கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 11, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஏன் அழுதாள்?

 

 நகராட்சியில் குப்பை வாரும் ஒப்பந்தத் தொழிலாளியான கன்னியம்மாள் மண்டை பிளக்கும் உச்சி வெயிலில் குப்பை வண்டியோடு அந்தத் தெருவில் வந்துக் கொண்டிருந்தாள். அவளுக்குனு ஒதுக்கப் பட்ட நாலு தெருக்களில் உள்ள குப்பைகளை வண்டியில் ஏற்றி வந்து குப்பை கிடங்கில் கொட்டுவது தான் அவளின் அன்றhட வேலை. அதை, வாங்கும் கூலிக்கு வஞ்சனை இல்லாமல் தினமும் செய்வாள். அன்று ஏனோ தெரியவில்லை அசதியில் அவள் உடம்பு ஓய்வுக்காக கெஞ்சியது. “இது தான் கடைசி லோடு குப்பைகளை அள்ளிப் போட்டுட்டு


புகைச்சல்

 

 தெளிவாய்க் காதில் விழும்நாதஸ்வர ஓசையை மீறிக்கொண்டு, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதாய் மரக்கதவை இழுத்துப் பூட்டிதிண்ணை கிரில் கேட்டையும் வெளியே நின்றமேனிக்கு உள்ளே கைவிட்டுக் கொக்கியில் சரியாகத் தொங்குகிறதா என்று கணக்கிட்டு, அந்த இரண்டாவது பூட்டையும் கவனமாய்ப் பூட்டி இழுத்துப் பார்த்து விட்டுத் திரும்பினார் ரங்கநாதம். வாசலுக்கு வந்த வேகத்தில் பார்வை எதிர்த் திசையில் போய்விடாதபடிக்குத் தலையைக் குனிந்து கொண்டு கேட்டைத் திறந்து வெளியே வந்து அதன் கொண்டியைச் சற்று சத்தமாகவே போட்டுவிட்டு நடையைக் கட்டினார். எப்பொழுதும்


சுப விரயம்

 

 எச்சில் இலைகளின்மீது நாய்கள் இரண்டும் ஒன்றையொன்று அடித்துப் புரண்டு கொண்டிருந்தன. பந்தல் தடுப்பின் பின்னால் நடக்கும் அந்த அமளி, பந்தலின் உள்ளும் எதிரொலித்தது. வசந்தவிழா (காதணிவிழா) வைபவம் முடிந்து மொய்ப்பணம் சாமியறைக்குள் வைத்து எண்ணப்பட்டுக் கொண்டிருந்தது, பத்து நிமிடத்துக்கொருமுறை மனோகரனின் மனைவி கௌசல்யா எனும் கௌசி சாமிபடத்துக்கு எதோ செய்வதுபோல அறைக்குள் போவதும் வருவதுமாய் இருந்தாள். கௌசியின் தம்பி செந்திவேலுக்கு மூக்கின்மேல் கோவம் வந்துவிட்டது. “நோட்டுல எழுதுனதத்தான் எண்ணிகிட்டிருக்கம். யாரும் வாய்க்குள்ள போட்டு, மென்டு முழுங்கீற மாட்டம்”


எசமான் தேசத்தின் இரண்டாவது புயல்!

 

 எசமான் தேசத்தின் இந்த ஆண்டில் இது இரண்டாவது புயல். புயல் என்றவுடன் கடலில் வருவது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது நாட்டில் வரும் புயல். சின்னச் சின்னதாய் நிறைய பிரச்சினைகள் அன்றாடம் வருவது எசமான் தேசத்தில் பழகிப் போன ஒன்றுதான். ஆனால், இது வழக்கமான பிரச்சினை அல்ல – உண்மையிலேயே புயல்தான். இந்த ஆண்டின் முதல் பிரச்சினை ரூபாய் நோட்டு வடிவத்தில் வந்தது. எல்லா குடிமக்களும் நைட் டூட்டி முடித்து விட்டு, பகலில் தூங்கிக் கொண்டிருந்த போது


அந்த கால சினிமா காதல் கதை

 

 “ராஜேஷ்” எங்கஅம்மாவுக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுல எந்த ஆட்சேபணையும் இல்லை, அப்பா மட்டும்தான் இப்ப நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறாரு. வருத்தத்துடன் சொன்னா மாலா அடுத்த வாரம் யாரோ ஒரு பையன் என்னை பொண்ணு பாக்க வர்றானாம். உங்கப்பாதான் அவர் வசதிக்கு தகுந்த மாப்பிள்ளை நான் இல்லைன்னு முடிவு பண்ணி வச்சிருக்கறாரே, என்ன பண்ணறது.? பேசாம நான் உன் கூட வந்துடறேனே, மாலா சொல்லவும் பதட்டமான ராஜேஷ் இங்க பாரு எங்க குடும்பத்துல வசதி மட்டும்தான் கம்மி,