கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 5, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

மஞ்சள் குளித்த மாலைப்பொழுதில்

 

 மஞ்சள் குளித்து சிவந்த வானமானது சூரியன் கடலை நோக்கி மெல்ல இறங்க இறங்க மேலும் சிவந்து கொண்டிருந்தது. அந்த வானம் சிவந்து கொண்டிருப்பதைப் போலவே நிரோஷனின் மனதும் சிவந்து கொதித்துக் கொண்டிருந்தது. அவன் அந்த கடற்கரைக்கு வந்து பத்து நிமிடங்கள் ஆகின்றன. சரியாக ஐந்தரை மணிக்கு வந்துவிடுவேன் என்று கூறிய வசந்தாவை இன்னும் காணவில்லை. இந்தப் பத்து நிமிடங்களாக அவன் மனம் “தவியோ தவி” என்று தவித்துக் கொண்டிருந்தது . அவள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அவன்


அமாவாசை

 

 நிலாச்சோறு – 2 “அம்மா , அம்மா ” என்று கத்திக்கொண்டே ஓடிவந்தான் ஸ்ரவன். அவன் தாய் யசோதா சற்றே பதறிவிட்டாள். “ஸ்ரவன் கண்ணா, என்னப்பா என்னாச்சு.” என்று கேட்டபடியே சமையலறை விட்டு அவளும் வேகமாக வெளியே வர. தாயும் மகனும் முட்டிக்கொண்டனர்.. அறை வாயிலில். அவன் கீழே விழப்போக. ஸ்ரவனை தாங்கிப்பிடித்தான் கிரிஷ் .. ஸ்ரவனின் தந்தை. “எதுக்கு இப்படி அம்மாவும் பையனும் முட்டி மோதிக்கறீங்க. ? ” என்று இருவரையும் அவன் வினவ. “இவன்


கற்பு

 

 கையில் டீ டம்ளரோடு அமர நாற்காலி தேடி கடந்த 5 நிமிடங்களாக ஆணும் பெண்ணும் குழு குழுவாக அமர்ந்திருக்கும் அந்த சிற்றுண்டியகத்தின் நால பக்கமும் தன் கண்களால் துளாவி தனக்கும் தன் தோழிக்கும் அமர இருக்கை தேடி கொண்டிருந்தது குமுதினியின் விழிகள். தினமும் சாயந்திரம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை இப்படி தான் அந்த சிற்றுண்டியகத்தில் கூட்டம் நிரம்பி வழியும். அதனாலேயே குமுதினியும் ஷாகனாவும் பெரும்பாலும் நான்கு மணிக்கு மேல் தான் காப்பி சாப்பிட


மனந்திருந்தல்

 

 அதிகாலை நேரம் பூக்களும் கதிரவனைக் கண்டதும் மகிழ்வோடு மலர்ந்தன, குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பூங்காவில் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர். அறிவு நடைப் பயிற்சிக்கு வந்தவன், அங்கிருந்த பெஞ்சில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல், எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான். வளன் அவன் நண்பன், பலமுறை அழைத்தும் திரும்பாமல் அமர்ந்திருந்தான், வளன் அவன் அருகில் வந்து, “டேய் அறிவு, என்னடா ரொம்ப நேரமாக கூப்பிடுகிறேன், காது கேட்காதது போல் அமர்ந்திருக்கிறாய்” என்று


முகம் அறியா எதிரி

 

 தன்னுடைய பர்செனல் வலை தள முகவரியில் வந்திருந்த தகவல்களை அசுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்த பிரபல பணக்காரரான துர்காசேட் சட்டென ஒரு மெசேஜை பார்த்ததும், திடுக்கிட்டார். “You are Watching and Scanning” பின் தன் தோளை குலுக்கிக்கொண்டவர், அந்த மெசேஜை கண்டு கொள்ளாமல் அடுத்த மெசேஜூக்குள் நுழைந்தார். இருந்தாலும், அந்த மெசேஜ் அவர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டது. இது மாதிரி பல மிரட்டல்கள் வரும்.இதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது. அவருடைய தொழிலில் எத்தனையோ எதிரிகளை