Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 15, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கமலா சித்தி

 

 என்னுடைய கமலா சித்திக்கு கல்யாணமானது அவளின் பதினெட்டாவது வயதில். கல்யாணமான பன்னிரெண்டாவது வருடத்தில் அவளின் கணவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. சிகிச்சைகளால் பலன் இல்லாமல் அவர் இறந்துவிட்டார். கமலா சித்திக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். மகன் ராஜாராமன் மூத்தவன். சித்தியின் கணவர் இறந்து போனபோது பெரிய பணவசதி எதையும் அவளுக்கு விட்டுப் போகவில்லை. சின்னதாக ஒரே ஒரு வீடும், கொஞ்சம் நிலமுமே இருந்தன. கடைசி ஏழெட்டு வருடங்களில் சித்தப்பாவின் வியாபாரம் சரியில்லாமலேயே இருந்ததால் வீட்டில் பணப்


கண்ணீர்

 

 “அமுதா நம்ம வனஜாவோட அப்பா, நேற்று இரவு நெஞ்சுவலியில் இறந்துவிட்டாராம். நாளை காலை பத்து மணிக்கு அடக்கம் எடுக்காங்களாம், உன் நாத்தனார் அகல்யாவுக்கு, வனஜா தோழிதானே அதனால் அவளுக்கும் சொல்லிடு” “வள்ளி என்ன சொல்றே நல்லாதானே இருந்தார், எப்படி நெஞ்சுவலி வந்தது” “அவருக்கு குடிக்கும் பழக்கம் இருக்கு இல்லையா, நேற்று இரவு நண்பர்களோடு சேர்ந்து குடித்துவிட்டு, எல்லோரும் இரவு மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருக்காங்க போல, வயதானவர் இல்லையா, அதான் நெஞ்சுவலி வந்திருக்கு” “அப்படி என்னதான் இருக்கோ


அதிர்ஷ்டம்

 

 என் காரின் ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் விரல்கள் அதிர்ஷ்டமானவை. இல்லாவிட்டால் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிணிக்களைக் கையாள லகரங்களில் என்னைச் சம்பளம் வாங்க வைத்திருக்குமா? அப்போது எனக்குத் திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. ஆதலால் அலுவலகத்தில் அன்றாட வேலைகள் முடிந்துவிட்டால் செய்வதற்கு பெரியதாக ஏதுமில்லாத காலகட்டம் அது. அப்போதுதான் அந்த ஜெர்மன் காரை வாங்கியிருந்தேன். பெயர் வொல்க்ஸ்வேகன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த காரில் சொகுசாக அமர்ந்தபடி நெடுந்தூரம் பிரயாணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த விதமான கார்களில்


கடவுளுக்கு நாய்களிடமிருந்து ஒரு கோரிக்கை – ஒரு பக்க கதை

 

 அந்த இடத்தில்தான் நாய்கள் எல்லாம் ஒன்று கூடின. எங்கெங்கிருந்தோ நாய்களெல்லாம் வந்த வண்ணம் இருந்தன. பணக்கார நாய்களிலிருந்து தெருநாய்கள் வரையும் சில வெளிநாட்டு நாய்களும் வௌவ் வௌவ் என்று குலைத்துக் கொண்டும் வாலை ஆட்டிக்கொண்டும் இங்கிட்டும் அங்கிட்டும் நடப்பதுமாய் போவதுமாய் இருந்தன. கூட்டத்தில் வந்திருந்த நாய்கள் அனைத்தும் தன்னுடைய சாதி நாய்களுடன் சேர்ந்து நின்று கொண்டன. போர் வீரனுக்கு இணையான ஆற்றலைப் படைத்த ராஜபாளையம் நாய், வேகமாக ஓடுவதும் புத்திசாலிதனமான சிப்பி பாறை என்கிற நாய், அலங்கு,


நானும் என் ஈழத்து முருங்கையும்

 

 சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து வளர்த்த, அந்த


உயர்ந்தவன்

 

 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ் சாமே! அப்படி யென்றால், அநேக இடங்களில் பாத்திரம் துலக்கியும் வீடு பெருக்கியும் வயிறு வளர்த்து வந்த பார்வதிக்கு அவள் மகன் ராசா ஆகவும், “துரை ஆகவும் விளங்கியதில் தவறு இல்லைதானே? “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று எண்ணிக்கொள்ள உரிமை பெற்றிருந்த போதிலும், பார்வதி தன் மகனை மன்னன் ஆக்கி மகிழ ஆசைப்பட்டதே இல்லை. வருங்காலத்திலே அவன் ஒரு மந்திரியாகி “ஜெயம் ஜெயம் என்று வாழ்ந்து விடுவான் என்றுகூட அவள் கனவு


செந்தட்டீ மம்மே பாரே!

 

 மூன்று முடிச்சுக்கள் விழுந்தன. வத்சலைக்கு ஏற்பட்ட மகிழ்வு இவ்வளவு அவ்வளவு அல்ல. எல்லாமே கனாப்போலவே தெரிந்தது. மங்கல நாண் அவளது விழி விரிப்பில் இழைந்தது. தனக்குத் தாலிபாக்கியம் அருளிய அலகிலா விளையாட்டுடையவனை நன்றி நெஞ்சுடன் தொழுதாள். மேனி புல்லரித்தது. நாதசுர முழக்கம் அவளுக்கு உணர்வையும் சுயநினைவையும் கொடுத்தது. தலையை உயர்த்த எத்தனம் செய்தாள். விழிகள் நாணம் பூண்டன. மூன்று முடிச்சுக்களை அருளிய சொக்கலிங்கத்தின் கடைவிழி நோக்கைச் சந்திக்க முடியாமல் திக்குமுக்காடினாள். மணப்பந்தல் மளமளப்பு மிஞ்சியது. ‘வாங்க, வாங்க!’


தவறுகள் தண்டிக்கும்…!

 

 ரங்கநாதன் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான். விடுதலை. மனைவி, மக்கள்….. அவன் மனக்கண்ணில் மானசீகமாகத் தெரிந்தார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவனுக்கு மனைவி, மக்கள் தெரிகிறார்கள்.!! முத்தம்மாளோடு இவன் சேர்ந்த பிறகு அவர்களை மறந்தே போனான். ரங்கநாதனுக்குத் திருட்டு, ஜேப்படி, வழிப்பறி… இது மாதிரி சட்டவிரோதமான தொழில். அவனுக்குச் சிறை ஒன்றும் புதிதல்ல. முத்தம்மாள் தவறாமல் வாரம் ஒரு முறை சிறைக்கு வந்துவிடுவாள். கம்பிகளுக்கு அருகில் நின்று ஆறுதல் சொல்வாள். சென்ற முறைதான் அவள் வந்துவிட்டுச்


அவன் போட்ட முடிச்சு

 

 ‘ப்ளஸ் டூவில்’ நல்ல மார்க்குகள் வாங்கி இருந்த சண்முகத்துக்கு அண்ணா பல்கலைக் கழகத்தி ல்  B.E. கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்பு படிக்க ‘சீட்’ கிடைத்தது.விழுப்புரம் ஸ்டேஷனில் அவனை சென் னைக்கு வழி அனுப்ப அவன் அப்பா ஆறுமுகம் அம்மா ரேவதி,மாமா முருகன்,மாமி வள்ளி, மாமன் மகள் சுசீலா,தாத்தா பழனியப்பன் எல்லோரும் வந்து இருந்தார்கள்.எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்குப் போகும் ரயில் வந்ததும் ஏறில் கொண்டான் சண்முகம். வண்டி கிளம்பியவுடன் எல்லோரும் கையை ஆட்டி வண்டி மறையும் வரை


விடுதலை

 

 மோகனா காலையிலேயே குளித்துவிட்டு பூஜையறையில் நின்றுகொண்டு, “கடவுளே, எனக்கு எப்பத்தான் விடுதலை வாங்கித் தருவே… ரவீஷ் செத்தாத்தான் நான் நிம்மதியா வாழ முடியும். அவனை சீக்கிரம் சாகடித்துவிடு. அது உன்னால முடியலைன்னா என்னையாவது கொன்றுவிடு… தினமும் இந்த நரகவேதனை எனக்குத் தாங்கவில்லை..” என்று வேண்டிக்கொண்டாள். ரவீஷ் வேறு யாருமில்லை. அவளைத் தொட்டுத் தாலி கட்டிய கணவன்தான். பிறகு ஏன் இந்தக் கொலைவெறி? ரவீஷிடம் இல்லாத கெட்ட பழக்கங்கள் கிடையாது. நண்பர்களை வீட்டிற்கு கூட்டிவந்து தினமும் குடிப்பான். வார