கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 5, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறாங்கல் தர்கா

 

 கல்லா ராவுத்தருக்கு காலையிலிருந்தே மனசு ஒரு நிலையில் இல்லை. அதிகாலையில் ஃபஜர் தொழுது விட்டு, வழக்கம் போல கடைக்கு வந்து விட்டார். எப்போதும் கடையில் இருக்கும் போது எந்தச் சலனமும் இன்றி இருப்பவருக்கு, இன்று அப்படி இருக்க முடியவில்லை. ஒரு வாரமாக இருக்கும் பர பரப்பு இன்று ரொம்ப அதிகமாகவே தெரிந்தது. கடைத்தெருவில் சிறிய கடை கல்லா ராவுத்தருடையது. முப்பது வருஷத்துக்கு முன்னால் என்ன அமைப்பில் இருந்ததோ, அதே அமைப்பிலேயே இப்போதும் இருக்கிறது. வருஷந்தோறும் வெள்ளை அடித்து,


டைட்டில் கார்டு!

 

 கோவை பீளமேட்டில் தொழிலதிபர் கோமதி நாயகத்தின் பங்களா. குழந்தை காணாமல் போய் இருபத்தி நான்கு மணி நேரமாகி விட்டது. குடும்பமே துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் செல்போனுக்கு ஒரு வீடியோ கால்! குழந்தை பற்றிய தகவலாக இருக்கும் என்று பதறிப் போய் பார்த்தார் கோடீஸ்வரன் கோமதி நாயகம்! “ஐயோ!…. அம்மா!….எனக்கு பயமா இருக்கு !” என்று கத்தி கதறிய குரல் அவரின் அருமை பேத்தி சித்ரலேகாவின் குரல் தான்! அவரை சுற்றி நின்று கோமதி நாயகத்தின் குடும்பமே


தவிப்பு

 

 ‘…. இன்றைய மேடுபள்ள வாழ்வில் ஏழைகள் வாழ்க்கையின் எதிரிகளுடன் மாத்திரமல்ல, தங்கள் உடல்களில் தோன்றுகிற இயற்கை உணர்ச்சிகளுடனும் போராடவேண்டியிருக்கிறது. அதுவும் ஏழையின் தலையில் ஒரு தியாக வேள்வியாகிவிட்டது’ ‘விடியமுதல் வெளியே போன துரையப்பன், மதியமாகும்போது கழுத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்து திண்ணையில் சரிந்தான். ‘இண்டைக்கும் அடிப்பிலே உலை ஏறாதுபோல கிடக்கே’ உள்ளம் வெதும்ப, சின்னத்தங்கம் அவனைப் பார்த்தான். அவன் இவளையும், இவள் அவனையும் பார்த்துக்கொண்டிருக்க, குழந்தைகள் ‘வழக்கம் போலவே’ ஒப்பாரிவைக்கத் தொடங்கிவிட்டன: ‘ஆச்சி பசிக்’குதணை. சோறு தாணை’ சின்னத்தங்கம்


மனதில் விழுந்த கீறல்

 

 அவ்வை அப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காக தன் மனதுக்குள் பகீரதப் பிரயத்தனம் எடுத்து போராடிக் கொண்டிருந்தாள் . நாளைக்குள் அப்படி தான் எடுத்த அந்த தீர்மானத்தை ஜெகனுக்கு தெரிவித்துவிட வேண்டும் என்று அவள் மனதுக்குள் மிக உறுதியாக இருந்தாள் . அந்த தீர்மானம் தான் அவளது எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகிறது . எனினும் அது சட்டென்று தீர்மானித்து விடக்கூடிய ஒரு விஷயம் அல்ல . அது ஆறு ஜீவன்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டுள்ள ஒரு


பிழைப்பு தேடி…

 

 தனது பின்புற உடலை புற்றுக்குள் நுழைக்கு முன் ‘புஸ்’ என்று சீற்றத்துடன் தன் தலையை விரித்து படம் காட்டியவாறு மெல்ல பின் உடலை உள்ளே நுழைத்தது.எல்லா உடலும் உள்ளே நுழைந்து விட்டதை உறுதி செய்த பின் தன் தலையை சுருக்கி முழுவதுமாய் புற்றுக்குள் நுழைந்தது அந்த நாகப்பாம்பு. அதை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த மாரியம்மாள் தன் கைகளால் கன்னத்தில் போட்டுக்கொண்டு “ஆத்தா” என்று வாய் விட்டு சொல்லி விட்டு புற்றுக்குள் அருகில் வைத்திருந்த பூ கூடையை எடுத்துக்கொண்டு