கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 20, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆடம்பரம்

 

 அசோக் தன் மனைவி அன்பரசியோடு சென்னை வந்து சேர்ந்தான். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்தது, அன்பரசி ஆறு மாதம் கர்பிணியாக வேறு இருந்தாள், தனக்கு சொந்தமாக கடை இருக்கிறது, என் பெயரில் சொத்துக்கள் நிறைய இருக்கிறதென்று சொல்லி அன்பரசியை திருமணம் முடித்தான், ஆனால் திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் அவன் ஏமாற்றியது எல்லாம் வெளியில் வந்தது. கடை அவன் சொந்த கடை இல்லை, ஐந்தாயிரம் சம்பளத்திற்கு அந்த கடையில் அவன் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறான்,


எண்ணம்

 

 “அப்பா, அப்பா இன்னைக்கு நம்ம தாத்தா, பாட்டியைப் பார்க்க போறாமா? அவங்க ஊர் எப்படி இருக்கும் அப்பா? சொல்லுங்க பா? சொல்லுங்க? என்று வினாவினாள், ஐந்து வயது சிறுமி ஊர்மிளா. “அதுவா, நம்ம அங்க தான, போறோம் நீயே பாப்ப! என்று அவளை அமைதிப்படுத்தினார் அப்பா. எல்லா பொருள்களையும் எடுத்துக் காரில் போட்டுக்கொண்டு அவர்கள் புறப்பட்டனர். ஊர்மிளாவின் ஆவளால் வண்டியில் அவளால் அமைதியாக இருக்கவே முடியவில்லை. ஏதாவது ஒவ்வொன்றாக கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தாள். (நகரத்தை விட்டு


வெளிநாட்டு வாழ்கை – ஒரு பக்க கதை

 

 ராகுல்,அவன் மனைவி தீபா,குட்டிப் பாப்போவோடு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்கள்.எங்கள் கம்பெனியிலிருந்து அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொல்ல முடியாது அங்கேயே செட்டில் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காக அவன் வீட்டிற்கு சென்றோம். ” ஸாரி சார்! நாங்க யு.எஸ். போக வேண்டாம்னு முடிவு செய்திருக்கோம்.” என்றான் ராகுல். “என்னாச்சு ராகுல்? என்ன காரணம்?” ” அது ஒன்றுமில்லை சார்! அங்கே போனா அங்கே உள்ள கல்ச்சருக்குதான் நம்ம பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை


முடிவுகள் திருத்தப்படலாம்

 

 மனைவியின் மூலமாக சாமிநாதன் காதுக்கு அந்தச் செய்தி வந்தபோது ‘ஏய் அதெல்லாம் இருக்காது’ என்று மறுத்தாலும் கொஞ்ச நாளாவே ஊருக்குள்ளே அரசல்புரசலாக பேசுறதை அவர் அறிவார். “அட ஏ நீங்க வேற… ஊரே பேசுது… ஒங்களுக்கு தெரிஞ்சாலும் நொள்ளைன்னுதான் சொல்லுவியா… நெருப்பில்லாம பொகயாதுங்க…” அரிவாள்மனையில் கத்திரிக்காயை வெட்டியபடி பேசினாள் சவுந்தரம். “அட இவ ஒருத்தி… நெருப்பில்லாம பொகயாது… சட்டியில்லாம வேகாதுன்னு… நாலு பேரு நாலுவிதமாப் பேசுனா உண்மையாயிருமா என்ன..?” “உண்மையிருக்கக்கண்டிதானே பேசுறாக… வடக்கித் தெருப்பக்கமெல்லாம் நாலஞ்சி நாளா


தாத்தா

 

 தாத்தா தனக்கு இப்படி ஒரு பிரச்சினை ஆகி விடுவார் என்று நினைக்கவில்லை. என்ன செய்வது, கவலையில் ஆழ்ந்து விட்டான் ரமேஷ். அப்பாவின் அப்பா, இது நாள் வரை தன் பாதுகாப்பில் இருந்தார். ஆனால் இப்பொழுது ரமேஷுக்கு அருமையான வாய்ப்பு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைகழகத்திற்கு விரிவுரையாளராக அழைத்திருக்கிறார்கள். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. அவனுடைய படிப்பு, தகுதி. உழைப்பு, அவன் சமர்ப்பித்த கட்டுரைகள், ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவனை எங்கள் பல்கலை கழகத்தில் பணிக்கு வாருங்கள்