கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 27, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கோழிக்கோட்டில் வரவேற்பு

 

 (இதற்கு முந்தைய ‘விஷச் சொட்டு’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). நாட்கள் ஓடின. ராஜாராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது. மாதங்கள் ஓடின. அவனுடைய கல்யாணமும் சிறப்பாக முடிந்தது. திம்மராஜபுரத்தில் இந்த மாதிரி கல்யாணம் இதற்கு முன் நடந்திருக்குமா என்று ஊரே அசந்து போகிறமாதிரி ராஜாராமனின் கல்யாணம் தடபுடலாக நடந்ததாக செய்திகள் வந்தன. கமலாச் சித்தி எனக்கு கல்யாணப் பத்திரிக்கை அனுப்பி வைத்திருந்தாள். ஆனாலும் நான் கல்யாணத்திற்கு செல்லவில்லை. பொதுவாக பண நெடி அடிக்கின்ற ஆடம்பரமான கல்யாணங்களுக்கோ


வேடப்பர்

 

 அந்த மகேந்திரா வேனில் நான்கு குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு பேரும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். கும்பகோணத்திலிருந்து வேன் புறப்பட்டு அணைக்கரை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், வழியாக விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள வேடப்பர் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. எழிலரசி, தம் கணவன் இளங்கோவன் குழந்தை கௌசிகா, தாய், தந்தை, அண்ணன் அண்ணி, மாமனார், மாமியார், நாத்தனார், வீட்டு மாப்பிள்ளை, மற்றும் ஒன்றிரண்டு பங்காளி குடும்பத்தினர்களுடன் இறங்கி கோயிலுக்குள் சென்றாள். ஒரு வயசு குழந்தை கௌசிகாவுக்கு மொட்டை போட்டு காது குத்தும்


உழைக்கும் கைகளே

 

 அந்த மெஷின் காலையிலேயே ரிப்பேரு. வர எல்லா கஸ்டமரும் இந்த கவுண்டருக்கே வரவேண்டியதாயிடுச்சு. சாதாரணமா சிரிச்ச முகமா இருக்கும் எழிலுக்கு அன்னைக்கு ஒரே பதட்டம்.அந்த பச்சப்புடவை அம்மா வேற சில்லறை தராம ரூபா நோட்டா நீட்டறாங்க.யாருமே சில்லறை தரலைன்னா திண்டாட்டம் தான். போன வாரம் வரை “வெஜ் ஃப்ரேஷ்” கடையில வேல பார்த்திட்டிருந்தா எழிலரசி. நல்லா பேரு வச்சாங்க உங்கம்மா உடுத்த நல்ல ட்ரெஸ் இல்ல. எழிலாம். அரிசிக்கே வழியில்ல அரசியாம் – முருகன் சிரிப்பான். முருகனுக்கு,


கனவு

 

 காலை நேரமது மழை லேசாக தூரிக்கொண்டு இருந்தது. ஆங்காகங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது . கருவேலங்காடு நிறைந்த அப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசை வீடுகள். அந்த வீடுகளுக்கு சற்றுத் தள்ளி ஒரு மண் சாலை அதில் எப்போதோ போடப்பட்டதோ தெரியாது குண்டும் குழியுமாக அத்தனை பள்ளம். அந்த மண் சாலையில் இப்பவோ அப்பவோ என்று விழும் நிலையில் பழுதடைந்த மின்கம்பம் ஒன்று நின்று கொண்டிருந்தது. போதுமான சாலை வசதியோ மின்சார வசதியோ மருத்துமனை வசதியோ


காதல் சொல்லப் போறேன்

 

 அஸ்வின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் அப்பா, அம்மா, அண்ணன் என்று அந்த வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து வருபவன். சென்னையில் தனியார் கல்லூரியில் பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான். அஸ்வின் கல்லூரியின் முதலாமாண்டு காலடி எடுத்து வைத்த அன்றே, காதல் தேவதை பிரியாவை கண்டு கொண்டான், அவளைப் பார்த்த அந்த நொடியில் இருந்தே அவள்தான் தனக்கு, அவளைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று முடிவு செய்துக் கொண்டான். கல்லூரிக்கு தினமும் சென்றது அவளை