Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 5, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொசுத்தொல்லை

 

 கொசுத்தொல்லை அறுபது வருஷத்துக்கு முன்பும் இருந்தது. இன்று இருப்பதற்கு அப்போது இருந்த கொசுத்தொல்லை ஒன்றுமே இல்லை. ஆனால் அறுபது வருடத்திற்கு முன்னால் அந்தக் கொசுக்கடியே மிகவும் கஷ்டமாக இருந்தது. பொதுவாக மத்தியான நேரங்களில் கொசுக்கடி இருக்காது. சாயந்திரம் ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாக கொசுக்கள் வரத்தொடங்கி விடும். ராத்திரியாகும் போது அவற்றின் எண்ணிக்கை அதிகமாகும். நிம்மதியாகத் தூங்க முடியாதபடி கை, கால், முகம் எல்லாம் கடித்துத் தொல்லை தரும். ஆனால் அறுபது வருடத்திற்கு முன்பு கொசுக் கடியையோ அதன்


ஒரு முழு நாவல்

 

 பத்திரிகைத்துறையில் எனது பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு.கங்காதரன் போன்ற ஒரு விமர்சகரைப் பார்த்ததேயில்லை. சொல்லப்போனால், எனது பள்ளிக் காலத்திலிருந்து, பல்கலைக்கழக நாட்களிலும், பின் பத்திரிகை நிருபராகப் பணிபுரிந்த வேளையிலும், தொடர்ந்து அவரது விமர்சனங்களை அவ்வப்போ, பல பத்திரிகைகளில் படித்திருக்கின்றேன். ஆனால், தற்போது…. மூன்று ஆண்டுகளாகப், பொறுப்பாசிரியராய் நான் சென்னையிலே பணியாற்றும் “சிறகுப்பேனா” வாரப்பத்திரிகைக்கு அவரிடமிருந்து விமர்சனங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்தான், அவரைப்பற்றிய விபரங்களை என்னால் அறியமுடிந்தது. கங்காதரனுக்கு வயது எழுபது. மனைவியை இழந்தவர். திருநெல்வேலி


சதிஷ் தவான்

 

 பைக் பயணத்தில் என் மனைவியிடம் ராக்கெட் ஏவுதளம் இஸ்ரோ பற்றி கேள்விபட்டதுன்டா என்று கேட்டேன், அதற்கு இல்லை என்று பதில் சொன்னாள், எனக்கு அவற்றில் ஆர்வம அதிகம, அது சார்ந்த படிப்பு படிக்க ஆர்வப்பட்டிருந்தேன். முடியாமல் போனது என்று சொல்லிக் கொண்டே போனேன். அப்போது என் மனைவி ஆறு மாத கருவைக் கொண்டிருந்தாள்,எல்லா அப்பாக்களும் போலவே நானும் என் குழந்தையைப் பெயர் வைத்து அழைத்த ஆரம்ப நாட்களில் ஏன் இந்தப் பெயர் என காரணம் கேட்டாள், நான்


அணையா விளக்கு – ஒரு பக்க கதை

 

 ஒரு நாட்டில் இராஜா ஒருவன் தன்னுடைய மக்களுக்கு நல்லாச்சியைக் கொடுத்து வந்தான். திடிரென்று சில மாதங்களாக அந்த நாட்டில் மழைவளம் குன்றி போயிருந்தது. என்னவாயிருக்கும் என்று யோசனை செய்தபோது, அந்த நாட்டில் உள்ள காளிக்கோயில் அடைப்பட்டுக் கிடந்ததை அறிந்தான். அந்தக் கோவிலைத் திறந்து தினமும் இராஜாவே குதிரையில் வந்து விளக்குப் போட்டுவிட்டுச் சென்றான். வீட்டில் செக்கு ஆட்டிய எண்ணெயை ஊற்றாமல், அதை அதிக விலையில் விற்கும்படிச் சொல்லிவிட்டு வரும்வழியில் உள்ள கடையில் வாங்கிய எண்ணெயை ஊற்றி விளக்கு


மிஸ்டர் இரக்கசாமி…

 

 ” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்…. ‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி. மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கசாமி என்று பெயர் வைத்தாதாலோ


ஒரே ஒரு மனிதன்

 

 ஒரு தெரு. ஒதுக்குப்புறமான தெரு அல்ல. போக்குவரத்து அதிகமாக உள்ள முக்கியமான வீதிகளில் ஒன்றுதான் அது. நாகரிக யுகத்தின் ஜீவத் துடிப்பான வேகம் அந்தத் தெருவிலும் மனித நடமாட்டமாகவும், சைக்கிள்களின் ஓட்டமாகவும், கார் வகையராக்களின் துரித இயக்கமாகவும் பரிணமித்துக்கொண்டு தானிருந்தது. தெருவின் ஒரு இடத்தில் ஒரு நாய் செத்துக் கிடந்தது. அது கிடந்த இடம் தெருவின் மத்தியுமல்ல; ஒரு ஓரமும் அல்ல. அந்த நாய் நடு வீதியில் காரிலோ வண்டியிலோ அடிப்பட்டு, வேதனையோடு நகர்ந்து நகாந்து தெரு


குழந்தை உள்ளம்

 

 செல்லம்மாவுக்கு உடம்பு மட்டும் குணமாயிருந்தா, மற்றப் பிள்ளைங்க மாதிரி எவ்வளவு குதூகலமா ஆடிப்பாடி விளையாடும்!” பக்கத்தில் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டதும், சிங்காரத்திற்கு அந்த ஓர் எண்ணம் மாறி மாறித் தோன்றியது. மரம் செதுக்கிச் சீர்பண்ணிக்கொண்டிருந்த அவனுக்கு மேலே வேலை ஓடவில்லை. அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீ ர் பரவியது. “உடம்பு காயலாக் கிடக்கும் மகளை விட்டுப்பிட்டு ஏதுக்கு வேலைக்கு வரணும்? வந்த புறம் மனம் நொந்து ஏன் இம்பிட்டுத் துடிதுடிக்க வேணும்?” என்று வேறு சிந்தித்து


அத்தை..!

 

 நான் அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்போது கைபேசி அழைத்தது. எடுத்தேன். “அண்ணே…”- என் உடன் பிறந்த தங்கை. “என்ன அருணா..?” “அங்கே என் மாமியார் வாதங்களா…?” “எங்கே…?” “உன் வீட்டுக்கு …” “என் வீட்டுக்கா…?!” “ஆமாம் !” “ஏன்..?” “கோபம். உன் வீட்டுக்கு வர்றேன்னு கிளம்பினாங்க…” “யார்கிட்ட கோபம்…?” “சட்டைத் துவைச்சுப் போடலைன்னு காலையில மாமா என்னைத் திட்டுச்சி. இவங்க சும்மா இல்லாம….. எனக்கு வக்காலத்து வாங்கினாங்க. கோபமா இருக்கிற ஆள்கிட்ட எதிர்த்துப் பேசினாஎப்படி சரி படும்..? அதிகமா


ரெண்டாவது ஷுவை எப்போ…

 

 லண்டனில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த கவுண்டி. அந்த கவுண்டியிலே ஒரு தச்சராக வேலை செய்து வந்தார். அவர் ஒரு வாடகை வீட்டிலெ ஜான் தன் மனைவி மேரியுட னும்,ஒரு பையன்,பெண்ணுடன் வசித்து வந்தார். ஜான் நிறைய தச்சு வேலை செய்து பணம் சம்பாதித்து, ஒரு வீட்டு கட்ட நல்ல பலகைகளை வாங்கி வைத்துக் கொண்டு இருந்தார். அவர் பையனுக்கு பத்தொண்பது வயது ஆனவுடனே,அவன் லண்டனில் ஒரு வேலை கிடைத்து அவன் லண்டனுக்குப்


சுவர்கள்

 

 சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் எல்லாம் முடிந்து ரோஹித்தும் ஒரே மகன், இளம் மனைவி மாயாவுடன் வெளியே வந்தபோது மணி காலை பத்து. சென்னை வெயில் சுட்டெரித்தது. நங்கநல்லூருக்கு கால் டாக்ஸி புக் செய்துவிட்டு ரோஹித் அப்பாவை தொடர்புகொள்ள முயற்சி செய்தான். அப்பாவின் மொபைல் ஒலித்தபடியே இருந்ததே தவிர, அவர் அதை எடுக்கவில்லை. ‘சரி இன்னும் பதினைந்து நிமிடங்களில் வீட்டுக்குத்தானே போகப் போகிறோம்’ என்று மனதை சமாதானம் செய்துகொண்டான். நங்கநல்லூர் அபார்ட்மென்டை அடைந்து லக்கேஜ்களை டாக்சியிலிருந்து