கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2019

89 கதைகள் கிடைத்துள்ளன.

தேடல்

 

 கொல்லை முற்றத்துள் இறங்கிய படிக்கட்டில் அமர்ந்தபடி பார்த்தபோது அடர்ந்த வேப்பமரத்தின், மாமரத்தின் இலைகளின் ஊடே வானம் மிக மிக சமீபத்தில் தெரிந்தது. இளநீலத் துணி ஒன்று மரத்தைப் போர்த்தியிருந்த மாதிரி. சற்று எழுந்து கையை நீட்டினால் உள்ளங்கைக்குள் வசப்பட்டு விடும் போல. உட்கார்ந்த இடத்தை வெளிப்படுத்தாமல் பட்சிகள் குரல் எழுப்பின கூ…கூ… கீ…கீ… என்று சளசளத்தன. அவளுடன் அந்தரங்கம் பேச வந்தன. அவளுக்குத் தெரியும் மொட்டை மாடிப்படிகளில் ஏறிச் சென்று நின்றால் மரங்கள் தாழ்ந்து விடும். பட்சிகளை


தம்பி

 

 என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ஸ்டூலில் அமர்ந்து வெட்கத்துடன் நகம் கடித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த என் மனைவி எங்கள் பேச்சை அலட்சியம் செய்தவளாய் அனாயசத்துடன் ஸ்டூலைத் தூக்கினாள். உடனே, “அய்யய்யோ… அம்மா அம்மா, அதில தம்பி உக்காந்திருக்காம்மா…” என்று அலறியடித்துக் கொண்டு வந்து அவள் கைகளைப் பிடித்தான் ஆத்மா. “வேற வேலையே கெடையாதா


பூட்டாத பூட்டுகள்…!

 

 போன் அடித்தது. வீட்டில் தினசரி வாசித்துக்கொண்டிருந்த மாசிலாமணி வயசு 55. எடுத்தார். ” அப்பா..! ” மகன் ஹரி அiழைத்தான். சென்னைவாசி. தகவல் பரிமாற்றம் கம்பெனி ஒன்றில் வேலை. ” சொல்லுப்பா….? ” ” நாளைக்கு நீயும் அம்மாவும் சென்னைக்கு வரனும். நான் சொன்ன இடத்துக்கு வந்து நிக்கனும்.! ” கட்டளை கறாராக இருந்தது. ” என்ன ஹரி ! திடுப்திப்புன்னு அழைப்பு. ஏதாவது அவசரமா..? ” மாசிலாமணி பதற்றப்படாமல் நிதானமாகவேக் கேட்டார். ” …….அ….ஆமாம்.! ”


தீர்ப்பு உங்கள் கையில்…

 

 அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் ”நான் கோவிலுக்கு வந்தேன்.ஆனந்த ஆத்லே இருப்பான்னு தெரியும்.அவன் கிட்டேநான் வாங்கி வந்த கேக்கையும்,சாக்லெட்டை யும் குடுத்துட்டு,உங்களேயும் பாத்துட்டுபோகலாம்ன்னு தான் வந்தேன்.என்ன மாமி,உங்களுக்கு உடம்பு சரியா இல்லையா. என்ன வோ போல இருக்கேளே”என்று விசாரித்தான்.உடனே லதா “நேத்து சாயங்காலம் ‘மெஸ்’லே இருந்து ஆத்துக்கு வரும் போது,ஸ்கூட்டர்லே போன ஒரு பையன் மோதி அம்மாவை கீழே தள்ளிட்டு போய் இருக்கான்.அம்மா வலது கால் வீங்கி இருக்கு.அம்மாவும் வென்னீர்


மனைவியும் காதலியும்

 

 (இதற்கு முந்தைய ‘மகளின் வருகை’ சிறுகதையைப் படித்த பின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ராஜலக்ஷ்மியும் ரேழிக்கு விரைந்து வந்து சுகுணாவை வரவேற்றாள். ஆனால் வீட்டினுள் வந்த சுகுணாவின் மனம் பூராவும் எரிந்துபோன மோட்டார் பைக்கின் மேலேயே இருந்தது. “வந்ததும் வராததுமா எழவு நியூஸ்தான் இங்கே…” “அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” “என் புருஷனை உங்களை நம்பித்தானே இந்த ஊருக்கு அனுப்பினேன். அவருக்கு எது நேர்ந்தாலும் நீங்கதானே பொறுப்பு?” “சுகுணா, இந்தப் பேச்சை எங்கிட்ட பேசாதே…