கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 9, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

மனைவியின் அழுத்தம்

 

 (இதற்கு முந்தைய ‘டெய்லர் சிவன்பிள்ளை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). முதன் முதலாக புது மனைவியை என் படுக்கையின் கொசு வலைக்குள் சந்தித்த போது ஒரு சின்ன மாயாபுரியின் நீரின் அடியில் இருந்தாற்போல இருந்தது. அந்தரங்கமான பாலுறவு வைத்துக் கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்ட கவர்ச்சியான ஒரு பலூன்போல் தெரிந்தது கொசு வலை. அது மாத்திரமில்லை. கொசு வலைக்குள் எனக்குப் பாலுறவில் என் உச்சந்தலையில் ஒரு போதைப் பாம்பு போல் சுழன்று சுழன்று ஏறியது. அப்போது எனக்கு


கினிம்மா – ஒரு பக்க கதை

 

 விக்னேஷ், என்ற ஒரு சிறு வயது சுட்டிப் பையன் ஒருவன் இருந்தான். அவனை எல்லோரும் விக்கி என்று அழைப்பார்கள். அவனுக்கு செல்லப் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நாய் பூனை எதுவாக இருந்தாலும் எடுத்து வளர்த்துவான். அவனுக்கு வீட்டிலும் தடை இல்லை. ஒருநாள், விடுமுறை அன்று அவன் நண்பன் வீட்டிற்க்கு சென்றான். அங்கு இருந்தப் பனைமரத்தில் ஒரு கிளி இருந்தது. அந்த கிளியின் சத்தம் கேட்டு மேலேப் பார்த்தான். அங்கு மரத்தின் மேல் ஒரு பச்சைக்கிளி, பார்ப்பதற்க்கு


ஒலவ மரம் வீழ்த்திய காதை

 

 ‘இந்த மரம் மட்டும் தேக்கா இருந்திச்சி, இப்ப லட்ச ரூவா தேறும்’ என்றாள் அய்யாக்கண்ணு, தன் இடது கையால் தட்டியபடி. அவனது இடது கை தட்டப்பட்ட இடத்தில் ஒரு உயர்ந்த ஒலவ மரம் நின்றது. உயர்ந்து, பருத்து, கிளை பரப்பி, எங்கும் விரிந்து, கோடி இலைகளுடன் பச்சைப் பசேலென்று, கண்ணால் பார்க்கும் போதே போய்க் கட்டிக் கொள்ளத் தோன்றும் அழகு. ‘கட்டிக்கொள்ள’ என்றால் ஒரு ஆள் போய் அதைக் கட்டிக்கொள்ள முடியாது. மதுரை திருமலை நாயக்கர் மகால்


கூடை பிண்ணும் தொழிலாளி – ஒரு பக்க கதை

 

 ஒரு ஊரில் இளம் வயது கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். காட்டிலே சென்று மூங்கிலை வெட்டி வந்து, அதை துண்டு துண்டாக நறுக்கி கூடை, புட்டி, முறம், நாற்காலி போன்றவைகளைச் செய்வார்கள். இருவரும் மூங்கிலை வைத்து கூடை பின்னுவதில் கைத்தேர்ந்வர்கள். ஊரில் உள்ளோரும் புதியதாக வாங்குவதென்றாலும், பழையது உடைந்துபோய் விட்டது என்றாலும் இவர்களிடத்தில்தான் வந்து கொடுப்பார்கள். அந்த அளவிற்கு வேலையில் சுத்தமும் ஒழுக்கமும் இருந்தது. இந்நேரத்தில் இளம் மனைவி கர்ப்பமுற்றாள். தன்னுடைய மனைவியைத் தாங்கு தாங்கென்று உள்ளங்கையில்


கவனிப்பதால்

 

 யோகாவைக் காணவில்லை. காலை 9 மணிக்கே சுமதி அவனைத் தேடி ஒரு முறை வந்தாள். அவன் இருக்கையில் இல்லை. 10:30 மணிக்கும் வந்தாள். மீண்டும் அவனுடைய மேசையை வெறுமைதான் சூழ்ந்திருந்தது. இப்பொழுது மணி 11 ஆகிறது. இப்பொழுதும் அவனைக் காணவில்லை. பவனிடம், ”யோகா எங்கே?” என்றாள். ”இப்பக்கூட இங்கதான் இருந்தான், மேம்! அதுக்குள்ள எங்க போனானோ?!” பதிலளித்தவனை முறைத்தாள். ”முன்ன கேட்டதுக்கும், இதையேதான சொன்ன?” ”இல்ல மேம். நீங்க கேட்டுட்டுப் போனப்புறம் யோகாவைத் தேடிப் போனேன். கீழே