கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 2, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஊற்று

 

 “கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே “பாடல் ஒலித்ததும் டெய்சியின் முகத்தில் கடுமை வழிந்தோடியது. ஆக்னஸின் மூன்று மாதக் குழந்தையின் தலையில் கைவைத்து பாதிரியார் வேதத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்தார்.அருகிலிருந்த தீர்த்தத்தை குழ்ந்தை மேல் தெளித்து “தெரெஸா “ ,என்று மும்முறை அழைத்தார். குழந்தை அணிந்திருந்த வெள்ளை கவுன் தொளதொளவென்று இருந்தது. ஞானஸ்நானத்துக்கு தான் வாங்கி வைத்திருந்த வெள்ளை கவுன் கச்சிதமாக இருந்திருக்கும் என்று டெய்சி நினைத்துக் கொண்டாள். ஓர் அற்ப விஷயத்தில்


விழுதுகளைத் தாங்கும் வேர்கள்!

 

 அருணாசலம் விநாயகர் படத்தினை வணங்கிவிட்டு அருகில் உள்ள விபூதியை தன் நெற்றி நிறைய பூசிக்கொண்டு, மனைவி சிவசக்தியிடம் “சக்தி! நான் ஒர்க் ஷாப் போயிட்டு வர்றேன்” என்ற வழக்கம்போல் குரல் கொடுத்தார். “ஏங்க காபி கலந்து வெச்சிருக்கேன் குடிச்சிட்டுப் போங்க” என்று சிவசக்தி ஞாபகப்படுத்தினாள். காபியை அருந்திவிட்டு, வாசலில் நின்ற பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, ‘குமார் ஒர்க் ஷாப்’ நோக்கி அருணாசலம் கிளம்பினார். அருணாசலத்திற்கு வயது எழுபதைத் தாண்டியும், அவர் இன்னும் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்துக் கொண்டுதான்


தண்டனை

 

 துளசி குழந்தைகள் காப்பகம் என்ற பெயர் பலகை இனிதே வரவேற்றது, இன்பராஜ் மற்றும் வசந்தாவை, பெயர் பலகையை பார்த்ததும் இருவருக்கும் மனது கனமானது போலிருந்தது. காவலாளி கதவைத் திறந்ததும் இன்பராஜ் காரை உள்ளே செலுத்தினான். காரிலிருந்து இறங்கி இருவரும் குழந்தைகள் காப்பகத்தின் அலுவலகத்திற்கு சென்றனர். காப்பக பொறுப்பாளர் கதிரரசன் அவர்களை வரவேற்று அமரச் சொன்னார். தொலைபேசியில் ஏற்கனவே எல்லா விபரங்களையும் பேசியிருந்ததால், மேற்கொண்டு எதுவும் கேட்காமல், பணிப்பெண்ணை அழைத்து, “வன்யாவை அழைத்துக் கொண்டு வா” என்றார். வன்யா


சுற்றுலா

 

 நான் ஒரு முறை ஆழ மூச்சிழுத்து விட்டேன். அது எனக்கு தேவையே இல்லை எனினும், நானே என்னை ஒரு அந்நிய மண்ணில் வேறுபடுத்திக் காட்ட விரும்பவில்லை என்பதால் அதை அவ்வப்போது நேரம் பார்த்துச் செய்ய வேண்டி இருந்தது. பிறகு நான் அந்த பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை அண்டினேன். அங்கு ஊரே கூடி இருந்தது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்தப் பள்ளிக்கூடம். கடந்து போகும் மேகங்கள் அந்த மலையின் இடுப்பைத்தான் தொட முடிந்தது. அத்தனை உயரம் அந்த


பெற்றோரிடம் அனுமதி கேட்கவேண்டும்

 

 வரிசையாய் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றை உற்று நோக்கி கொண்டிருந்தேன் வீட்டுக்குள் போகலாமா? நம்மால் போக முடியுமா? இங்கிருந்து பார்க்கும்பொழுது முன்னறையில் இருந்த நாற்காலியில் அப்பா பேப்பர் படிப்பது கண்களுக்கு தெரிந்தது. கண்ணாடியை கழட்டி கழட்டி துடைத்து படிக்கிறார். பாவம் சாளேஸ்வரம், இந்த வயதுக்கு வருவதுதான். என்னிடம் பணம் கேட்டு இரண்டு முறை மெயில் அனுப்பி இருந்தார், அப்பொழுது எனக்கு பண முடை, அனுப்ப முடியவில்லை. இந்த முறை அவர் கண் அறுவைக்கு தனியாக பணம் எடுத்து வந்திருக்கிறேன்,