கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2020

89 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணனுக்கு வைரஸ்

 

 ஒரு அழகான குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை என வீடே குதூகலம்தான். குட்டி கண்ணனுக்கு வயது ஒன்பதுதான் அவன்தான் வீட்டில் கடைக்குட்டிப்பிள்ளை. அவன் அக்காமார் அவனைவிட இரண்டும் மூன்றும் வயதே மூத்தவர்கள். கண்ணனுக்கு ஆருயிராய் ஓர் நண்பன் இருந்தான். அவன் பெயர் தீபன். இருவரும் சேர்ந்து கிற்றார் பழகுதல், காற்பந்து அடித்தல், கணனியில் விளையாட்டுகள் உருவாக்குதல், விதம் விதமான உருவங்களை கடதாசி, லெகோ போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்குதல் என்று


கண்ணோட்டம்

 

 “அண்ணா, அண்ணா” ஸ்கூலுக்கு டைம் ஆச்சு போலய்யா? என்று கனிமொழி அண்ணாவை எழுப்பினாள். அன்பான தங்கை நன்றாகப் படிப்பவள், பத்தாவது படிக்கிறாள். அமைதியான பெண். அண்ணன் மீது பயமும் அன்பும் வைத்திருப்பாள். ஒழுக்கமான பெண். ஆனால், அண்ணன் கதிர் அப்படி இல்லை, அவளுக்கு நேர்மாறாக இருப்பவன். எல்லா கெட்ட விஷயங்களையும் தெரிந்து வைத்து இருப்பவன். பன்னிரண்டாது தான் படிக்கிறான். திருட்டு, மது, தீய நட்பு என வீட்டிற்க்கு தெரியாமல் ஆனந்தமாக வாழ்பவன். ஒருநாள் பள்ளி முடிந்ததும், வரும்


பாம்பும் காகமும்

 

 ஒரு காட்டில் அரசமரம் ஒன்று இருந்தது. அந்த அரசமரத்திற்கு கீழே பாம்பு புற்று இருந்தது. தினமும் காகமானது தன்னுடைய கூட்டிலே முட்டை ஈன்று விட்டு இரை தேட செல்லுமாம். காகம் மரத்தை விட்டுச் சென்றவுடன் கீழே இருக்கும் பாம்பானது மரத்திற்கு மேலே சென்று காகத்தின் முட்டையை உடைத்துக் குடித்து விடும். திரும்பி வந்து பார்க்கும் காகத்திற்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது. முட்டை வைத்து குஞ்சு பொறிக்க முடியவில்லையே என்று வேதனையில் துடித்தது. நாம் சென்றவுடன் தினமும்


மடுவும் மலையும்

 

 மேடையில் முக்கிய விருந்தாளியான என்னை பாராட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள் நான் உற்சாகமாய் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என்னை பற்றி பேசும்போது எனக்கு கூச்சமாக இருக்கும். இப்பொழுது அந்த மாதிரி உணர்வுகள் மறைந்து விட்டன. இவர்கள் என்னை பற்றி பேசாவிட்டால்தான் எனக்கு மிகுந்த வருத்தம். சில நேரங்களில் பேசுபவர்கள் என்னை பற்றி ஓரிரு வார்த்தைகள் புகழ்ந்து பேசாவிட்டால், நன்கு கவனித்து அவர்கள் அழைக்கும் விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவேன். நான் மிக முக்கிய அரசியல் பிரமுகர். இருந்தாலும்,


படிப்பும் பதவியும்

 

 “தம்பி, நீ பரீட்சைகள் எல்லாம் எழுதிப் பாஸ் பண்ணி, பட்டங்கள் வாங்கியிருக்கலாம். ஓயாது புத்தகங்களைப் படித்துப் படித்து அறிவு விருத்தி செய்துகொண்டிருக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருப்பதனாலே ஒண்ணும் நடக்காது. தபாலில் எழுதிப் போட்டு விடுவதனாலும் பிரயோசனமில்லை . பல பேரையும் நேரில் பார்த்துப் பேசிப் பழகணும். பெரிய மனிதர்கள் சில பேருடைய தயவு உனக்கு வேணும். இதெல்லாம் இல்லையென்றால், இந்த உலகத்தில் நீ நன்றாக வாழ முடியாது….” “வேலையில்லாதவன்” என்ற பட்டத்தோடு உலாவிய இளையபெருமாளுக்கு, அவனுடைய உறவினர்


மறுபடியும் மகாத்மா!

 

 அந்திக் கன்னி மஞ்சள் பூசிப் பொட்டிட்டுப் புன்னகை செய்து கொண்டிருக்கின்றாள் !. விடிந்தால், மகாத்மா காந்தி பிறந்த நாள்! ‘காந்தி மகாத்மா செத்து விட்டாரென்று எந்த பயல் சொன்னவன்? சேரிச் சாம்பான் தனக்குத் தானாகவும், தன்னின் தானாகவும் சிரித்துக்கொண்டார். சிரிப்பின் அலைகளிலே, மாறிய காலத்தின் – ஊகூம், மாற்றப்பட்ட காலத்தின் அதிசயம் சலசலக்கிறது! ஆவணத்தாங்கோட்டைத் தேவர் குடியிருப்பிலேருந்து ஊருக்கு ஒசந்த பெரும்புள்ளியான கண்டிச்சீமைக் கங்காணி ஐயா இங்கிட்டு ரேக்ளாவிலே வந்திருந்தாக; வெத்திலை பாக்குப் போட்டுக்கிட்டாக ; காந்தி


பொய் முகம்..!

 

 ” எந்த சிறுக்கிடி எம் புள்ளைய நாக்குல நரம்பில்லாம பேசினது…? தைரியமிருந்தா..என் முன்னால வந்து பேசுங்கடி…” அந்த மத்தியான வெய்யிலில் போவோர் வருவோரைப் பற்றிக் கவலைப் படாமல் பத்ரகாளி போல ஏழரைக் கட்டைச் சுருதியில் கத்தி கூப்பாடு போட்டாள் ராக்கம்மா. அந்தத் தெருவில் உள்ள எந்தக் குடிசையும் எட்டிப் பார்க்கவில்லை. ” ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சிருந்தா எம் முன்னால வந்து பேசுங்கடி பொட்டைங்களா…” திரும்பவும் அவள் அதே சுருதியில் கத்த…. ‘அட…! கத்தி அடங்கிப் போயிடுவா. இவகிட்ட


அவங்க வயித்தெரிச்சல் நம்மே…

 

 நாஷ்டா முடித்து விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்கு கிளம்பிணான் சரவணன். மெயின் ரோடு தாண்டும் போது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி ‘ஸ்பாட்டிலேயே’ இறந்து விட்டான். விஷயம் தெரிந்து ஓடி வந்தாள் தேவி. தரையில் ரத்த வெள்ள்த்தில் விழுந்து கிடைக்கும் சரவணனைப் பார்த்ததும் அவள் மயக்கமாய் கீழே விழுந்து விட்டாள். அவள் தன் நிலைக்கு வரவே இரண்டு நாளாயிற்று. பதினெட்டு வயதில் பெரிய பெண் ராணீயும்,ஒன்பது வயதில் சின்ன பெண் ராதாவும் தான் சர


மயில் வாஹணம்

 

  வாழ்வில் மிகச் சிலருக்குத்தான் அவர்கள் விரும்பியபடி, விரும்பியவுடன் இறப்பு என்பது எதிர் பார்த்தபடி நல்லவிதமாக அமையும். எதிர்பார்த்தபடி அவ்விதம் நம்முடைய இறப்பு சுமுகமாக அமைவது இறைவனின் சித்தம். அவ்விதம் இறப்பவர்கள் தன் வாழ்நாளில் ஏற்கனவே தொடர்ந்து பல நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பர். இந்தியாவில் அப்படி ஏகப்பட்ட மஹான்கள் மக்களுக்கு சேவைசெய்து மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் இறப்பு முன்கூட்டியே தெரிந்துவிடும். அவ்விதம் நம்மிடையே வாழ்ந்து இறைவனை விரும்பியபடி போய்ச் சேர்ந்தது திருமுருக


நட்புக்கு இலக்கணம் வகுத்த நாய்

 

 அது ஒரு இனிமையான மாலைப்பொழுது. எனினும் யோகாவுக்கு அது எந்த இனிமையையும் கொண்டு வரவில்லை. யோகா மிகக்கடுமையாக யோசித்தவாறு ஜன்னலுக்கு வெளியே நிண்டிருந்த வீட்டுத்தோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அப்போதிருந்த பிரச்சினையெல்லாம் அவளது அப்பாவை எவ்வாறு சந்தோஷமாக வைத்துக்கொள்வதென்பதுதான். அம்மா இறந்த பின் அப்பாவை எவ்வாறு தனிமையில் விடுவது என்று யோசித்த யோகா தன் கணவனது அனுமதியுடன் தம் வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டாள்.. ஆனால் இப்போது யோசிக்கும் போது அவரைக் கூட்டி வந்தது தப்பான