கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2019

89 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரைக் குடிக்கும் உல்லாசப் பிரயாணம்

 

 இன்றைய நகர வாழ்க்கை பெரியோர்களுக்கு மாத்திரமல்லாமல் பிள்ளைகளுக்கும்தான் எவ்வளவு சலித்துப் போய்விட்டது. படிப்பு, படிப்பு எப்போதும் பரீட்சை மீதான நெருக்குதல்கள் என்பன சிறு வயதிலேயே அவர்களுக்கு மன அழுத்தங்களை கொண்டு வருகின்றன. இதற்கு கிருஷாந்தனும் விதிவிலக்கானவன் அல்ல. எனவே, அவர்கள் அடுத்த வாரம் தெற்குப் பிரதேசத்தில் உள்ள கடற்கரை ஒன்றுக்கு உல்லாசப் பிரயாணம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அவனது அம்மா அவனிடம் கூறியபோது, எல்லோரையும் பார்க்க அவன்தான் மிக மகிழ்ச்சியடைந்தான். திருமகள், செந்தூரன் தம்பதிகளின் ஒரே


செவலைப்பசு

 

 செவலைப்பசு காணாமப் போயி இன்னைக்கோட மூணு நாளாச்சு. அது காணாமப் போனதுல இருந்து சோறு தண்ணியில்லாம குடும்பமே தேடுது. இது விவசாயக் காலங்கூட கிடையாது. பயித்துல மேஞ்சுச்சுன்னு பிடிச்சிக் கட்டி வைக்க, நல்ல வெயில் காலம்… ராசுதான் அவுத்து விட்டுட்டு வந்தான்.. அப்பவே ரெங்கநாயகி காளைக்கி கத்திக்கிட்டு நிக்கிது… அவுத்துவிட்டு எங்கிட்டும் ஓடிறாமன்னு கத்திக்கிட்டுத்தான் இருந்தா. எங்க போவப்போகுது… மேச்சலுக்குப் போற இடத்துல கோயில் காளைக வருமுன்னு அவுத்துவிட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டான். மத்தியானம் வீட்டுக்கு தண்ணிக்கு வர்ற


ஜன்னல்

 

 வழக்கம் போல் அவள் கம்பி எண்ணிக் கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகள். அது வழியே அவனைப் பார்ப்பது அவள் வழக்கம். ஜன்னல் கம்பிகளின் இடைவெளி வழியே ஓர் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். ஜன்னல் கம்பிகளில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தாள். இன்னும் அவன் வரவில்லை. ஜில்லென்று காற்று மட்டும் அவள் முகத்தை வருடியது. ஜன்னலின் உறுதியான கம்பிகளை, தன் மிருதுவான ஆள் காட்டி விரலால் தொட்டு, கண்ணுக்கு புலப்படாத அழகான ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தாள். அவள் விரல்


புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா

 

 யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன் பின் ஓய்வு பெற்று சொந்தத்தில் தனது ஊரில் ஒரு கிளினிக் நடத்தியவர் டாக்டர் சுப்பிரமணிம். அவர் மகன் டாக்டர் ராஜா என்ற ராஜரத்தினம் , தன் தந்தை படித்த சில கி மீ தூரத்தில் உள்ள பரியோவான் கல்லூரியில் படித்து, கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகி, டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் முதலில் கொழும்பில் வேலை


சிலர் இப்படியும் காப்பாற்றுவார்கள்

 

 என் பையனை அடிச்சவன் நல்லாவே இருக்க மாட்டான், நாசமாத்தான் போவான். அந்த பெண்ணின் கையை பிடித்து அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார் அவள் கணவர். பேசாம இரு, அதான் வக்கீல் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாருல்லை, அவங்க இரண்டு பேரும் என்னமா அடிச்சு போட்டிருக்காங்க என் பையனை.அவகிட்ட இவன் போனான்னா இவனுக்கென்ன ரோட்டுல போறவன். அங்க என்ன நடந்தா இவனுக்கென்ன? எதிரில் உட்கார்ந்திருந்த வக்கீலின் மனசாட்சி தானாக சொல்லிக்கொண்டது இப்படிப்பட்ட பெத்தவங்க இருந்தா பையன் எப்படி உருப்படுவான்? “உங்க மகன் என்ன நல்ல