கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 5, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

அறக்கிளி

 

 நிழலை உதிர்த்துக்கொண்டே இருந்த பேரீச்சை மரத்தடியில், நீல ஜீன்ஸ்பேண்ட் பையில் வலது கையை நுழைத்துக்கொண்டு இடது கையை உயர்த்தி ஈச்சயிலை ஒன்றை பிடித்தப்படி மூவளைவு கொண்டு நின்றான் சரவணன். தேன் வண்ணக்கனியும், மஞ்சல் வண்ண செங்காய்களும் நிறைந்த பேரிச்சைக்குலைகளோடு பாலையில் முலைத்த தேர்போல் நின்றது அந்த வெயிலுக்கு மறத்துபோன மரம். ஈச்சயிலையின் நிழல் அவனின் வெள்ளை டி-சர்ட்டில் விழுந்து புதிய வடிவங்களை கணம்தோறும் வரைந்து அழித்துக்கொண்டு இருந்து. பாலைமண்ணில் வேட்டைநாய்போல அலையும் வெயில் மின்துகள்கள் வழிவதுபோல நீந்திக்கொண்டே


காதல் இடிகிறது

 

 விவரம் தெரிந்த பிறகு வாழ்ந்த கல்லூரி வாழ்க்கை கூட இதயத்தில் தூரமாய் உள்ளது, ஆனால், விவரம் தெரியாமல் அனுபவித்த, அந்த பள்ளி வாழ்க்கை இதயத்தில் இன்னமும் நெருக்கமாய், அழியாத சுவடாய் உள்ளது.. *எதுவும் கடந்து கடந்துபோகவில்லை* இதற்கு, நிறைய காரணங்கள் இருக்கலாம்.. எனக்கு, என்னோட முதல் காதல்.(பள்ளிக்கூடத்துல வர்றது காதலே இல்லைனு நிறையபேரு சண்டைக்கே வருவாங்க. எனக்கு பள்ளிக்கூடத்துக் காதல் உண்மையா? பொய்யான்னு தெரியலை. ஆனா, பிரிஞ்ச வலி மட்டும் உண்மை) ஏன்னா முதல் காதல் தோல்விதான்


ஏ(மா)ற்றம்

 

 சத்யன்,அதிகம் படிக்காதவன்,இறை நம்பிக்கையுள்ள 33 வயது இளைஞன்,மனைவி இல்லத்தரசி, இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது பெண் வாரிசு.இது தான் இவனின் எளிய குடும்பம்.வாடகை வீட்டில் பல குடித்தனங்களுக்கு நடுவில் ஜாகை. வேலை பிரபல ஓட்டலில் சர்வர். வருமானமும், செலவும் போட்டி போட்டு செலவே ஜெயிக்கும் மாத கடைசியில். வேலைப் போக மீதி நேரத்தில் அருகில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் கைங்கரியம் செய்வான்,ஸ்தல வரலாறுகளும், அதனுடைய விசேஷ வழிபாடுகளும் நன்கு அறிந்தவன். ஒரு நாள் வேலைக்கு


காயங்கள் மாறும்

 

 நர்மதா வீதியில் செல்லும் வேளைகளில் எப்போதுமே அங்கு நடப்பவற்றையும் ,தெரு ஓரங்களில் சடைத்து இருக்கும் மலர்களையும் ,ஆங்காங்கே ஓய்வாக அமர்ந்திருப்பவர்களையும் ,அழுது அடம்பண்ணும் குழந்தைகளையும் ,விரையும் மனிதக்கூட்டத்தையும் ரசித்து வேடிக்கை பார்த்து ஒவ்வொரு நிகழ்விற்கும் மனதில் ஒவ்வொரு படம் வரைந்து வேடிக்கை பண்ணியபடியே செல்வாள் .அவளுடன் வருபவர்கள் விரைந்து இழுத்துச் செல்லும் அளவிற்கு மெதுவாக ரசித்து மகிழ்ந்தபடியே செல்வாள் .ஆனால் இன்று வெறும் உணர்வுப் பொம்மையாக நடந்து செல்கிறாள் .கால்கள் துக்கிவைக்க முடியாதபடி கனத்தது .குளிரற்ற காலநிலை


அரண்மனை

 

 தலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன் டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தார். குதிரையில் இருந்து இறங்கிய வீரன் அவரை வணங்கி விட்டு நமது அரசர் இன்று மாலை உங்களை சந்திக்க வருகிறார்.அப்படியே நீங்கள் கட்டி முடிக்கவுள்ள அரண்மனையையும் பார்க்க விரும்புகிறார். சொல்லி விட்டு நிறுத்தியவனை நல்லது நீ போகலாம்..அடுத்த நிமிடம் அந்த வீரன் குதிரை ஏறி காற்றாய் பறக்க ஆரம்பித்தான். தயானந்த் தன் பின்புறம் அழகோவியமாய்