Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 18, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

குண்டாஞ்சட்டி மனைவிகள்

 

 (இதற்கு முந்தைய ‘கருப்பட்டிச் சிப்பம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) அடுத்த திருப்பதி உண்டியல் கோழிக்கோட்டில் வைக்கலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்திப் பார்த்துவிட்டு, வேணுகோபால் திம்மராஜபுரம் வந்து இறங்கினார். மூன்றாவது மகளுக்கு எந்த டாக்டருக்குப் படித்த பையனைப் பார்த்து மடக்கலாம் என்பதற்கும் அவர் கருத்துக் கணிப்பை மனதிற்குள் நடத்திப் பார்த்திருந்தார். அவரின் கருத்துக் கணிப்பில் மிக அதிகமான வாக்குகள் பெற்று மிகப்பெரிய உயரத்தில் இருந்தது, என் கமலா சித்தியின் மகன் ராஜாராமன்தான்…


கடைசி வரை?

 

 வீரென்று பக்கத்து வீட்டுப் பெண்கள் கத்தும் சத்தம் கேட்டு ஓடினேன். மாடிப்படிக்குக் கீழே பெரியவர் மல்லாந்து கிடந்தார். பேரன் பேத்திகள் கோரஸாய் மாடி எறங்கறப்போ தாத்தா தடுமாறி விழுந்துட்டார் அங்கில் என்றனர். நிலைமையைப் புரிந்து கொண்ட நான் உடனடியாக எதிர் வீட்டுக்கு ஓடினேன்.கைலி பனியன் சகிதமாய் கையில் ஹிந்துப் பத்திரிகையோடு நின்றிருந்த டாக்டர் என்னைப் பார்த்ததும் என்னாச்சு எனக் கேட்ட படிக் கேட்டைத் திறந்தார். விசயம் சொன்னதும் விரைவாய் ஓடி வந்தார்.டாக்டரைப் பார்த்ததும் வீட்டுப் பெண்கள் விலகி


ஊஞ்சல்

 

 வாழ்க்கை முழுவதும் கனவுகள்தான்; கனவுகளே இல்லாத வாழ்க்கை இல்லை. சொல்லப் போனால் முழு மனித வாழ்வுமே கனவுதான். நிகழ்தலையும் நினைவுகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது கூட ஒரு குழந்தமை புரிதலாகத்தான். வேண்டுமானால் திணிக்கப் பட்ட அல்லது விதிக்கப்பட்ட கனவுகள் என்று வேறு படுத்திக் கொள்ளலாம்; அதுவும் நம் திருப்திக்காகத்தான். நகர வாழ்வின் ஒரு எட்டு மணி பின் மாலையில் அந்த பெரிய குடியிருப்பு வளாகத்திற்குள்ளாக, தன்னுடைய ஒரே வெளிஉலகு நுகர்தலாக, உடலுக்கு ஒரு சிறிய வேலையாக


கார் வாங்கிய கதை

 

 ”காலையிலேயே காரை கழுவ ஆரம்பிச்சாச்சா. ரிட்டயர்மென்ட் லைப்ல உங்களுக்கு நல்லா தான் பொழுது போகுது..”. மனைவியின் குரலைக் கேட்டு ஈரத்துணியைப் பிழிந்தபடியே நிமிர்ந்தார் ராமநாதன். அருகிலிருந்த பெரிய பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீர் முழுவதும் காலியாகி இருந்தது. “என்னடி கிண்டலா பண்ற…? “இல்லைங்க இப்ப இருக்குற தண்ணி பஞ்சத்துக்கு குடிக்கிறதுக்கும் துணி துவைக்கவுமே தண்ணி இல்ல. ஏதோ நம்ம ஏரியா அவுட்டர்ல இருக்கிறதால கிரவுண்ட் வாட்டர் கொஞ்சம் இருக்கு… சரி சரி டிபன் ரெடி ஆயிடுச்சு. கைகால் கழுவிட்டு


அழகான சின்ன தேவதை

 

 “சிறு வயதில் பலாத்காரம், விபச்சாரம், பாலியல் கொடூரங்களால் கற்பிணியாக்கப்பட்டு, பிறந்த குழந்தைகளை பேணி பாதுகாக்க வழியில்லாமல் குப்பைத்தொட்டியிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் தூக்கி வீசியெறியப்பட்ட குழந்தைகளை…” அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக இருக்கும் என்பது நாம் அறிந்த விசயம்தான். கிட்டத்தட்ட அக்டோபரிலிருந்து ஜனவரி முதல் வாரம் வரை ஹாலோவின் (Halloween), நன்றி தெரிவிக்கும் விழா (Thanks Giving), கருப்பு வெள்ளி (Black Friday), கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக விழாக்கள் கோலாகலமாய் இருக்கும். இந்த மாதங்களில் பள்ளி, கல்லூரி


கோளாறு

 

 சாவித்திரிக்கு ஒரே பரபரப்பு. அவள். ஏற்பாடு செய்திருந்த விருந்து வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்றுதான். பிறர் மதிப்பையும் பாராட்டுதலையும் பெறத் தவிக்கிற எந்த அம்மாளுக்கும் இயல்பாக இருக்கக்கூடிய ஆசை தானே அது! சாவித்திரி சமூக அந்தஸ்தில் மிக உயர்ந்து விட்டவளும் அல்ல; தாழ்ந்து கிடப்பவளும் அல்ல. மத்தியதர வர்க்கத்துக் குடும்ப விளக்குகளுக்குச் சரியான பிரதிநிதி அவள், பிறந்த இடத்திலோ, புகுந்த இடத்திலோ செல்வம் குப்பை மாதிரிச் சிதறிக் கிடக்காவிட்டாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே பிறந்து வளர்ந்து


போட்டா போட்டி

 

 நுங்கும் நுரையுமாகக் குமிழியிட்டுச் சென்றிருந்த காவிரியின் புதுவெள்ளப் பூரிப்பில் மனம் விட்டு லயித்திருந்த அவள், காற்றில் கலந்துவந்த குழல் ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். நினைத்தபடி முத்தையனைக் காணவில்லை. குணவதிக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. வழக்கமாக வரும் அந்த ஒற்றையடிப் பாதையை மீண்டும் ஒருமுறை நோக்கினாள். செடி மறைவிலிருந்து மெல்ல எழுந்த முத்தையனைக் கண்டவுடன் குணவதிக்குச் சந்தோஷம் எல்லை கடந்தது. தன்னை வழக்கம் போல ஏமாற்றி வேடிக்கை பார்க்கவே இப்படிச் செய்திருக்கிறான் முத்தையன் என்பதை அறிந்த குணவதி, சுய


உயிர் முடிச்சு…!

 

 காசிக்கு நெஞ்சுக் குழியில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான்கு நாட்களாகப் பிரிய மாட்டாமல் ரொம்ப அவஸ்தை. அவள்…. கணவன், கொழுந்தன், பிள்ளைகள், மாமனாரெல்லாம் கண்ணீரும் கம்பளையுமாய் வீட்டுக்கு வெளியே கூடியிருந்தார்கள். உள்ளே…. ஊர்ப் பெண்டுகள் காசி படுக்கையைத் சுற்றி அழுத கண்ணும், சிந்திய மூக்கு, சிந்தையுமாக சூழ்ந்திருந்தார்கள். ஊரோடு ஒத்து அங்கு நின்ற எனக்கு மனசுக்குச் சங்கடம், கஷ்டமாக இருந்தது. காசிக்கு சாக வேண்டிய வயசில்லை. அவள் என்னைவிட ஐந்து வயது குறைவு… முப்பது.! ஆனாலும் சாவு


உன்னாட்டும் ஒரு ‘ஞான சூன்யமா’…

 

 வேத பாடசாலையிலே பதினைந்து வருடம் வேதம் படித்து விட்டு சென்னைக்கு வந்தார் சிவராம கணபாடிகள்.சென்னைக்கு வந்து கணபதி குருக்கள் இடம் ஒர் ‘அஸிஸ்டெண்டாக’ உபாத் யாய வேலையை செய்து வந்தார். அவருக்கு வயது இருபத்தி மூன்று ஆகும் போது கணபதி குருக்களின் ஒறே பெண்ணான ராஜத்தைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷமே சிவராமன் தம்பதிகளுக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்தான்.ஒரு குழந்தைக்கு ராமன் என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள். ராமனை


கருப்பட்டிச் சிப்பம்

 

 (இதற்கு முந்தைய ‘கமலா சித்தி’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). ஐந்து மகள்களில் முதல் இரண்டு மகள்களுக்கு கல்யாணத்தை அடுத்தடுத்து முடித்துவிட்ட வேணுகோபால், மூன்றாவது மகளின் கல்யாண விஷயமாகத்தான் திம்மராஜபுரத்திற்கு வந்து இறங்கி இருந்தார். எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர் இல்லை என்றால் பாலக்காடு பக்கம் இல்லாத மாப்பிள்ளைகளா எங்கேயோ திருநெல்வேலியில் இருக்கும் திம்மராஜபுரம் என்ற புழுதிக்காட்டில் கிடைத்துவிடப் போகிறான்? ஆமாம் என்பதுதான் திம்மராஜபுர சமூகத்தினரின் ஒட்டு மொத்த பதில். அவர்களால் எதை மாற்றினாலும் இதை