கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 6, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

நிறைவு

 

 எதோ கிருமியாம். ஊரெல்லாம் பரவுதாம். தொட்ட பரவுமாம். நெருங்கி நின்னா பரவுமாம்.உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி நாடு நாடா சுத்துபவனெல்லாம் வீடடங்கி உட்கார்ந்திட்டான் நாடு நாடாய் கடந்து எங்க நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த கிருமியை பார்த்து.செய்திகளில் மட்டுமே கண்ணை விரித்து விரித்து பார்த்து வியந்த அந்த விசித்திர பெயர் கொண்ட கிருமி இன்று எங்கள் நாட்டையும் எட்டி விட்டது. ஒவ்வொரு உயிராய் பலி வாங்கும் அதன் ஆட்டத்தை ஆரம்பித்தது. என்னை வீழ்த்த எவன் என்று


யாரை நம்புவது? – ஒரு பக்க கதை

 

 அந்த. வக்கீல் ஆபிஸில் காத்திருந்தேன்.வக்கீல் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அவர் போன பிறகு வக்கீலுக்கு எதிரே உள்ள சேரில் அமர்ந்தேன். “சொல்லுங்க சார் என்ன விஷயம்?” என்றார் வக்கீல்.அவருக்கு வயது அறுபத்தைந்துக்குள் இருக்கும்.கிட்டத்தட்ட என் வயது தான். “சார் எனக்கு இரண்டு மகன்கள்.கல்யாணமாகி சென்னையில் குடும்பத்தோடு இருக்கிறார்கள்.நானும் என் மனைவியும் இங்கே இருக்கிறோம். எனக்கு இரண்டு வீடு,ஒரு தோப்பு இருக்கிறது.இப்போதே சொத்தை மகன்கள் பெயரில் எழுதி விடலாமா? என்று உங்களிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கேன்.” வக்கீல் என்னை உற்றுப்


நீந்தத் தெரிந்த ஒட்டகம்

 

 “இந்தியா மலேசியா பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் தொழிலாளி என்றால் அதிகம் கொடுக்க வேண்டும். கொஞ்சம் படிப்பு வாசனையிருக்கும். பங்களாதேஷ் பாகிஸ்தான் இந்தோனேசியா சம்பளமும் குறைவு.பள்ளிப் படிப்பு பாதி முடித்தோர் இருப்பார்கள்.” மஸ்கட் நகரில் வீட்டு வேலை, சமையல் செய்ய ஹவுஸ் மெய்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை என்றதற்கு ஏஜென்சி கொடுத்த தகவல்.அவர்கள் விளக்கம். “பரவாயில்லை பாகிஸ்தான் பங்களாதேஷ் “ஆக இருக்கட்டும் என்றேன். ஆகட்டும் ஓரிரு மாதத்தில் விசாவோடு வரவழைப்பதாய் ஏஜன்ட் சொன்னார்கள். “உன் பெயர் என்ன”


வெளவால் மனிதன்

 

 சில ஆண்டுகள் டிவி காட்சிகளில் தனது வீர, தீர செயல்களால் சிறுவர்களினதும் வயது வந்தவர்கனினதும் பாராட்டைப் பெற்ற வெளவால் மனிதன் ஹரி நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தான் . ஒரே மக்கள் கூட்டத்தின் குரல்கள் “ஒழிப்போம் ஒழிப்போம் வெளவால்களை ஒழிப்போம் . கொரோனா வைரசை எமக்கு தந்த வெளவால்களை ஒழிப்போம், நிறுத்துவோம் நிறுத்துவோம் . வெளவால்களை நாம் உண்பதை நிறுத்துவோம்” முகமூடியையும் ஆடையையும் களையாமல் படுத்த வெளவால் மனிதன் ஹரியை வெளவால் மனிதனின் தாய் லூசி எழுப்பினாள்.


பொய் இல்லாமல் ஒரு நாள்!

 

 இந்த நாகரிக உலகில், சின்ன சின்ன பொய்கள் மட்டும் பேசி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த என்னிடம் நண்பன் ஒருவன் தினமும் சொல்லும் பொய்களால் கோப்பபட்டு ஒரு நாள் உன்னால் பொய் பேசாமல் இருக்கமுடியுமா? என்று சவால் விட்டு விட்டான்.உடனே அவனிடம் நாளையே இருந்து காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டதால், நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமா?..முதலில் தண்ணீர் பஞ்சம் என்னை சோதித்தது. ஏங்க தண்ணி வர்ற லாரி வந்துருச்சான்னு பார்த்துட்டு வாங்க? வரலையின்னா எப்ப வருமுன்னு கேட்டுட்டு


சிலந்தி

 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிதம்பரத்தின் உடல் இன்னும் நடுங்கக கொண்டிருந்தது, உள்ளத்தின் பதை பதைப்பும் ஒடுங்கிவிடவில்லை. அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டு விழித்தெழுந்தான். பரபரவென்று போர்வையை உதறினான். அவனை அப்படி எழுந்திருக்கும்படி தூண்டியது….. அது தான் அவனுக்குப் புரியவில்லை . அது வெறும் கனவா? நனவு தூண்டிய உணர்வா? அல்லது, உள்ளுணர்வு தந்த அபாய அறிவிப்பா ? கனவு என்றால் – நிஜமாக முன் நின்றது அதை


தாயின் மணிக்கொடி

 

 அதோ, எக்ஸ்பிரஸ். சென்னை – கொச்சி எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் ஓட்டமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது! அவன்….? யாரோ ஒருவன்! என்னவோ ஒரு பேர்! ஏதோ ஓர் ஊர்….. ஊர் என்றவுடன் – ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’ என்று பாட்டு ஓட்டமாக ஓடிவரவேண்டாமோ? அவன் …. கிடக்கிறான்! எக்ஸ்பிரஸ் வேகம் அதிகமாகிறது. ஜாக்கிரதை! நாட்டிலே இப்போதெல்லாம் ‘ரோஷ உணர்ச்சியைப் பற்றி ரொம்பவும் தூக்கலாகவே பேசப்பட்டு வருகிறது. அதனால்தானோ என்னவோ, அந்தத் துரிதவண்டி கொச்சியைக் குறிவைத்துப் பூஞ்சிட்டாகப் பறக்கிறது; பறந்து கொண்டிருக்கிறது.


கருணைக்காக..!

 

 இருட்டில் ஒதுக்குப்புறமாக நின்ற லாரியில் ஓட்டுநர் சாமிக்கண்ணு வயசு 40 ஏறி கிளம்பியதும் …. அவசர அவசரமாக ஓடி வந்த உதவியாளர் மதி வயசு 25 தாவி ஏறி… ” என்னண்ணே..! வண்டியை அதுக்குள்ளே கிளப்பிட்டீங்க…? ” கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தான். ” வேலை முடிஞ்சிபோச்சில்ல. நேரா நேரத்தோட போக வேண்டாமா..? அடுத்த வேலை கும்பகோணத்துல சரக்கு ஏத்தி சென்னைக்குப் போகனும். சரி சரி கதவை நல்லா அடிச்சி சாத்து. ” என்ற சாமிக்கண்ணு அடுத்ததாக…. ”


பேரெ சுருக்கி ’ஜெண்ட’ரெ மாத்தி எல்லாம்…

 

 சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம ‘க்ளாஸ்’ படித்து வந்த ராதாகிருஷ்னன் குளிக் கும் போது ஒரு வாரமாகவே தன் உடம்பைக் கவனித்து வந்தான். அவனுக்கே கொஞ்சம் பயமாய் இருந்தது. ‘எப்படி இதை நாம் சொல்றது.முதல்லே நம்ம அம்மா கிட்டே சொல்லலாமா, இல்லே அப்பா கிட்ட சொல்லலாமா’ என்று யோஜனைப் பண்ணி வந்தான். ‘எதுவாய் இருந்தாலும் இந்த கோடை விடுமுறை முடியறதுகுள்ளே இதை நாம் சொல்லியே ஆகணும்” என்று நினைத்து ‘நாம முதல்லே நம்ம அம்மா கிட்டேசொல்லலாம்’ என்று


கொரோனா

 

 “டாக்டர், நான் ‘சையின்ஸ் டுடே’ எடிட்டர் தியாகு பேசறேன்… நாங்க கொரானா பத்தி விஞ்ஞான பூர்வமாக ஒரு கட்டுரை உங்களிடம் கேட்டிருந்தோம். ஆனால் நீங்கள் தத்துவார்த்தமாக ஒரு கட்டுரை எழுதி அனுப்பி விட்டீர்கள்… ஏன் டாக்டர்?” “இதுதான் இப்போதைய உண்மை தியாகு. உலகமே கொரானா பற்றி செய்வதறியாமல் திகைத்துப்போய் கிடக்கிறது. அதனால்தான் உண்மையை எழுதி அனுப்பினேன்… முடிந்தால் பப்ளிஷ் பண்ணுங்க, இல்லைன்னா வேண்டாம்…” டாக்டர் ஜெயராமன் மொபைலைத் துண்டித்தார். எடிட்டர் தியாகு மறுபடியும் ஒருமுறை டாக்டர் ஜெயராமனின்