கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 2, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொரோனா சோகங்கள்

 

 ராமரத்னம் மிகவும் மனமுடைந்து போனார். ஒரே மகள் சித்ராவின் சீமந்தக் கல்யாணம் நின்று போனது. பத்திரிகை அடித்து சிலருக்கு அழைப்பும் விட்டாயிற்று. இப்போது அவளின் சீமந்தக் கல்யாணத்தை நடத்துவதற்கு இனி சந்தர்ப்பமே கிடையாது என்றால் அவருக்கு எப்படி இருக்கும்? கொடுத்தது போக மிச்சம் இருந்த சீமந்தப் பத்திரிக்கைகளை வெறித்துப் பார்த்தார். இனி அவரால் என்னதான் செய்ய முடியும்? அவர் மனைவி கமலா, “நம்ம கையில எதுவுமே இல்லைங்க… எல்லாம் பகவத் சங்கல்பம்” என்றாள். இந்த வருடம் மார்கழி


தானியங்கி

 

 “நீங்கதான் என்னோட அம்மாவா?” சாதாரணக் கேள்வியா அது? கல்லூரிக் காலப் புகைப்பட ஆல்பம் திடீரெனக் கையில் அகப்பட்டால், படபடவென நினைவுகள் பொங்கி வருமே! அதுபோல அந்தக் கேள்வியும் எழிலரசிக்கு பலபல நினைவுகளை எழுப்பிவிட, உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழிலரசியின் முகம் பல வண்ணங்களை மாறிமாறிப் பிரதிபலித்தது. கேள்வி கேட்ட மதுமிதாவோ தன் கைகளில் மாட்டியிருந்த வெண்ணிற ’ஃபிட்-மைண்ட்’(Fit-Mind)’ வளையத்தை உருட்டிக்கொண்டே பதிலை எதிர்பார்த்து எழிலை நோக்கினாள். கேள்வி கேட்ட பெதும்பை தன்னையே பார்த்திருப்பது அந்த மடந்தைக்குப் புரிய, எழில்


நான் அம்மாவாகிட்டேன்

 

 நான் மட்டும் குத்த வைத்த இடத்தை விட்டு நகராமல் விட்டத்தைப் பார்த்தபடியே இருந்தேன். ஊர்க்காரர்கள் சிலர் வந்திருந்தனர். இப்படி நடக்கும் என்று தெரிந்தால்… அழுகையாக வந்தது. இனியும் நான் வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? அழ வேண்டும் என்று தோன்றுகிறது. யாரை கட்டிபிடித்து அழுவது. ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் மட்டும் தானே அழ முடியும். மழையில் நனைந்து அழுது கொண்டு போனால் யாருக்குத் தெரியப் போகிறது. அப்படித்தான் என் நிலைமையும் என்றாகிப் போனது. அடியே… இப்படி ஒக்காந்து


குதிரை குட்டியின் வழக்கு – ஒரு பக்க கதை

 

 ஒரு வழிப்போக்கன் குதிரையோடு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். குதிரையோ நிறைமாத கர்ப்பம். இவனுக்கும் சரி குதிரைக்கும் சரி அதிக தூரம் நடக்க முடியவில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. வழியிலே ஒரு இட்லிக் கடையைக் கண்டான் அவன். சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது. பிடித்திருந்த குதிரையைப் பக்கத்தில் உள்ள எண்ணெய் ஆட்டுகின்ற செக்கில் கட்டினான். கையோடு கொண்டு வந்திருந்த கொல்லை கரைத்து குதிரைக்கு வைத்தான். சுடச்சுட இட்லியை புட்டு வாயிலே போட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டான்.


கண்காட்சி

 

 ‘அந்த ஆண் விந்தணு சுரைக்காய்க்குள் வைக்கப்பட்டு நாற்பது ண்-நாள்கள் ஒரு குதிரையின் கர்பப்பைக்குள்ளோ அல்லது அதற்கு சமமான வேறொன்றிலோ அசைவு தெரியும் வரை வைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யின் அது உருவத்தில் ஓரளவிற்கு ஒரு மனித ஆணையொத்த ஆனால் உடல் முழுவதும் ஒளி ஊடுறுவும் வகையினதாக மாறிவிடும். இதற்குப் பிறகு மனித ரத்தம் அதற்குள் புகுத்தப்பட வேண்டும். இப்படி நாற்பது வாரங்கள் அந்த கரு உயிர்ச் சத்தூட்டப்பட வேண்டும். பிறகு அது மீண்டும் ஒரு குதிரையின் கர்ப்பப்பையில்