கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2019

89 கதைகள் கிடைத்துள்ளன.

அக்னி

 

 வயிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல… காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் நாலு பேரும், தங்கள் தாயின் திதியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்பாவைப் பட்டினிப் போட்டுவிட்டு, எப்பொழுதோ செத்துப்போன அம்மாவுக்கு வடை பாயசத்தோடு பரிந்து பரிந்து சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இது என்ன அக்கிரமம்…? ‘இவர்கள் இப்படிப்


ஓரகத்தி

 

 கரண் வீடே களை கட்டி இருந்தது. மாவிலை தோரணம்,மாக்கோலம் இடப்பட்டிருந்தது, திருமணமாகி கரண்-சித்ரா தம்பதியர், வீட்டிற்க்கு வரும் நாள் இன்று. இரண்டு மாதம் முன்பு வரை அவர்கள் காதலர்கள். கரண் பிரபல தனியார் பாங்க் ஒன்றில் வேலை, சித்ராவும் அதே வங்கியில் வேலை பார்த்து தற்போது விட்டுவிட்டு போட்டி தேர்வுக்கு தயாரகிக் கொண்டு இருக்கிறார். வங்கியில் ஒரே நேரத்தில் இன்டர்வியூயில் சந்தித்து பழகி ,காதலாகி , கணிந்து உருகி, பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு வீட்டிலும் சம்மதம்


துறவு…!

 

 அந்தமான் எக்ஸ்பிரஸ் ஜம்மு காஷ்மீர் கட்ராவை நோக்கி சென்னையிலிருந்து மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் பயண தூரமான மூன்றில் ஒரு பங்கைக் கடந்து கொண்டிருந்தது. எஸ். 7 ல் பயணம் செய்யும் நான், பூவரசன், அழகேசன், குசேலனைத் தவிரஅமர்நாத்திற்குப் பயணம் செய்யும் எங்களில் சிலர் மனைவி மக்கள், சில பெருசுகளோடு ரயில் பெட்டி எஸ். 11ல் பயணம். இந்த வில்லங்கம்…..மனைவி ஜானகியோடு பயணம் செய்யும் கார்த்திக்கின் வேலை. பதினைந்து பேர்களுக்கு டிக்கெட் முன் பதிவு செய்யப்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

 அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 அந்த நேரம் பார்த்து காயத்திரி ஒரு கைலே காய்கறியும்,ஒரு கைலே மளிகை சாமானையும் எடுத்துண்டு வழக்கத்துக்கு விரோதமா,வேகமா வந்து,ரெண்டு பையையும் கிழே வைத்து விட்டு, அம்பாள் படத்துக்கும்,தன் கணவா¢ன் படத்துக்கும் நமஸ்காரம் பண்ண போனவளுக்கு,அம்பாள் படத்தில் இருந்து தான் காலையிலே வைத்து விட்டுப் போன ரோஜாப் பூ கிழே விழுந்து இருந்ததை பார்த்தாள்.அம்பாள் படத்துக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்து கொண்டு “லதா,அம்பாள் நமக்கு ஒரு வழி காட்டி இருக்கா”


மானசீகத் தேடல்

 

 (இதற்கு முந்தைய ‘பஞ்சாயத்துக் கூட்டம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று டாக்டர் சொல்லியிருந்தது சபரிநாதனுக்கு ரொம்ப வசதியாக இருந்தது. பேசாமல் படுத்தே கிடந்தார். அவருக்கு யாரைப் பார்க்கவும் பயமாக இருந்தது. மனம் இயங்கிய வேகத்திற்கு தனிமையே ஏற்றதாக இருந்தது. ஆனால் யாராவது ஒருத்தர் அடிக்கடி வந்து உடல் நலம் விசாரித்ததில் அவரது தனிமை தொந்திரவுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது. அவர்தான் தீ வைத்தவர் என்கிற உண்மை தெரியாமல் அவரிடமே அதைப்பற்றி எல்லோரும்