவிடும் வகையில், என்னுடைய மேஜையின் மீது தயாராக வைக்கப்பட்டிருந்த, ‘சவாலை’ சுமந்த இந்த தபாலை பரபரப்பாக வாசித்தேன். ‘எனது அண்ணன் பெரிய கதாசிரியர்! தெரியுமா?’ என்று என்னிடம், அடிக்கடி அலட்டிக்கொண்டேயிருக்கும், எனது ஆருயிர் தோழி அமுதாவின், அண்ணனும்… கலகலப்பு, உற்சாகம், சுறுசுறுப்பு, ஆசை! இவைகளை, ‘வீசை என்ன விலை?’ எனறு கேட்டுக் கொண்டிருப்பவரும்… விளக்கெண்ணெய் குடித்ததுப் போலவே, எப்பொழுதும் தனது முகத்தை வைத்துக் கொண்டிருப்பவரும்… உங்களது


கடிதம்

 

 சுந்தா! சுந்தா! குளியலறையிலிருந்து சரஸ்வதியம்மாள் கத்துகிறாள். எவ்வளவு நேரமாகத்தான் கத்துவது. தொண்டையும் வலிக்கிறது. இந்த சின்ன பிசாசு எங்கே பொய்ட்டுது? மனுஷன்ட உசுறு போவுது’ மனதிற்குள் வெறுப்பும் கசப்புமாகச் சொல்லிக்கொண்ட சரஸ்வதியம்மாள் “அடியே! நாசமா போறவளே! என்னடி செய்யுராய்? அந்த புது டவுல எடுத்துக் கொண்டு வா…” சர்ப்பத்தின் சீற்றமாக குரல் பறக்கிறது. சுந்தாவின் சந்தடி இல்லை. அந்த விசாலமான பங்களாவின் மூலை முடுக்கெல்லாம் புயலென சென்ற சரஸ்வதியம்மாளின் அலறல், எதிரொலியாகத் திரும்பியதே தவிர, சுந்தாவின் பதில்


சிந்துஜா

 

 சார்ஜரில் போட்ட கைபேசியை எடுத்துப் பார்த்ததும் அய்யோ என்றிருந்தது. 100க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் மெசேஜஸ் குவிந்துகிடந்தன. புது குரூப் ஒன்றில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். எவன் சேர்த்தான் என்றும் தெரியவில்லை, என்ன குரூப் அது என்றும் தெரியவில்லை. குரூப் பெயர் ‘தொலைந்த சிறகுக’ளாம். கண்றாவிகளை எழுதி கவிதைகளென்று சொல்லிக் கொள்வதே முக்கால்வாசிப் பேருக்கு இப்போது வழக்கமாகிப்போயிற்று. 2013ல் இளங்கலை முடித்தவர்களுக்கான ரீயூனியன் குரூப். முக்கால்வாசி பெயர்களும் முகங்களும் மறந்துபோனதால் ஆர்வமாக ஒவ்வொரு ஹாய் ஹலோவின் ப்ரொஃபைல் படத்தையும் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது


வேணாம் பதினாறு..!

 

 வீட்டில் தன்னந்தனியாய் படுத்தப் படுக்கையில் இருக்கும் அன்னபூரணியைப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது சுமதிக்கு. ‘ எப்படி நாறுந்தோலுமாய்ப் போய்விட்டாள் அம்மா..? !! ‘ – நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இதே ஊரில் இரண்டு அண்ணன்கள் … மனைவி , மக்களுடன் நல்ல வசதியுடன் சந்தோசமாக இருக்கின்றார்கள். ஒன்று, இரண்டு என்று.. அடுத்தடுத்து அவர்களுக்குத் திருமணம் முடிந்ததுமே…… வந்தவள்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு தனிக்குடித்தனம் போய் விட்டார்கள். அருகிலிருக்கும் அவர்கள் வந்து பெற்றத் தாயைப் பார்க்காமல்…


எப்படி ஒட்டகங்களை பிரிச்சுக்கறது…

 

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 ரணதீர் ராணா இருந்த கிராமதிற்கு ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தான் ரண தீர் ராணாவின் தம்பி பலராம் ராணா. ஒரு வழிப் போக்கன் மூலமாக தன்னுடைய அண்ணா ரணதீர் ராணா இறந்துப் போன சமா ச்சாரம் கேட்டான். உடனே தன் ஒட்டகத்தில் ஏறி தன் அண்ணா கிராமத்துக்கு வந்தான். ஒரு ஆல மரத்தின் கீழே தலை மேலே கையை வைத்துக் கொண்டு,கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்துக்


ஆத்திரம்

 

 இது தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் 1940 களில் நடந்த கதை. அந்தக் கிராமத்தில் மாரிச்சாமி ஒரு பெரிய பணக்காரன். மச்சுவீடு கட்டி அதில் ஆடம்பரமாகக் குடியிருந்தான். வீட்டின் தாழ்வாரத்தில் சாம்பல் நிறத்தில் ஒரு பெரிய ராஜபாளையம் வேட்டை நாய் கட்டி வைத்திருந்தான். அது மிகச் சிறந்த வேட்டை நாய். பார்க்கவே மிக உயரமாக, ஒல்லியாக முரட்டுத் தோற்றத்தில் இருக்கும். அது மாரிச்சாமியின் மீது உயிரையே வைத்திருந்தது. அதை மாரிச்சாமி வேட்டைக்காக அடிக்கடி காட்டுக்குள் கூட்டிச்சென்று உபயோகப் படுத்தி