கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2019

89 கதைகள் கிடைத்துள்ளன.

இரும்புப் பூக்கள்

 

 நன்றாக யோசித்து எடுத்து முடிவல்ல. நன்றாக யோசிக்க முடியாத மனநிலை ஒன்றில் உள்ள சுகத்தின்பால்…வந்த தடுமாற்றத்தின் விளைவு தான்… இந்த சூனியத்தின் முக்கில் நிற்பது. வாகனங்களின் இரைச்சல் மரண அவஸ்தையைத் தந்து கொண்டிருந்தது. அந்த தோஷம் இந்த தோஷம் என்று ஜாதகம் பார்த்தே வீணா போனவர்களில் சந்திரனும் ஒருவன். சாலையில் அடிக்கடி வந்து போகும் ஆம்புலன்சின் சைரன் கண்ணை மூடிக் கொண்டு மண்டைக்குள் அவனையே திருகிக் கொண்டிருந்தது. ஜாதகம் பார்த்தே 38 வயசு வரை சாவடிச்ச வீட்டை


மூன்று குட்டிச்சாத்தான்கள்

 

 மிக நீண்ட காலத்திற்கு முன்பு பூமியில் விசித்திரமான மற்றும் மந்திர உயிரினங்கள் மட்டுமே வாழ்ந்தன – மேகங்களில் பயணம் செய்து அதை நிர்வகிக்கும் அளவுக்கு உயரமாகக் குதிக்க வேண்டும் என்று கனவு கண்ட மூன்று சிறிய மேகனன் . வின்னன், மலையன் என்ற குட்டிச்சாத்தான்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் உயரம் மூன்று அடிகள் மட்டுமே. அவர்களை எல்லோரும் குள்ளர்கள் என்று கேலி செய்தனர். அவர்களுகு பெண் கொடுக்க ஒருவரும் வரவில்லை கவலையில் தற்கொலை செய்ய ஒரு காட்டுக்குப் போனார்கள்


திரும்பிப் போ!

 

 ”நீ சீக்கிரமா ஊருக்கே திரும்பிப் போயிடு! நீ இங்கேயே தங்கினா எனக்கு அவமானமா இருக்கும்”. அகிலன் அழுத்தமாகச் சொன்னதைக் கண்டு நடுங்கினாள் மதிமொழி. விருதுகள் பல பெற்ற சிங்கப்பூர் விமானச் சேவையில் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை பயணிப்பதில் மதிமொழிக்கு எப்பொழுதுமே ஒரு லயிப்பு உண்டு. அந்த உற்சாகத்தில் திளைத்திருந்த மதிமொழியின் முகம், அகிலனின் இரகசிய ஆணையில் துணுக்குற்றது. ஆசிரியரால் கண்டிக்கப்படும் சிறுபிள்ளையின் முகத்தைப் போல வாடியது. பெற்றோர் திடீரென எடுத்திருக்கும் முடிவு அகிலனை இந்த அளவிற்கு மாற்றிவிடும்


முக்கோணம்

 

 டமார் , தலையில் இடிவிழுந்தது போல ஓர் உணர்வு .சட்டென ,விழிப்புத் தட்டியது ,திடுக்குற்ற மோகன் , கண்ணை உருட்டி நிலைமையை உணரத் தலைப்பட்டான் . என்ன சத்தம் நான் நன்றாகவே இருக்கிறேன் . ஆகவே என் தலையில் எதுவும் விழவில்லை .மேலே வீடும் உடையவில்லை .அப்படியானால் இவ்வளவு பெரிய சத்தம் எங்கிருந்து எப்படி வந்தது ,விழிகளை சுழற்றி நோடமிட்டான் . மூலையில் மழையில் நனைந்த கோழிபோல ,ஒடு ங்கியபடி வதனி நின்றிருந்தாள் .ஆகா , வீட்டுக்குள்


சண்டை

 

 எங்கும் புகை மண்டலம், திடீர் திடீரென்று சீறிக்கொண்டு செல்லும் குண்டின் சத்தம், திடீரென்று பெரும் சூறாவளி சத்த்த்துடன் தலைக்கு மேல் பறந்து சென்று “டொம்” என்று விழுந்து பெரும் சத்தத்துடன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள். இடை இடையே தட தவென ஓடி வந்து கொண்டிருக்கும் பூட்ஸ் கால்களின் சத்தம். பதுங்கு குழிக்குள் இருந்த ராஜேஸ் தனது அதிகாரியும் நண்பனுமான ஹம்ஸாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான், ஹம்ஸா, நாம் இப்ப எழுந்து அடுத்த பக்கம் ஓடிடலாமா? வேண்டாம், குண்டு மேல பறக்கறதுனால