கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 8, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னவன் வந்தானடி…

 

  மதுரையும் அதை சுற்றியுள்ள வாழ்க்கையையும் பலரும் பல்வேறு கோணத்தில் அறிந்து இருந்தாலும் , நம் அழகாய் கணிக்கும் தங்கமும் அதை உருவாக்கி கொண்டிருப்பவர்களின் வாழ்கையில் காதல் எவ்வாறு வழி நடத்துகிறது அதில் உறவுகள் எந்த அளவுக்கு நசுக்க பட்டிருக்கிறது என்பதுதான் கதை. கதையின் ஆரம்பத்தில் அதாவது 1976 ல் மல்லிக்கு பேர்போன மானாமதுரையில் தங்க ஆசாரி சமுதாயத்தினர் திருமணம் நடக்கிறது.திருமணம் முடிந்த ஐந்தாவது நாள் அன்று பெண் வீட்டாரின் விருந்துக்கு மாப்பிள்ளை அழைப்பு வந்து இருந்தது


தப்பித்தல்

 

 ”இப்ப நா என்னா செய்யணும் அத்தா” காத்தாயி அத்தனை பயத்துடன் மெதுவாகவே கேட்டாள். அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்கிறது. மகள் இருக்கிறாள்தான். அதைப் பார்ப்பாளா எனத் தெரியவில்லை. அழகருக்கும், ராவுத்தருக்கும் வாய்த்தகராறு எனக் கேள்விப்பட்ட நிமிசத்தில் பதட்டத்தோடு வந்தவள், வந்ததும் முதல் வேலையாய் அழகரைக் கடத்தி விட்டாள். ”நீ கெளம்பு” எட்டாக நெளிந்து கிடந்த சைக்கிளின் முன்புற சக்கரத்தை கண்களால் அளந்தபடி வாயடைத்துப் போயிருந்த ஐசக் ராவுத்தர், பதில் ஏதும் சொல்லாமல் காத்தாயி பக்கம் திரும்பினார். காத்தாயி


சைத்தான்

 

 ”அபூ. . . சைத்தான் மெளத்தாயிட்டாண்டா. . . .” மதரசாவின் தங்கும் விடுதிக்குள் தலையை நீட்டி கத்தினான் சிக்கந்தர். அதிகாலையில் பஜர் தொழுதுவிட்டு வந்து , தங்கும் விடுதியை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான் அபு. அவனுக்கு சைத்தான் இறந்து விட்டதை நம்பவே முடியவில்லை. வழக்கமாக, காலை பத்து மணிக்குத்தான் மதரசா ஆரம்பிக்கும். அதிகாலையிலேயே குளித்து விட்டு தொழுகப் போவார்கள் மதரசா மாணவர்கள். திரும்பி வந்தும் சிலர் குளிப்பதுண்டு. காலை ஆறு மணியில் இருந்து, பத்து


மர்ம நோய்!

 

 வேந்தனின் கண்டிஷன் வெகு சீரியஸ்! டாக்டர்களே நம்பிக்கை இழந்து விட்டார்கள்! வேந்தன் அரசியலில் நுழைந்து 50 வருடங்களாகி விட்டன! கட்சியின் கிளை செயலாளரில் ஆரம்பித்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று சுமார் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்திருக்கிறார். அதனால் கட்சி மேலிடத்திற்கு செல்ல பிள்ளையாக வலம் வந்தார். அவரை கட்சியே வற்புறுத்தி எம்.எல்.ஏ. வுக்கு ஒரு முறை நிறுத்தியது. அந்த ஐந்து வருடப் பதவியில் அவர் நிறைய தெரிந்து கொண்டார். அதனால் அடுத்த முறை


பாசம்!

 

 அந்த குப்பைத்தொட்டிக்குள் விழப்போகும் இலைகளுக்காக நான்கைந்து நாய்கள் காத்திருந்தன. ஒன்றை ஒன்று நம்பிக்கையில்லாமல் யார் முதலில் பாய்வது என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தன. இலைகள் கட்டாயம் விழும் என்பது அவைகளின் அனுபவம். அதே நேரத்தில் அவைகளை பங்கு பிரிப்பதில் வரும் பிரச்சினையே அதற்கு வாழ்க்கை பிரச்சினை ஆகி விடுகிறது. நல்ல பலசாலியாகவோ, அல்லது கொஞ்சம் இளமையாக இருக்கும் நாய்களுக்கு பங்கு அதிகமாக கிடைத்து விடுகிறது. நோஞ்சானாகவோ, வயது அதிகமானதாகவோ இருப்பவைகளுக்கு இதில் பங்கு கிடைப்பது என்பது பிரம்ம பிரயத்தனம்.