Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2020

212 கதைகள் கிடைத்துள்ளன.

நீயும் வா

 

 தோயமான் மாறன் மாளிகை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார் மதுரைக்குமரனார். வழியில் பாணன் ஒருவன் எதிர்ப்பட்டான். புலவர் நெஞ்சம் நெகிழ்ந்தது. “பாணனே! நீ எம்மோடு வருக! தோயமான் மாறன் வரையாது கொடுக்கும் பெருமை உடையவனுமல்ல; இல்லை யென்று மறுக்கும் சிறுமையுடையவனும் அல்லன். நாம் அவனைக் கொண்ட கேட்கப் போவோம்! அவன் உலைக் களத்திற்குப் படைக் கருவி கேட்கப் போவான். அவன் உடலெங்கும் போர்ப்புண் பட்டவடுக்கள் மருந்து கொள்ளப்பட்ட மரம் போல் தோன்றுவான் வடுக்கள் அவனுக்கு வசை இல்லை.


கீரஞ்சாத்தன் வீரம் பெரிது!

 

 கீரஞ் சாத்தன் ஒரு குறுநில மன்னன். அவனைப் பார்க்கச் சென்றார் ஆவூர் மூலங்கிழார். சாத்தன் பண்பு அவர் நெஞ்சைக் கவர்ந்தது. கீரஞ்சாத்தன் உண்ணும் போது யாரேனும் போனால் இழுத்து உட்கார வைப்பான். இலை போடுவான். சோறு வைப்பான். உண்ணும்படி வற்புறுத்துவான். வந்தவர் உண்ட பின்னரே தான் உண்பான். போர்க் களத்தில் முன் நிற்பான். வீரர் சிலர் கள் குடிக்கும் போது வீரம் பேசி விட்டு களத்தில் புறங்காட்டி ஓட முயல்வர். கீரஞ்சாத்தன் அவர்களுக்கும் அரணாக நிற்பான். பகைவரையும்


நெஞ்சம் திறப்பவர் நின்னைக் காண்பர்!

 

 ஆதனுங்கன் வேங்கடமலைத் தலைவன். ஞாயிறு மண்டலத்தைப் போன்றவன். யாவரையும் காப்பதையே தன் கடமையாகக் கொண்டவன். அவனைத் தந்தையாகக் கொண்டு வாழ்ந்தார் ஆத்திரையன் என்னும் புலவர். அவனையே நினைத்தார். அவன் புகழையே பாடினார். அவர் நெஞ்சில் வேறு யாருக்கும் இடமில்லை. ஆதனே, எந்தையே நீ வாழ்க! என் நெஞ்சைப் பிளப்பவர் அங்கே உன்னைத்தான் காண்பர். உன்னை நான் மறவேன். அப்படியே மறப்பதாயின் மறக்கும் நாள் நான் இறக்கும் நாளாக இருக்கும்” – மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு


பண்ணன் வாழ்க!

 

 கிள்ளி வளவன் பண்ணன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் கொடையின் பெருமையைத் தெரிந்தான். உள்ளம் மகிழ்ந்தான். வாழ்த்தினான். “நான் வாழும் நாள் வரை பண்ணன் வாழ்க! பழுத்த மரத்தில் பறவை கட்டி ஒலிப்பது போல் உண்பவர் ஆரவாரம் கேட்கிறது. அதோ செல்கின்ற அந்தக் கூட்டத்தை பார்ப்போம். முட்டை எடுத்துத் திக்கை நோக்கி ஏறும் எறும்புக் கூட்டம் போல், சிறுவர்கள் சோற்றுத் திரள்களை ஏந்தி வரிசையாய்ச் செல்கின்றனர். பண்ணன் கொடுத்தான் என்று அவர்கள் வாய் பாடுகின்றது. பசிப் பிணி


ஏற்றுக உலை! ஆக்குக சோறு!

 

 “ஏடீ விறலி” என்று பாணன் ஆசையுடன் கூப்பிட்டு கொண்டு வந்தான். ஓடி வந்தாள் விறலி. உலையை யேற்று. சோற்றை ஆக்கு. விறலியே, கோதைகளைப் புனைந்து கொள்” பிட்டங் கொற்றனா இவ்வளவையும் கொடுத்தார்?” “பிட்டன் வெற்றி பெற்று விட்டான்! அவன் வாழ்க! அவனது மன்னன் வாழ்க . அவன் மட்டும் என்ன? அவன் பகையும் வாழ்க! பகையின்றேல் வெற்றி ஏது? நாம் பாடும் பெற்றி ஏது? – மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002


இன்று போல் என்றும் வாழ்க!

 

 காரிக் கண்ணர் பிட்டனைப் பார்க்கச் சென்றார். இரவலர் பிட்டனை நாள்தோறும் வந்து மொய்த்தனர். சலிப்பின்றிப் பொருள் வழங்கினார். அவன் பேராண்மை வாய்ந்தவன். தன் தலைவன் விருப்பப்படியே போர் செய்து வெற்றி பெற்றான். அவன் வழங்கும் பரிசுகளுக்கு அளவே இல்லை. தொழுப் பசுவையே கேட்டாலும் கொடுத்து விடுகிறான். களத்தில் குவித்த நெல்லைக் கேட்டால் அவ்வளவையும் அள்ளிக் கொடுத்து விடுகிறான். அணிகலனோ, யானையோ எது கேட்டாலும் கொடுக்கிறான். அவனது கொடைக் குணத்தைக் கண்ட புலவர் “அவன் காலில் சிறு முள்ளும்


பிட்டங் கொற்றனின் பெரும் புகழ்!

 

 பிட்டங் கொற்றன் சேரனின் படைத் தலைவன். குதிரை மலைத் தலைவன். அவன் நாட்டில் பன்றி உழுத நிலத்தில் தினை விதைப்பர். முற்றிய கதிரை அறுத்து அடித்துத் தினையைக் குற்றுவர். மான் கறி வாசனை வீசும் பானையைக் கழுவாமல் காட்டுப் பசுவின் பாலை ஊற்றுவர். தினை அரிசியைப் போட்டுச் சந்தன விறகால் எரித்து சோறு ஆக்குவர். வடித்து எடுத்து வாழை இலையில் போட்டுக் கூடி இருந்து உண்பர். இத்தகைய வளம் உடைய நாட்டு மன்னனான பிட்டன் கூரிய வேலன்.


மதிப்பு யாருக்கு?

 

 திருக்கிள்ளியே! உன் உடல் முழுதும், வாள் உழுது வடுப்பட்டுள்ளது. அதனால் நீ அழகு குறைந்தவன். ”கண்ணுக்கு இனியன் அல்லன். ஆனால் காதிற்கு இனியன். ஆனால் உன் புகழ் பெரிது. ஏனெனில் உன் பகைவரோ, உன்னைக் கண்டால் அஞ்சிப் புறங்காட்டி ஓடுவர். ஆதலால் உடலில் புண் இல்லை . கண்ணுக்கு இனிய காட்சியளிப்பான். ஆனால் அவர்கள் செவிக்கு இன்னாதவர். நீயும் ஒன்றிலே இனியன். அவர்களும் ஒன்றிலே இனியர். ஆயினும் உன்னை மட்டும் தானே உலகம் மதிக்கிறது. – மாணவர்களுக்குப்


இளங்குமணா, என் செய்தாய்?

 

 இளங் குமணன் தன் அண்ணன் குமணனை விரட்டி விட்டு, அரசுக்கட்டில் ஏறினான். கொடை வள்ளலாகிய குமணன் காட்டிற் சென்று, தலை மறைவாய் வாழ்ந்து வந்தான். பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், காட்டிற்குச் சென்றார். குமணனைக் கண்டு பாடினார். அப்பொழுது குமணன் கையிற் பொருள் இல்லை! அவன் தன் வாளை உருவி புலவரிடம் கொடுத்துத் தன் தலையை அரிந்து எடுத்துக்கொள்ளுமாறு கூறினான். “என் தலையை எடுத்துக்கொண்டு போய் என் தம்பியிடம் கொடுத்தால் அவன் பொன் கொடுப்பான் என் தலைக்கு,


எல்லோர்க்கும் கொடு!

 

 பெருஞ்சித்திரனார் இல்லம். வண்டியிலிருந்து பொன் மணிகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கின்றனர். பட்டாடை அணிந்து பல வகைப் பொன் அணிகளைப் பூட்டிய கோலத்தோடு பெருஞ்சித்திரனார் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் மனைவி மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறாள். பெருஞ்சித்திரனார் கூறுகிறார்: “ஆருயிரே அனைவர்க்கும் பகுந்து கொடு. கடன் கொடுத்தவர்க்குக் கொடு. உன் தோழியருக்குக் கொடு. இனத்தவரை அழைத்து வந்து அள்ளிக் கொடு. யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்று நினைக்காதே. எல்லார்க்கும் கொடு முதிரமலைத் தலைவன் குமணன்