கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 3, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

நீரிழிவை நீக்கும் ஆராய்ச்சி

 

 கார்த்திகேயனும் குமாரசிங்காவும் கொழும்பில் உயிரி வேதியியலில் ஆரய்ச்சி செய்பவர்கள் .கார்த்திகேயனின் சொந்த ஊர் நல்லூர் யாழ்ப்பாணம். குமாரசிங்கா பிறந்த இடம் தெற்கில் ருகுணு மாகாணத்தில் உள்ள திசமஹரகம. பண்டைய முருகன் கோவிலான கதிர்காமத்தில் இருந்து மேற்கே 11 மைல் தொலைவில் அமைந்துள்ள ருகுணு மாகாணத்தில் ஒரு காலத்தில் தலைநகராக இருந்த ஊர். நீரிழிவினால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 5 மில்லியனைத் தாண்டி அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சோறு இலங்கை வாசிகளின் பிரதான உணவு. மூன்று நேரமும்


மருத்துவ மனிதர்

 

 நள்ளிரவு தாண்டிய நேரம்..குடியாத்தம் அரசு மருத்துவமனை.. நான் கிளம்புகிறேன், சீஃப் டாக்டர் வந்தாங்கன்னா சொல்லுங்கள், நான் காலையிலே வருகிறேன், என்று மூத்த செவிலியரிடம் கூறிவிட்டு தனது வீட்டிற்கு கிளம்பிய சிவா, இளம் இருதய சிறப்பு மருத்துவர். திருமணமாகி ஆறு மாதமாகிறது. இரவு ,பகல் என வேலைப் பளுவில் தன் மனைவியுடன் இருக்கும் நேரமே மிகக் குறைவு. மனைவி ரம்யா கணினி பொறியாளர் படிப்பினை முடித்து, வேலைப் பார்த்து திருமணத்திற்குப் பிறகு வீட்டினை நிர்வாகம் செய்கிறார். கட்டிலில் அவள்


மழை பெய்யுது!

 

 இரவெல்லாம் கண்விழித்து அட்டூழியம் செய்துவிட்டு, அதிகாலையில் நித்திரைக்குச் சென்ற சிறு குழந்தை போல திருச்சி மாநகரம் அமைதியாய் இருந்தது. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கதிர்களை சிலுப்பி விஸ்தரித்து தூங்கிக் கொண்டிருக்கும் பூக்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். தாய்ப்பறவைகள் பொழுது புலர்ந்ததை பொருட்படுத்தாமல், தத்தம் கூடுகளில் தத்தம் குஞ்சுகளை தத்தம் இறக்கைகளால் போர்த்தி, வரும் குளிர் காற்றிலிருந்து காப்பாற்றி, தூங்க வைத்துக்கொண்டிருந்தன. “ ரேஷ்மி, எந்திரி மா ”, சமையல் அறையில் இருந்தபடியே,


ஆத்மா

 

 ” நள்ளிரவு 11.35 மணி. பேய் பிசாசுகள் நடமாட இன்னும் 25 நிமிடங்கள் இருகிறது. அதுவரை நீங்கள் என்னுடன் இணைந்திருங்கள். இது ஜான், நீங்க கேட்டுக்கொண்டு இருப்பது சூரியன் fm ” Fm சவுண்டை லேசாக குறைத்து, கூகுள் மேப்பை பார்த்தவாறு அருண் காரை ஓட்டிகொண்டு இருந்தான். கஷ்டமரிடம், ” சார், ஹோட்டல் பேரு கரக்டு்தான..?” என கேட்க, கஷ்டமரும் தன் மொபைலை பார்த்து, ” கரக்ட்தான் ஏன் ? என்னாச்சு..? ” அருண் திரும்பி அவரை


அவசரப்படாதே!

 

 கண்ணன் முடிவு செய்து விட்டான், இனி இவரிடம் வேலை செய்வது என்பது முடியாத காரியம். என்னைப்போல நாணயஸ்தர்கள் இவருக்கு தேவையில்லை. நாளொரு தினம் இவரை புகழ்ந்து பேசி தன் காரியத்தை சாதித்து கொள்பவர்களுக்குத்தான் இங்கு மரியாதை. என்ன உழைத்து என்ன பயன்? நன்றி இல்லாத முதலாளி. இன்று முப்பது பேருக்கு மேல் வேலை செய்து கொண்டிருக்கும் இந்த முதலாளி ஆரம்பத்தில் எப்படி இருந்தார். நானும், என்னோடு இன்னொருவரையும் வைத்துக்கொண்டுதான் இந்த கம்பெனியை ஆரம்பித்தார். அப்பொழுதெல்லாம், நீங்க இரண்டு