Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2020

212 கதைகள் கிடைத்துள்ளன.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்!

 

 பூங்குன்றனாரைப் பார்க்க வந்தார் ஒரு நண்பர். சிட்டுக் குருவி போல் கவலையற்ற வாழ்வு வாழ வழி கூறும்படி கேட்டார். புலவர் தம் பொன்னுரையைத் தொடங்கினார். “எல்லா ஊரும் நம் ஊரே! எல்லோரும்: நம் உறவினர் ! தீமையும் நன்மையும் பிறர் கொடுக்க வருவதில்லை நம்மால் ஏற்படுவன! துன்பம் வருவதும் அதைத் துடைத்துக் கொள்வதும் நம் செயலால் ஏற்படுவது! வெள்ளம் ஓடுகின்ற திசையில் மிதந்து செல்லும் தெப்பம் போல், இறைவன் எண்ணம் ஓடும் திசையில் உயிர்ப்புணை மிதந்தோடும்! திறந்தெரிந்த


பல்லாண்டு வாழ்வது எப்படி?

 

 பல்லாண்டுகளாக நரையின்றி வாழ்தல் எப்படி? என்று கேட்கின்றீர்கள் சொல்கிறேன், கேளுங்கள்: மனைவி நற்பண்பு நிறைந்தவளாய் இருக்க வேண்டும். அவளுக்குப் பிறந்த பிள்ளைகளும் அப்படியே விளங்க வேண்டும்… ஏவலாளரோ, தான் எண்ணுவது போன்றே எண்ணிப் பணிபுரிய வேண்டும். காவலாளனாகிய வேந்தனும், நாம் வீட்டைக் காப்பது போன்றே நாட்டைக் காக்கவேண்டும். அது மட்டுமா? ஊரில் வாழும் சான்றோர், அடங்கிய கொள்கையுடைய ஆன்றோராய்த் திகழ வேண்டும். அப்புறம் நரை ஏன் வரும், திரை ஏன் வரும், குறை ஏன் வரும்? -


உண்பது ஒரு நாழி!

 

 நக்கீரர் குளித்து காலைக் கடன்களை முடித்து விட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். அவரது மாணவன் வந்தான். வணங்கி விட்டு உட்கார்ந்தான். ”குருவே” என்றான் மாணவன். “நேற்றைய பாடத்தில் ஐயம் ஏதேனும் உண்டா ?” “ஒரு சந்தேகம். பொருளைப் பெருக்க வேண்டும் என்றீர்கள். உண்மை விளங்கியது. ஆயினும் பலர் குங்குமம் சுமக்கும் கழுதையாக இருக்கிறார்கள். பொருளைத்திரட்டி வைத்துப் பார்த்து மகிழ்வதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டுமா?” நக்கீரர் விளக்கம் கூறத் தொடங்கினார். “உலகத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் வைத்து


மயக்கும் மக்கள்

 

 பாண்டியன் அறிவுடைய நம்பி தன் ஆருயிர் நண்பர் வீட்டிற்குச் சென்றார். அன்று அங்கு அரசனுக்கு விருந்து. அழகான வீடு. ஏழடுக்கு மாளிகை. பொன் மணிகள் எல்லாம் நிறைந்திருக்கின்றன. அரசனோடு விருந்துண்ணப் பலர் வந்திருக்கிறார்கள். உணவு பரிமாறப்படுகிறது. அரசன் உண்ட பின்னரே பிறர் உண்ண வேண்டும். எல்லாரும் அரசனையே பார்க்கிறார்கள். அரசனோ ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறான். ” மன்னர் பிரானே ” என்றார் நண்பர். “ஆருயிர் நண்ப உனது வீட்டில் மகிழ்ச்சி இல்லை.” “ஆ ஆ.” ”ஆம். உண்மையாகவே மகிழ்ச்சி


நல்ல நாடு

 

 “அரசே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுவாயா?” என்றாள் ஒளவை. “கேள், பார்க்கலாம்” என்றான் அதிகமான். “நல்ல நாடு எது?” “ப்பூ, இதுதானா கேள்வி. அழகான ஊர்கள், நகரங்கள் இருக்கவேண்டும். வானளாவிய மாளிகைகள் இருக்க வேண்டும்.” “இல்லை, இல்லை” “பெரிய காடுகள் நிறைந்திருக்க வேண்டும். காடுகள் நாட்டிற்கு நல்ல அரணாக விளங்கும்”. “அதுவும் இல்லை ” “இப்பொழுது சொல்லி விடுகிறேன். நாடு, மேட்டு நிலமாக இருக்க வேண்டும். அப்படியானால் மழையாலோ வெள்ளத்தாலோ பாதிக்கப்படாது” “மழை பெய்யா விட்டால்?”


உலகிற்கு உயிர் எது?

 

 “ஒளவையே” காலையில் உன்னைத் தேடினேன் காணவில்லை. எங்கே போயிருந்தாய் ” என்றான் மன்னன் அதிகமான். “ஆற்றில் புது வெள்ளம் வந்திருக்கிறது” “வயல்களுக்குத் தண்ணீர் திறந்து விட்டிருக் கிறார்களா?” “ஆமாம் வயலில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்” ”அப்படியானால் அச்சமில்லை . நெல்லும் நீருமே நம் நாட்டிற்கு உயிர்.” “இல்லை அரசே இல்லை. நெல்லும் உயிரல்ல; நீரும் உயிரல்ல; மன்னனே நாட்டிற்கு உயிர் நீ தான். இந்நாட்டிற்கு உயிர். இதனை உணர்ந்து நடப்பதே உன் கடன்.” – மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள்


ஓட்டுவோன் ஓட்ட வண்டி ஓடும்!

 

 அழகிய சக்கரங்கள். உருண்டு திரண்ட அச்சு. வளைவில்லாத வண்டி. இளம் எருதுகள் பூட்டப் பட்டுள்ளன. வண்டியை இழுத்துச் செல்லத் துடித்துக் கொண்டிருக்கின்றன. வண்டி யோட்டி இல்லையே. வண்டியின் கதி? பள்ளத்தில் விழுந்து விடுமே. எல்லாம் நொறுங்கி விடுமே. ஆகா, அதோ வண்டிக்காரன் வந்துவிட்டான் தூள் துள்ளிக் குதித்து வண்டியில் ஏறுகிறான். வண்டி பறக்கப் பாய்ந்து ஓடுகிறது. அனால் இப்போது கவலை இல்லை. உலகம் பெரிய வண்டி. அதனை ஓட்ட நல்ல வண்டிக்காரன் வேண்டும். அவன்தான் அரசன் –


முறையாகத் திறை கொள்க!

 

 காய்ந்த நெல்லை யறுத்து அடித்து, குற்றிச் சமைத்துக் கவளங் கவளமாய்த் திரட்டி யானைக்கு உணவு அளித்தால் சிறு நிலத்தில் விளைந்த நெல்லும் பல நாள் உணவாகும்! நூறு காணி நிலமாயினும், யானையை மேய விட்டால், அது தின்பது குறைவாகவும், அதன் கால்கள் அழித்து மிதிப்பது அதிகமாகவும் இருக்கும். ஆகையால் அரசனும் முறையறிந்து திறை கொண்டால் நாடு நிறைவு கொண்டு வாழும் இன்றேல் குறைவு கொண்டு விழும்! – மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட்


கற்றல் நன்றே!

 

 ஆசிரியனுக்கு ஏற்படும் துன்பத்தைத் துடைக்க வேண்டும். வேண்டும் பொருளை விரைந்து கொடுக்க வேண்டும். அடங்கிக் கல்வி கற்றல் நல்லது. ஏன்? தாய் தன் வயிற்றிற் பிறந்த மக்களுள் கற்ற மகனையே விரும்புவாள் ! ஒரு குடியிற் பிறந்தவர்களுள், மூத்தவன் வருக என்று அழைக்காமல், கல்வி கற்றவன் வருக என்றே அவையினர் அழைப்பர் அறிவுடையோன் சென்ற வழியே அரசனும் செல்வான். நால்வகை சாதியாரில் மேல் சாதிக்காரர், கற்றிலராயின் தாழ்ந்தவராகி கெடுவர்! கீழ்ப்பட்ட ஒருவன் கல்விகற்றிருப்பின், அவனை மேல் சாதிக்காரனும்


உலகம் இருக்கின்றது!

 

 அமுதமே கிடைத்தாலும், அதனைத் தனியே இருந்து உண்ணார். சினங்கொள்ளார். யாரையும் ஏளனம் பண்ணார். சோம்பல் அற்றவர். பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்; புகழ் கிடைப்பின் உயிரும் கொடுப்பர்! பழியெனின், உலகமே கிடைத்தாலும் விடுப்பர்! அயர்வு அற்றவர். தாம் வாழ வாழாது, பிறர் வாழ வாழும் பெருந்தகையாளர் அவர்! அவராலன்றோ , உலகம் நிலை பெற்று வாழ்கின்றது! – மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்