கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 21, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள் செய்த குற்றம்!

 

 காரை நிறுத்திவிட்டு மின்தூக்கிக்குச் செல்லும்போது தான் கவனித்தேன். எங்களது மேயர் ரோடு ஆரம்பத்திலிருந்து, சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனித வள அமைச்சின் வேலையாட்கள் பெரிய வாகனங்களோடும், இந்தியத் தொழிலாளிகளுடனும், சீனத்துப் பொறியாளர்களோடும், மலாய்த் தொழிலாளிகளுடனும் ஆங்காங்கே நிலத்தை அகழ்ந்தும், இடித்தும், மரங்களை வெட்டியும் வேலை செய்து கொண்டிருந்தனர். “மீனா…இந்த இடத்துக்குப் புதியதாக இரயில் நிலையம் வரப் போகிறது..அதற்கான துவக்கம்தான் இது. மரீன்பரேட் தொகுதியின் தலைவர் கோசோடோங்கின் முயற்சி இது…மக்களுக்கு நல்லது செய்வதில் முன்னோடி ஆயிற்றே” என்று எனது கணவர்


முன்னாடி பின்னாடி பார்த்து பேசுங்க எஜமான்

 

 ஒருநாள் மழை பெய்யும் போது ஒரு குரங்கு மரத்தில் நனைந்தபடி குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதே மரத்தில் கூடுகட்டி வாழும் ஒரு சிட்டுக்குருவி அந்த குரங்கைப் பார்த்து, இவ்வளவு சிறிய பறவைகள் நாங்களே கூடுகட்டி மழையிலிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம். .இவ்வளவு பெருத்த உடம்பை வைத்துக் கொண்டு நனைந்துக் கொண்டிருக்கிறாய், சோம்பேறியே, இந்த மரத்தை விட்டுப்போ என துரத்தியது. குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்த குரங்கு, மழை விட்டதும் சென்று விடுகிறேன் என்றது. அந்த குருவி மீண்டும் அந்த


கலைந்து போன உறவுகள்

 

 அவள் வசந்தனை சந்தித்தபோது அவனிடம் தன் எல்லா துன்பங்களையும் கவலைகளையும் கொட்டி அழுது தீர்த்து விடவேண்டும் போல் தோன்றியது. அவ்வளவு ஒரு உணர்ச்சிப் பிரவாகம் அவளுள் பொங்கிப் பிரவகித்தது. இந்த இரண்டு மாதங்களில் அவள் அனுபவித்த துன்ப துயரங்களை வேறு எந்தப் பெண்ணும் இந்த உலகத்தில் அனுபவித்திருக்க மாட்டாள் என்று அவளுக்குத் தோன்றியது. தான் ஏன் அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்று அவளுக்கு விளங்கவில்லை . அது மனித வாழ்க்கையில் ஒரு இயல்பான காரியமாக இருந்த


கண்ணாமூச்சி

 

 “ இதுக்குதாம்வே நான் யாரு கிட்டயும் கொடுக்கல் வாங்கல் வச்சிக்கிடறதிலை.. கொடுத்தா வாங்கறதுக்குள்ளே பெரும்பாடு படவேண்டியதாயிருக்கு.. இன்னும் ஒரு வாரம் தாம்வே உமக்கு டைம்.. அதுக்குள்ளே எப்படியாவது கொண்டு வந்து கொடுக்கிற வழியப் பாரும்.. அவ்வளதான் சொல்வேன்.. அப்புறம் எம்மேல வருத்தப்படாதீரும்…” என்று செல்போனில் ராமநாதன் கத்திக் கொண்டிருந்தான். காலை நடைபயின்று கொண்டிருந்த அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனார்கள். நீங்களும் பார்த்தீர்கள் தானே. இவ்வளவு ஆக்ரோசமாக ராமநாதன் கோபப்பட்டுப் பேசியதைக் கேட்ட ஜனசமூகம்


வழி மாறிய சிந்தனை

 

 “வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன், பதிலை ஆங்கிலத்தில் சொல்லவே மனதுக்குள் வார்த்தைகளை கோர்த்து சொல்ல யோசித்தான். மறூபடி அவள் அந்த கேள்வியை கேட்கவும், திடுக்கிட்டு, “இண்டர்வியூ”வுக்கு கூபிட்டிருக்காங்க, என்று தமிழிலிலேயே சொன்னான்.நீங்கள் இடது பக்கமாய் போய் வலது புறம் உள்ள அறையில் உட்காருங்கள். இதை ஆங்கிலத்தில்தான் சொன்னாள். அந்த மொழியை உச்சரித்த அழகை இரசித்தவன், “தேங்க்யூ” இதை ஆங்கிலத்தில் தைரியமாக சொல்லிவிட்டு