கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 14, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

அன்னையின் நிழல்

 

 மிருதுவான காலை இருளின் அணைப்பில் உலகம் துயில்கிறது. கிழக்கின் விளிம்பில் வெளிச்சக்கோடுகள் கோலமிடாத போதிலும், பட்சி ஜாலங்களின் ஆர்ப்பரிப்பு முதிர்ச்சியடைந்த இரவின் அமைதி உதிர்ந்து கொண்டிருக்கின்றது. வீதியின் ஓரமிருந்து உட்புறம் நோக்கிச் செல்கின்ற ஒரு குறுகலான சேற்றுப் பாதை, நதிக் கரையோரம். கறுத்த ஜலதாரை தொங்களில்….! பலகைச் சுவர்களைக் கொண்டு நெரிசலாக கல்லறைகள் போல் காட்சியளிக்கும் குடிசைகள். கதவை வேகமாக மூடிவிட்டு, வெளியில் வந்து வாசலில் அதிர்ச்சியடைந்தவளாக நிற்கிறாள் றெஜினா மாமி. மனக்கடலில் கொந்தளிப்பு. தலையை அணைக்கும்


கொரோனா வைரசும் கிரகவாசியும்

 

 கேம்பபிரிட்ஜ் பல்கலை கழக உயிரியல் மருத்துவத்துறை பரிசோதனை கூடத்தில் உலக மக்களின் உயிர்களை பல நாடுகளில் பலி எடுக்கும் கொரோனா வைரசுசுக்கு மாற்று மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் மருதுவத் துறை விஞ்சானிகள் தீவீரமாக இரவு பகலாய் ஆராச்சி செய்து கொண்டு இருந்தனர் . அவர்களில் சிலர், இங்கிலாந்து , பிரான்ஸ். இந்தயா இலங்கை , சீனா. கனடா தேசத்தை சேர்ந்தவர்கள் . அவர்களில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழன் கார்த்திக்கும் ஒருவர். அவர் படித்தது யாழ்ப்பாணம்


வார்த்தைகளின் வலி

 

 நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள். நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி கூறினான். அவன் சொல்வதை புரிந்து கொண்ட மாலதி அமைதியாக நின்று அவன் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தாள். நரேன் பேசி முடித்ததும், “மாலதி அப்பாதான் பேசினாங்க, அண்ணனுக்கு கடன் அதிகாமாகி விட்டதாம், அதனால் ஊரில் வாங்கிப் போட்ட நிலங்களை விற்றுத் தரும்படி கேட்கிறானாம், அப்பாவும் சரி என்று சொல்லிட்டாங்க, அதில் நமக்கும் சமபங்கு கொடுக்கச் சொல்லியிருக்காராம்” என்றான்.


கரோனா பேசுகிறேன்

 

 கரோனா, நான்தான் பேசுகின்றேன். என்னால் உங்களுக்கு தொந்தரவா? கண்ணுக்குத்தெரியாமல் காற்றில் கலக்ந்து சுவாசத்தில் நுளைந்துவிடுகின்றேன் என்று பேசிக்கொள்கிறார்கள். முற்றிலும் பொய் நம்பாதீர்கள். நான் ஓர் தொற்றுக்கிருமி. என்னைத்தொட்டால் பற்றிக்கொள்கிறேன். தும்மலுடன் வந்து ஒட்டிக் கொள்கிறேன். இருமலுடன் செருமப்பட்டு வெளி வருகின்றேன். சுத்தமாக இருந்தால் சத்தமில்லாமல் போய்விடுகின்றேன். என்னை அழிக்க நீங்கள் வேறெதுவும் செய்ய வேண்டாம். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். எங்கிருந்து வந்து உங்கள் உடலில் புகுந்து கொண்டேன்? வவ்வால்களை உண்ட பாம்பிலிருந்து வந்ததாக கூறுகின்றார்கள். வவ்வால்களுக்கு


ஹவுஸ் புல்

 

 இந்த கதையில் உங்களையும் ஒரு கதாபாத்திரமாக்கலாம் என நினைத்துள்ளேன். இந்த சாதாரண எழுத்தாளன் உங்களை கதாபாத்திரமாக்குவதால் சாதாரணமான கதாபாத்திரமாக, ஆக்குவேன் என நினைத்து விடாதீர்கள். பெரிய இடத்து பிள்ளைகள் நீங்கள். உங்களுக்கு வயது இருபத்தி இரண்டு அல்லது ஒன்றாக இருக்கலாம், பெண்ணாக இருந்தால் ஏராளமான அழகை வைத்து இளைஞர்களை கிறங்கடித்து கொண்டிருக்கிறீர்கள், ஆணாக இருந்தால் கட்டுமஸ்தான, “ரொமான்ஸ்” பாய் என்று இளைஞிகளால் செல்லமாக அழைக்கப்படும் இளைஞனாக இருக்கிறீர்கள். இப்படி இருக்கும் நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்று சொன்னால்