கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2020

89 கதைகள் கிடைத்துள்ளன.

குப்பமுத்து குதிரை..!

 

 “என்ன மாமா.. காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிட்டியளா.. நானும் எத்தனை தடவைக் கேக்குறேன். ஒரு நாளாவது என்னையும் சந்தைக்கு அழைச்சுகிட்டுப் போங்கன்னு..” “வயசான பொம்பளை சனங்களைக் கண்டா என் தங்கராசுக்கு ஆகாதுத்தா. ஒரு வாரம் டயம் தர்றேன். கெடுவுக்குள்ள நீ கொமரிப்புள்ளயா மாறி வா.. காட்டுக்குறிச்சி சந்தையில சீனிச்சேவு வாங்கித்தர்றேன்..” -வாசல் தெளிப்பதற்காக பசுமாட்டுச் சாணியை குண்டானில் கரைத்துக்கொண்டிருந்த ஓந்தாயிக்கும், காலையிலேயே தன் குதிரை வண்டியில் காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிவிட்ட குப்பமுத்துவுக்கும் நடந்த உரையாடல் இது. “இந்த மாமாவுக்கு


அந்த இரவு

 

 மூன்று வருடங்களாக அதுல்யாவும், ஹரிஸ்யும் சிறந்த காதலர்கள். வீட்டிற்க்கு தெரியாமல் தான் காதலிக்கிறார்கள். இருப்பினும் இரு குடும்பமும் நன்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் போல் பழகுபவர்கள். இதனால் வீட்டில் இவர்களின் காதல் தெரிந்தாலும் கல்யாணத்திற்கு அவ்வளவுவாக பிரச்சனைகள் ஏதும் வராது. அதனால் பயமில்லை. ஒருநாள் அதுல்யாவுக்கு கல்லூரி முடிந்தது, அவளை வீட்டிற்க்கு அழைத்து வர கல்லூரிக்கு வந்து இருந்தான் ஹரிஸ். 4 மணி முதல் 5மணி வரை காத்திருந்து அதுல்யா வெளியே வந்தாள். ஹரிஸ், “ஏ இவ்வளவு நேரம்”?


வினை

 

 “அனு உனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாயே, இப்போது எப்படி இருக்கிறாய், மருத்துவரிடம் சென்றாயா” “பரவாயில்லை வனிதா மருத்துவரிடம் போகவில்லை, எனக்கு சரியாகிவிட்டது, அதனால் போகவில்லை பள்ளிக்கு வந்துவிட்டேன்” “உன் முகம் சரியில்லையே வாட்டமாகவே இருக்கிறதே, நீ மருத்துவரிடம் போயிருக்கலாமே” “ஆமா வனிதா ரொம்ப சோர்வாக இருக்கிறது, அதனால்தான் முகத்தில் அப்படி தெரிகிறது, போகப் போக சரியாகிவிடும்” “சரி வா அலுவலகம் உள்ளே செல்வோம், நேரமாகிவிட்டது தாமதமானால் மேலாளர் திட்டுவார், உனக்கு பதவி உயர்வு வரும் நேரத்திலா


நான் யார் தெரியுமா?

 

 என்னைய யாருன்னு நினைச்சுட்டாங்க, நான் இப்ப இப்ப நினைச்சன்னா, அவங்களை இந்த இடத்தை விட்டு துரத்த முடியும். பாவமேன்னு பாத்தா ரொம்பத்தான் ஆட்டம் காட்டறாங்க. கோபமாக பக்கத்து வீட்டுக்காரரிடம் கத்திக்கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியும், குழந்தைகளும் அப்படியே பயந்து என் முகத்தை பார்த்து கொண்டிருந்தனர். என் வீட்டிலும் என் பேச்சை கேட்டு குழந்தைகளும், மனைவியும் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். விடுங்க சார் அவங்க குணம் அப்படி தயவு செய்து இதை பெரிசு பண்ணாதீங்க, நாம பொறுமையா இதை கையாளாலாம்,


ஏகா

 

 அன்றும் என்றும் போல்தான் பொழுது விடிந்தது. வழக்கமாய் ஏகாவுக்கு எப்படி விடியுமோ அப்படி. “ஏகா, ஏகா, எழுந்திரேண்டி! ஏ ஏகா, ஏகா—ஐயோ திரும்பிப் படுத்துட்டாளே! ஏகா, கண்ணைத் திறவேண்டி—! ஐயோ, இவளை எழுப்பி எழுப்பி மானம் போறது, பிராணன் போமாட்டேன்கறதே! ஏ—கா!” “கா—கா!” காகங்கள் கேலி செய்தன. ஏகாவை எழுப்புகிறேன் என்றால் அர்த்தமில்லை. ஒவ்வொரு சமயமும் சதைபோல் அவளை உறக்கத்திலிருந்து பிய்த்தாக வேண்டும். ஆனால், ஏகா எழுந்தபின் அவள் உறங்குவதோ, அவளை உறங்க வைப்பதோ, அவளை எழுப்புவதைவிடக்


மஞ்சி விரட்டுப் பூரணி

 

 ஊர் மூக்கின் மேல் விரலை வைத்தது! செம்பவளம் தீர்ப்பு வழங்கிவிட்டாள். “வாழ்க்கை என்கிறது ஒரு வெளையாட்டுக் கணக்காகும். பல்லாங்குழி, தாயம்னு ஆடறதில்லையா? அப்படித்தான். கெலிக்கவும் கெலிக்கலாம்; தோற்பு ஏற்பட்டாலும் ஏற்படலாம்; இப்படியான ரெண்டு மனநிலைகளையும் சரிசமதையாகப் பாவிக்கிற வீர உணர்ச்சி என்னோட இந்தப் பாளத்த மனசுக்கு இப்பதான் கூட வந்திருக்கு : கைகூடியும் வந்திருக்கு, மஞ்சி விரட்டு பந்தயக் கெடுவிலே தான் நான் புதுசாய்ப் பொறக்க வேணும் என்கிறது ராக்காச்சி ஆத்தாளோட தீர்ப்புப் போலே! நான் என்னோட


சவாரி…!

 

 ஐப்பசி மாத அடை மழைப் பொழுது….. கிழிந்து போன கோரைப்பாயிலிருந்து எழுந்து குத்துக்காலிட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் சிங்காரு. வானம் கருமேக மூட்டமடித்து நச நசவென்று தூறிக்கொண்டே இருந்தது. திரும்பிப் பார்த்தான். தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளும் பாயை விட்டு விலகி மண் தரையில் சுருண்டு படுத்து…… ஒன்று தன்னுடைய கிழிந்து போன கைலியையும், இன்னொன்று அம்மாவின் அழுக்குப் புடவையையும் போர்த்திக்கொண்டு தூங்கியதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சுவரோரத்தைப் பார்த்தான். மனைவி குப்பாயி படுத்திருந்த இடம்


பட்டினத்துகாரவ, இம்புட்டு நல்ல சனமா…

 

 காளி பள்ளி கூடமே போனது இல்லை.அவன் தன் அப்பாவுடன் கூட போய் அவர்களுக்கு சொந்தமாக இருந்த அரை காணி நிலத்தில் கிராமத்தில் வெறும் ஏரி வாய்க்கால் பாய்ச்சலில் வரும் தண்ணீரை உபயோகப் படுத்தி விவசாயம் பண்ணி வந்தான்.அவன் அப்பாவும், அம்மாவும், தவறிப் போன பிறகு தன் மாமன் மகளை கல்யாணம் பண்ணிக் கொண்டான்.அந்த அரை காணி நிலத்திலே விவசாயம் பண்ணி வந்து குடும்பத்தை நடத்தி வந்தான் காளி. கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆனதும் காளிக்கு ஒரு


மச்சக்காளையின் மரணம்

 

 (இதற்கு முந்தைய ‘இறுதி உரை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) மச்சக்காளை சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். எங்கே ரயில் ஏறி என்ன செய்ய, கர்மம் தொலையாது காசிக்குப் போனாலும் என்கிற மாதிரி சென்னை சென்றாலும் புற்றுநோய் அவரைவிட்டு விலகுவேனா என்றது. விரட்டப்பட விரட்டப்பட மற்றொரு இடத்தில் உருவாகும் கரையான் புற்று போல், சுவாசப் பைகளில் மையம் கொண்டிருந்த அவருடைய புற்று கணையம், கல்லீரல் என அதன் ஆதிக்கத்தை விரிவு படுத்தியது. சென்னைக்கு கிளம்பிப் போன