Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2020

100 கதைகள் கிடைத்துள்ளன.

அழகான பெண்டாட்டி

 

 (இதற்கு முந்தைய ‘நாச்சியப்பனின் உரை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). “சொன்னா சொல்லிட்டுப் போறானுங்க! எதையாவது சொல்லத்தான் செய்வானுங்க! ஒனக்கு ஹாஸ்பிடல் செலவு செய்து கட்டிக் குடுக்கப்போறது இவனுங்களா நான் கேக்கேன். உன் அத்தை, அதான் என் வீட்டுக்காரி, அவ கூடத்தான் கண்றாவி பிடிச்சவ! பாக்க குரங்கு குசாலா மாதிரி இருக்கா! அதுவா விஷயம்? வாழ்க்கையில அவ எப்படி இருக்கா… என் பேச்சுக்கு என்னிக்காச்சும் மறு பேச்சு பேசியிருப்பாளா? மூச்சுக் காட்ட மாட்டா மாப்ளே!


வசுந்தரா!

 

 அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத் தொடங்கினாள். இரவு உணவைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை நேரத்தோடு படுக்க வைத்தாள். தானும் கணவரோடமர்ந்து உரையாடிக்கொண்டே உணவை மென்று சுவைத்தாள். ஆனாலும் உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. எப்படி எங்கே தொடங்குவது என்ற கேள்விதான் அவளுக்குள் எழுந்துகொண்டே இருந்தது. எப்படியாவது கேட்டுவிட வேண்டும். “என் நண்பி சுபாவைத் தெரியும்தானே உங்களுக்கு, அவளும் நானும் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவதாக முடிவு செய்திருக்கிறோம்.


மனோபாவம்

 

 பால்வண்ணம் பிள்ளையைப் பார்த்தவர்கள் உறுதியாக எண்ணினார்கள். அவர் பிழைத்து எழுவது கஷ்டம் என்று. டாக்டருக்கு நிச்சயமாகத் தெரிந்துதானிருந்தது. பிள்ளையின் வியாதி குணமாவது அரிது என்பது. இருப்பினும் அவர் தமது கடமையை ஒழுங்காகச் செய்யத்தானே வேண்டும்? ஆகவே டாக்டர், பிள்ளையை அடிக்கடி பரிசோதித்தார்; வேளை தவறாமல் குறிப்பு எழுதி வைத்தார். மருந்து கொடுத்தார். முறைப்படி “ஊசி போட்டு” நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டவும் தவறவில்லை அவர். வாழ்க்கையில் “ஸ்ரீமதி பால்வண்ணம் பிள்ளை” என்ற அந்தஸ்தைப் பெற்று அவரோடு கூட வாழ்ந்து


பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்

 

 “அம்மா… அம்மா… ” என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன். “என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு” என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி. “எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா…” என்றான் மெல்ல. “யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?” “இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா…” “சரி.. சரி.. போகலாம் அதுக்கு முன்னாடி கடையில போய் மளிகை சாமான் லிஸ்ட்


ஏன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்?

 

 இரவு, பகல் பாராமல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் உழைத்துப் பணம் ஈட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றும் கணவருக்குத் துரோகம் செய்யத்துணியும் மனைவியரைப் பற்றி சற்று முரண்பாடான அதே சமயம் உணர்ச்சிப்பூர்வமான விசயம் இது. கலாசாரம் சம்பந்தப்பட்டது. என்னதான் நாம் பண்பாடு, கற்பு, தனிமனித ஒழுக்கம் இவைபற்றியெல்லாம் பேசினாலும் ஏராளமானோர் வாழ்க்கையில் நடைபெறும் இந்தத் துரதிஷ்டவசமான நிகழ்வுகள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் நமது வீட்டு அமர்வறை (ஹால்)வரை வந்துவிட்ட தொலைக்காட்சிதான் முக்கியப் பகுதியை எடுத்துக்கொள்கிறது. இதில் சில


ஐயம் தீர்க்கும் ஆசான்

 

 அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் சூழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு சிறப்பும் இருந்தது. பாடலி புத்திரத்திலிருந்து புத்தகயா போவதற்கும், காசியிலிருந்து ராஜகிரி போவதற்கும் இடையே அந்தக் கிராமம் இருந்தது. வழிப் போக்கர்கள் சந்தித்துக் கொள்ளும் மைய ஊராக அது விளங்கியது. அதனால் உழவுத் தொழிலைத் தவிர அந்தக் கிராம மக்கள் மற்றொரு தொழிலும் செய்து பிழைத்துக்


சில காதல் கடிதங்கள்…

 

 என்னிடம் சில காதல் கடிதங்கள் இருக்கின்றன… என்று நான் ஆரம்பிப்பதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். எனக்கு வயது நாற்பதுக்கு மேல். கடிதங்கள் தங்கள் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்த, 1990களின் பிற்பகுதியில் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் அவை. எனக்கு அல்ல. என் தோழி நித்யாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். பீரோவில், எனது நகைப்பெட்டிக்குக் கீழேயிருந்த பேப்பருக்குக் கீழே, மறைவாக வைத்திருந்த அந்தக் கடிதங்களை எடுத்தேன். ஹால் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்த என் கணவன் சுரேஷைப் பார்த்து, “என்னங்க… என்னங்க…” என்றேன்.


விபத்து..!

 

 புத்தம் புது புல்லட்டில் வந்து இறங்கிய பிள்ளையைப் பார்த்தப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. சேகர் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். ” எதுடா… இது…? ” – அன்னபூரணி குரலில் லேசான பதற்றம். ” அலுவலகத்துல லோன் போட்டு வாங்கினேன். ” – அமர்ந்தான். ” ஏன்…? ” தணிகாசலம் குரலிலும் கொஞ்சம் நடுக்கம். ” பேருந்துல அலுவலகத்துக்குப் போக சிரமமா இருக்குப்பா..” ” உன்னை யார் வாங்கச்சொன்னா..? ” – அன்னபூரணி உள்ளுக்குள் தோன்றிய நடுக்கத்தை


அவசர முடிவு எடுத்தது தப்பு தான்!

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 சுதா அப்படி கோவத்திலே பேசினதை நினைத்து மிகவும் வருத்தப் பட்டான்.மறுபடியும் சுதாவுக்கு ‘போன்’ பண்ணினான் ராஜா.இந்த தடவை சுதாவின் அப்பா தான் ‘போனை’ எடுத்தார். தன் மாமனார் ‘போனில் வந்ததும் ”மாமா,நான் சொல்வதை கொஞ்சம்…”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,அவர் ராஜாவை முழுக்கவே பேச விடவில்லை. அவர் ”சுதா சொன்னது தான் எங்க முடிவும்.இனிமே ‘போனில்’ நீங்க கூப்பிட்டா நாங்க யாரு ம் போனையே எடுக்க மாட்டோம்”என்று சொல்லி போனை வைத்து விட்டார்.


நாச்சியப்பனின் உரை

 

 (இதற்கு முந்தைய ‘அரட்டைக் கச்சேரி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஒருநாள் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து திம்மராஜபுரத்தில் என் வீட்டிற்குப் போயிருந்தேன். என் வீட்டிற்கு அடுத்த வீடுதான் நாச்சியப்பன் வீடு. ஆனால் ஒரு சின்ன சந்து மாதிரி இடையே போய் அதன் கடைசியில் அமைந்திருக்கும் அவருடைய வீடு. என் சித்திக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தொடர்புகூட எனக்கு அவரிடம் கிடையாது. திம்மராஜபுரம் போனால் ராத்திரிகளில் என் வீட்டின் பால்கனியில் நான் படுத்துத் தூங்குவது