கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 15, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கிரகவாசி வருகை

 

 பறக்கும் தட்டில் பூமிக்கு பிற கிரக வாசிகள் வந்ததாகப் பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எவ்வித தோற்றம் உள்ளவர்கள் எனக் கற்பனையில் சிருஷ்டித்துப் பல இடி (ET) போன்ற படங்கள் எடுத்திருக்கிறார்கள். பிற கிரக வாசிகள் பூமிக்கு வந்ததாக போதிய ஆதாரங்கள் இல்லை. சில சமயம் அப்படியும் நடந்திருக்கலாம் என அறிவியல் கண்கொண்டு இக்கதை எழுதப்பட்டது. உலகத்திலேயே அதிக உயரமான 29,029 அடிகள் உயரமுள்ள இமையமலையின் சிகரத்தை, பல மனிதர்கள் அடைந்தாலும், 21,578 அடி உயரமுள்ள கைலாச


ஏலியன்

 

 மருத்துவமனை வளாகம் ஒரே பரபரப்பாக இருந்தது. வெளியே செய்தி சேனல்களும், பத்திரிக்கையாளர்களும் நேரலையில் ஆளுக்கொரு கருத்தை கூறிகொண்டும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழுகைகளை படம் பிடித்து கொண்டும் இருந்தனர். மருத்துவமனை ஊழியர்கள் அங்கும் இங்கும் ஓடிய வண்ணம் காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தனர். மருத்துவமனையே அழுகுரலால் நிரம்பி வழிந்தது. மருத்துவமனை முழுவதும் போலீஸ் கட்டுபாட்டில் இருந்தது. உள்ளே இருந்து மருத்துவமனை டீன் வெளியே வரவும், பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கேள்விகளை அடுக்கினர். இதுவரை எத்தனை உயிர் போயிருக்குது?


அந்திம கிரியை!

 

 டாக்டர் ராகவன் வீட்டு அழைப்பு மணியை, தபால்காரன் சிவா அழுத்தியவுடன், வாசலுக்கு வந்தவர், ”என்ன, போஸ்ட்மேன்… ஏதாவது ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கா,” என்றார். ”இல்ல சார்… சன்னிதி தெருவில் உள்ள நாடார் கடையிலே, ‘டெலிவரி’ பண்ணிட்டு இருக்கும்போது, ஒருவர் மயங்கி விழுந்துட்டாரு… நாடார், உங்களை அழைத்து வரச்சொன்னார்,” என்றார், சிவா. அடுத்த ஐந்தாவது நிமிடம், நாடார் கடையில் இருந்தார், டாக்டர். பெரு மூச்சு வாங்கிக் கொண்டிருந்த பெரியவரை பார்த்தவுடன், ‘ஸ்டெதாஸ்கோப்’பை வைத்து, மார்பில் இரண்டு கைகளாலும் அழுத்தி


ஒரு வீடு, ஒரு கனவு, ஒரு மனிதன்

 

 இந்தக் கதையின் நாயகன் அவனா அல்லது நானா அல்லது நீங்களா என்பது அவ்வளவு முக்கியமில்லை. ஏனெனில் இந்தக் கதையை வாசிக்கும் வாசகர்களில் பெரும்பாலோருக்கு ஒரு சில இடங்களிலாவது தங்களைப் பொருத்திப் பார்க்க இடமிருக்கும். மேலும் பிரதியின் ஊடே வாசகன் பிரயாணம் செய்வதற்கும் அதில் அவனே ஒரு முக்கிய ரோல் எடுத்து பிரதியின் நாயகனாகவோ, எதிர் நாயகனாகவோ மாறுவதற்கும் பிரதியின் வெளி இடம் தரவேண்டுமல்லவா. என்ன புரியவில்லையா. புரிகிற கதைக்கு வருவோம். இப்போது நீங்கள் ஒரு புதுமனைபுகுவிழா வீட்டிற்குப்


போர்

 

 எதிரே நின்று கொண்டிருந்த படைகளை பார்த்தார் ராசா, எங்கிருந்து வந்தார்கள் இந்த வெள்ளையர்கள், நம் நாட்டின் மீது போர் தொடுக்க அவசியம் என்ன? இது எல்லாம் யாருடைய கைங்கர்யம், தெய்வங்களா நம் தலை மீது கை வைத்து நம்மை போர் புரிய ஆட்டுவிக்கிறார்கள்?. எப்பொழுது போர் அறிவிக்க போகிறார்கள்? பக்கத்தில் இருந்த ராணி சிரித்தாள். ஏன் சிரிக்கிறாய்? கேட்டார் ராசா. இல்லை இந்த வெள்ளையர்களை பாருங்கள், அவர்களுக்கு அவர்களுடைய நிறத்தை பற்றி பெருமை, அதை நாம் மதிக்கவில்லை