கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2020

89 கதைகள் கிடைத்துள்ளன.

மருத்துவம்

 

 செல்வி வெகுநேரமாக தனக்கு குழந்தை இல்லையே ஏன் என்ற சிந்தனையிலேயே இருந்தாள், இருவருக்கும் எல்லா மருத்துவரிடமும் போய் பார்த்தாச்சு, இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிட்டாங்க, கல்யாணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, பிறகு ஏன் எங்களுக்கு குழந்தை இல்லை. “செல்வி என்ன ரொம்ப நேரமா யோசித்துக் கொண்டிருக்கிறாய், இன்னைக்கு கோயிலுக்கு போகலாம் என்று சொன்னேன்ல மறந்துவிட்டாயா, ஏன் இன்னும் கிளம்பாம இருக்கிறாய்” “இல்லை ஸ்ருதி மறக்கவில்லை, கோயிலுக்கு போய் என்ன பலன் கிடைக்குது, கல்யாணமாகி


நொண்டிக் காக்கா!

 

 “என்ன ராஜா அப்படிப் பார்க்கர? நீ படிச்ச வெட்னரில இந்த காக்கா ஊனத்தை சரி பண்ண வழியிருக்கா பாரு” சிரித்துக் கொண்டே சோற்றை காக்கை கூட்டத்தில் வீசியெறிந்தார். தினமும் காக்கை, அணில் மற்றும் புறாக்களுக்கு உணவளிப்பதை வழக்காக கொண்ட ஆர்மி ரிடையர்டு சோல்ஜர். “இதுல ஒரு கண்றாவியான நிலைமை என்னன்ன நல்லா காலு இறக்கையியிருக்கிற காக்காவோட போட்டி போட்டு நொண்டி நொண்டி சண்டை போட்டு போட்டி போட்டு சாப்பிடனும். மத்த காக்கா பச்சாதாபம் காட்டாது தெரியுமோ?” என்று


இடதாரம் செடி – ஒரு பக்க கதை

 

 ஒரு கிராமத்தில் எள்ளை ஆட்டி எண்ணெய் எடுக்கும் செக்கானும் அவனுடைய மனைவியும் மகளும் குடிசையில் வாழ்ந்து வந்தனர். தினமும் செக்கான் ஆட்டிய எண்ணெய்யை கிராமத்து தெருக்களில் அம்மாவும் பொண்ணும் விற்று வருவார்கள். அப்படியொரு நாள் செக்கானின் மகள் எண்ணெய் விற்றுக்கொண்டே கையை வீசிவீசி வீதிகளில் வருகிறாள். அப்போது அந்தப்பக்கமாய் குதிரையிலே வீதியுலா வருகிறான் இராஜவின் மகன். கோவிலில் பட்டாசு சத்தம் கேட்டுக் குதிரை தறிகெட்டு ஓடுகிறது. வீதியிலே எண்ணெய் விற்று வரும் செக்கான் மகள் மேலே குதிரை


யாரை நோக முடியும்?

 

 எதிர்த்த வீட்டு பையனை பாரு, அவன் பையன். உன்னைய மாதிரியா, ஸ்கூல் விட்டதும் “டாண்ணு” வீட்டுக்கு வந்துடறான், அவனும் விளையாடத்தானே போறான், போய் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்து படிக்க உட்கார்ந்துடறானுல்ல ! நீயும் இருக்கியே, புக் எடுப்பனான்னு அழிச்சாட்டியம் பண்ணிகிட்டு இரூக்கே. ராம்குமார் அப்பொழுதுதான் படிக்க உட்கார்ந்திருந்தான். எதிர்த்த வீட்டில் சம்பத்தின் அப்பா அவனை திட்டிக்கொண்டிருப்பது இவன் காதில் நன்கு விழுந்தது. தன் பெயர் அடிபடுகிறதே என்று கொஞ்சம் கவனமாய் காது கொடுத்து கேட்டான்.


மனப் பிராந்தி

 

 இது ஒரு மனநோயாகத்தான் இருக்கவேண்டும். அல்லது. பைத்தியத்தின் ஆரம்பகட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுகிறது. ஆனால் ஒன்று மட்டும் நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். நான் ஒரு கோழை. பயந்தாங்கொள்ளி. ஆமாம். இதைப்பற்றி எனக்கு “இத்னியூண்டு சந்தேகம் கூடக் கிடையாது. நான் சூரப்புலி மாதிரி வாயடி அடிப்பதைச் சிலர் கேட்டிருக்கக் கூடும். அது எனது மனசின் அடிமட்டத்தில் பரவியிருக்கிற பயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக நான் கையாள்கிற தந்திரம்தான். இருட்டில் வெளியே செல்வது என்றாலே


கடல் முத்தே

 

 “காளி ஆத்தா பேரிலே ஆணையிட்டுச் சொல்லுறேன். அக்கரைச் சீமையிலேருந்து திரும்பியாந்ததும் உன்னைக் கட்டாயம் கண்ணாலம் கட்டிக்கிறேன், பவளக்கொடி?” தூணுடன் தூணாகப் பிணைந்து நின்ற பவளக்கொடியின் விம்மித் தணிந்த நெஞ்சில், அவ்வார்த்தைகள் எதிரொலித்தன. கடல் கடந்து செல்லும் மாலுமிக்குக் கலங்கரை விளக்கு உறுதுணையாக அமைவதுபோல், அன்று கடல் கடந்து சென்ற நடேசன் விடுத்துச் சென்ற ஆறுதல் மொழியை நேருக்கு நேர் நின்று நேற்றுச் சொன்ன மாதிரி அவள் உணரலானாள். சாயங்காலம் இருக்கும். கடை அலுவல்களைச் சீர் செய்துவிட்டுப் பவளக்கொடி


பங்கு கொடுப்பாரா அப்பா?!

 

 கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவன் கையில்…. தொற்றிக்கொள்ள ஒரு கட்டை கிடைத்தது போல…. வறுமையில் கணவனுடன் கவலையில் ஆழ்ந்திருந்த ரம்பாவுக்கு திடீரென்று அந்த எண்ணம் பளிச்சிட்டது. பற்றிக்கொண்டு நிரம்ப யோசித்தாள். மனதுக்குள் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டு வழி தென்பட்டது போலிருந்தது. ” என்னங்க..? ” அருகில் அமர்ந்திருக்கும் கணவனை மெல்ல அழைத்தாள். ”என்னம்மா..? ” கனகராசன் மெல்ல தலை நிமிர்த்திப் பார்த்தான். ” ஒரு யோசனை…? ” ” சொல்லு..? ” ” உங்க அம்மா அப்பா வசதியானவங்கன்னு சொன்னீங்கல்லே..?


என்ன உடம்பு உங்களுக்கு…

 

 சண்டிகாரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த ஊர். அந்த ஊரில் வசித்து வந்தார் ஹரி சிங்கும் அவர் மனைவியும். அவருக்கு நாலு ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தது. ஏரி கால்வாய் பாய்ச்சலில் வருடத்திற்கு ரெண்டு போகம் கோதுமை பயிர் இட்டு வந்து, அந்த ரெண்டு போக விளைச்சலில் வந்து கோதுமையை தன் வீட்டுக்கு வருடாந்தரத்துக்கு வேண்டிய கோதுமையை வைத்துக் கொண்டு மீதி கோதுமையை விற்று விட்டு, பணம் பண்ணி, தன் குடும்பத்தை நடத்தி


உழைப்பு

 

 “இப்பக்கூட ஒரு பிரச்னையும் இல்லை… அவளை மறந்துட்டு வரச்சொல்லுங்க. நான் பழசையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா அவரோட குடித்தனம் நடத்துறேன். ஆனால் நானும் அவளும் சேர்ந்து வாழறதோ; இல்லை அவங்க உறவை நான் ஒத்துக்கொண்டு போறதோ கண்டிப்பாக நடக்காத விஷயம் மிஸ்டர் விஜய்.” “நீங்க ஒத்துப் போகாட்டா, உங்களை அவர் விவாகரத்து பண்ணவும் தயாராக இருக்கார். அத நீங்க நெனச்சுப் பார்த்தீங்களா மேடம்?” மாலினி இகழ்ச்சியாய் சிரித்தாள். “என்னை பயமுறுத்திப் பார்க்கிறீங்களா விஜய்? நான் அவரைப் பிரியறேன்னு நினைத்து


சார்

 

 “சார்…, உங்கள ஓவர்பெல் அடிச்சதும் ‘கரஸ்பாண்டண்ட்’ பாத்துட்டு போவ சொன்னாரு சார்..,” ‘ஓ ஏ’ சொல்லிவிட்டு சென்றதிலிருந்து அன்பரசனின் உடலும் மனமும் ஒருசேர உதறிக் கொண்டிருந்தது. “ஹாஃப் இயர்லி எக்ஸாம் ரிப்போர்ட்ல 100% டார்கெட் அச்சீவ் பண்ணல., அதுவும் இங்கிலீஷ்ல மட்டும் மொத்தம் நாலு பேரு ஃபெயிலு., நாலு பேரும் ஆவரேஜ் ஸ்டூடன்ட்ஸ்தான் எவ்ளோ கோச்சிங் குடுத்தாலும் கொஞ்ச நேரத்துலயே மறந்துடறாங்க. கேக்கும் போது கரெக்டா ஆன்சர் பண்றாங்க ஆனா எக்ஸாம் பேப்பர்ல ஒண்ணுமே இருக்கறதில்ல.., குவார்ட்டர்லிலயே