கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2019

89 கதைகள் கிடைத்துள்ளன.

உருகிய வில்லன்

 

 டிங்கிள் நிறுவனம் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது. ஐந்து வில்லன்களின் பெயர்களைத் தருவார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை எடுத்துக்கொண்டு 250 சொற்களில் (ஆங்கிலக்) கதை எழுதவேண்டும். அந்தக் கதையின் நிறைவில் அந்த வில்லன் ஹீரோவாக மாறிவிடவேண்டும். இந்த மாத Theme “Make the world a better place” என்பதால், கதை அதற்குத் தகுந்தவிதமாகவும் அமையவேண்டும். இப்படி அவர்கள் தந்த ஐந்து வில்லன்களில் ராவணனை எடுத்துக்கொண்டு நானும் நங்கையும் ஒரு கதை செய்தோம். நங்கை ஆங்கிலத்தில் எழுதிப் போட்டிக்குச்


பொய்மை

 

 காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது. ‘‘ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன். எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற ‘மயங்கினேன் சொல்லத்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

 அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 உடனே காயத்திரி “ரொம்ப சாரி மாமா.என் சமையல் வேலை போனதும்,என் புத்தி ரொம்பவே மழுக்கிப் போயிடுத்து.நான் என் செல் போனுக்கு காசு தீந்ததும் மறுபடியும் போட மறந்துட்டு இருக் கேன்.நான் பொய் சொல்லலே.நீங்களே என் ‘செல் போனை’ப் பாருங்கோ.நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு புரியும்.எனக்கு மறுபடியும் அந்த ‘மெஸ்’லே வேலை கிடைக்கலே மாமா.அந்த ‘மெஸ்ஸை’ அவா நிரந்தரமா மூடிட்டா” என்று சொல்லும் போது காயத்திரி அழவே ஆரம்பித்து விட் டாள்.மாமி


ஞானோதயம்

 

 (இதற்கு முந்தைய ‘ஆண்டாள் பாசுரம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “படிக்கிறதுக்கோ தெரிஞ்சிக்கவோ சந்தர்ப்பம் எதுவும் எனக்கு கெடைச்சது கிடையாது. ஆனா ஆண்டாள்னு சொன்னாலே மனசை என்னவோ பண்ணும். கேள்விப்பட்ட ரொம்பக் குறைச்சலான விஷயங்களை வச்சே, ஆண்டாள் என்னோட முற்பிறவின்னு கூட எனக்கு நெனைப்பு வரும். இன்னும் சின்ன வயசிலேயே என்னையும் பெரியாழ்வார் மாதிரி யாராவது கண்டு பிடிச்சிருந்தா நானும் ஆண்டாள் மாதிரியெல்லாம் வந்தாலும் வந்திருப்பேன்.” “இப்பவும் காலம் கடந்து போயிடலை. ராஜலக்ஷ்மியை இந்த