கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 3, 2020

13 கதைகள் கிடைத்துள்ளன.

புதிய வீடு

 

 “என்ன பளமை அடிச்சுக்கிட்டே இருக்கியே; நாளைக்கு ஆடிப் பதினெட்டு; கொமரீசுபரரை மறந்துட்தியா, புள்ளே? அரிசி, பருப்பு, காய் எல்லாம் வச்சிருக்கியா?” என்று கேட்டான் மாரப்பக் கவுண்டன். “இன்னிக்குத்தான் புதுமை பேசறியே. எல்லாத்தையும் பாக்குக் கடிக்கிற நேரத்திலே சேத்துடமாட்டேனா?” என்று பெருமிதத்துடன் கூறினாள் பழனியாயி. வருஷத்துக்கு ஒரு முறை அவர்கள் காவேரிக்கு நீராடச் செல்வார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அவர்கள். காவிரியாறு அவர்கள் ஊரிலிருந்து இருபத்திரண்டு மெயில் தூரத்தில் இருக்கிறது. மோகனூர் என்ற ஊருக்குப் போய், அங்குள்ள காவிரியில்


திருட்டுக் கை

 

 வழக்கம்போல அன்று தங்கவேலன் தன் எசமானர் குழந்தைகளைப் பக்கத்துத் தெருவில் இருந்த பள்ளிக் கூடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்விட்டான். சரியாகப் பத்து மணிக்கு அவன் நாள்தோறும் சாமிநாத முதலியாருடைய- அவர்தாம் தங்கவேலனுடைய எசமானர் – அவருடைய ஏழு வயசுப் பையனையும் அவன் தங்கையையும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுவந்து விட்டுப் போவான். அடுத்த தெருவுக்குப் போகக் கார் எதற்கு என்று குழந்தையைத் தங்கவேலனுடன் அனுப்பினார்கள். அன்றும் அப்படிப் போனவன் ஒரு புதிய அநுபவத்துக்கு உள்ளானான். அவனுடைய பருவம் அன்று தலை காட்டியது.


பெண் உரிமை

 

 “கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?” “இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை.” “மனிதர்கள் தினமுந்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக விடுமுறை விட்டுக்கொண்டே இருந்தால், இருக்கிறவர்கள் படித்து முன்னுக்கு வரவேண்டாமா?- இந்தக் கிழங்கு வேண்டாம் வேண்டாம் என்று முட்டிக் கொண்டேன். கேட்கிறாரா? கழற் கோடி கழற்கோடியாக எதையோ வாங்கிக்கொண்டு வந்து உருளைக் கிழங்கு


ஜடை பில்லை

 

 பொழுது போகவில்லை யென்று என் பெட்டியை ஒழித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியில் ஒடிந்த நகைகளும் தங்கக் காசுகளும் கிடந்தன. அப்போதுதான் அந்த ஜடைபில்லையைக் கண்டேன். அதை எங்கே வைத்திருந்தேனோ என்று யோசித்துக்கொண்டிருந்தாலும், இந்தப் பெட்டியை மேலே இருந்து இறக்கிப் பார்க்கச் சோம்பல் இடங் கொடுக்கவில்லை. இப்போதுதான் ஒழிந்தது. அவன் – பிள்ளையாண்டான் – காலேஜுக்குப் போயிருந்தான். அவர் எங்கேயோ வியாபார விஷயமாக வெளியூர் போயிருந்தார். இந்த நேரத்தில் வழக்கமாக வந்து பேசிக்கொண்டிருக்கும் சொக்கநாயகி இன்று என்னவோ வரவில்லை. அவர்களுக்கும்


குளிர்ச்சி

 

 “ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய்? இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?” என்றான் மாணிக்கம். அழகு சிரித்தபடியே உள்ளே விரைந்தாள். “என்ன சிரிக்கிறாய்? ஏழாய் விட்டது. இதுவரையிலுமா வேலை இருந்தது.” “இல்லை, அப்பா, எனக்குக் கூலி கொடுக்கும் மேஸ்திரி, தனியே பேசவேண்டும் என்றார். நான் செய்த வேலைக்காக இஞ்சினீர் ஐயர் இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துத் தரச்சொன்னாராம்.” “உனக்கு மட்டுமா? வேறு பெண்களுக்கும் உண்டா?” “மற்றவர்களுக்கு இல்லையாம். நான்தான் ஓர் ஆண் பிள்ளை அளவு


உள்ளத்தில் முள்

 

 நவராத்திரி அணுகிக்கொண்டிருந்தது. அவரவர்கள் வீட்டில் புதிய புதிய பொம்மைகளை வாங்கி வாங்கிச் சேர்த்தார்கள் பெண்மணிகள். குழந்தைகளுக்குத்தான் எத்தனை குதூகலம்! நாளுக்கு ஒரு கோலம் புனைந்துகொண்டு வீடு வீடாகப் புகுந்து அழைத்து வருவதற்கு அவர்கள் தயாரானார்கள். இந்த ஆண்டு விசுவநாத ஆசாரியாருக்கு வியாபாரம் அதிகம். அவர் முன்பே பல மூர்த்திகளைச் செய்து வைத்திருக்கிறார். வெறும் மண் பொம்மையா அவை? கருங் காலியிலும் சந்தன மரத்திலும் செய்த தெய்வங்கள்! அவரிடம் வாங்கின உருவங்களிற் பல, அஷ்டோத்தரமும் சகஸ்ர நாமங்களுமாகப் பெற்றுக்


கொள்ளையோ கொள்ளை

 

 காட்டுக்கோட்டை ராஜாங்கம் சின்னதானாலும் கெடுபிடிக்குக் குறைவு இல்லை. ராஜா, மந்திரி, சேனாபதி சட்டசபை எல்லாம் வக்கணையாகவே இருந்தன. சேனாபதி போலீஸ்காரர்களுக்குத் தலைவர்; சட்டசபை என்பது நகர சபையைப் போலிருக்கும். ஆனாலும் அதற்குச் சட்டசபை என்று பெயர். அதில் காட்டுக்கோட்டை ராஜ்யத்துக்குரிய சட்டங்களை இயற்றுவார்கள். ஆனால் எல்லாச் சட்டங்களுக்கும் அரசருடைய உடம்பாடு வேண்டும். அரசர் தனியே ஒரு சட்டம் செய்யவேண்டுமென்று தாமாகவே விரும்பினால் மூச்சுப் பேச்சு இல்லாமல் அத்தனை பேரும் கையைத் தூக்கி அந்தச் சட்டத்தை நிறைவேற்றிவிடவேண்டும். இல்லையானால்


அவள் குறை

 

 ‘உங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினால்கூட இவ்வளவு சிரத்தை இருக்காது போல் இருக்கிறது. விழுந்து விழுந்து செய்கிறீர்களே!’ என்று வேடிக்கையாகப் பேசினாள் ராஜாராமின் மனைவி. ‘ஆமாம். பாவம்! நல்ல பிள்ளை. நம்மை வந்து அண்டினான். குடியும் குடித்தனமுமாக இருப்பதைப் பார்த்துச் சந்தோஷப் படலாமே என்றுதான். நாய்க்குட்டி மாதிரி உழைக்கிறான். இந்தக் காலத்தில் எசமான விசு வாசத்தோடு வேலை செய்கிறவன் எவன் இருக்கிறான்?’ என்றார் ராஜாராமன். வேலுவுக்கு கோடம்பாக்கத்திலே கல்யாணம். அது நன்றாக முடியவேண்டுமே என்று அவருக்குக் கவலை. சென்னையில்


உள்ளும் புறமும்

 

 கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல் ஜனங்கள் இந்த கூட்டத்தில் கூடினார்கள்; அதில் வேடிக்கை என்னவென்றால், மார்கழி பஜனையில் சேர்ந்து கொண்டு தாளம் போட்டவர்களே இந்தக் கூட்டத்திலும் சேர்ந்து கைதட்டினார்கள். அதைக் கண்டு க.ம.க-க்காரர்கள்; கடவுளையே வென்றுவிட்டதாகப் பெருமைப்பட்டார்கள். வெளிப்படையாகவும் பேசினார்கள். முருகேசன் இந்தக் கட்சியில் சேர்ந்துகொண்டான். அதற்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக் கூற முடியாது. காற்றடித்த வாக்கிலே சாயும் மரம்


குழலின் குரல்

 

 மலையைச் சார்ந்த சிறிய ஊர் அது. அங்கே இயற்கைத் தேவி தன் முழு எழிலோடு வீற்றிருந்தாள். மலையினின்றும் வீழும் அருவி எப்போதும் சலசல வென்று ஒலித் துக்கொண்டே இருக்கும். மலர், காய், கனி ஆகியவற்றுக்குத் குறைவே இல்லை. தினை, சாமை, வரகு முதலிய தானியங்களும் நன்கு விளைந்தன. இந்த அழகிய சூழ்நிலையில் அவர்களுடைய காதல் வளர்ந்தது. இளமையும் எழிலும் நிறைந்த இணையாக இருந்தார்கள்: அவன் பெயர் முருகன்; அவள் பெயர் மெல்லியல். அவன் அவளைக் கொஞ்சலாக மெல்லி