கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 13, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

அக்கா என்றால் அம்மா

 

 இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். நான் எனது மருத்துவப் பட்டப் படிப்பை படித்து முடித்து எம்.பி.பி.எஸ். பட்டத்தை பெற்றுக்கொள்ளும் நான் பட்டம் பெறுவதை பார்த்து பெருமையடையவும் அதன் பின் என்னை வாழ்த்திக் குதூகலமடையவும் என் பெற்றோரும் என் தம்பியும் வந்திருந்தார்கள். ஆனால் இதனால் எல்லாம் என்னால் சந்தோசம் அடைய முடியவில்லை. அதற்குக் காரணம் அந்த உன்னத நிலையை நான் அடையக் காரணமாக இருந்த என் அக்கா இன்று என்னுடன் இல்லை. எனக்கு அம்மா இருந்தாலும்


இயல்பு

 

 அனுசுயா-பட்டாபி இருவரும் தம்பதிகள், புற நகர்பகுதியில் வீடு கட்டி குடியேறி, பிள்ளைகள், கணேஷ் மூத்தவன் 12ம் வகுப்பும், சின்னவள் காவிரி 7ம் வகுப்பும் படிப்பதற்க்காக சொந்த ஊரான புன்செய் கிராமத்தை விட்டு வந்த ஐயர் குடும்பம், நல்ல ஆச்சாரமான குடும்பம், பய பக்தியோடு, பழி பாவத்திற்கு அஞ்சுபவர்கள். பட்டாபிக்கு ஆசிரியர் வேலை, அனு பட்டதாரி, வீட்டை நன்கு கவனித்து பிள்ளைகளை நன்றாக படிக்க டியூஷன் கொண்டு விட்டு அழைத்து வரும் வேலை ஆகியவற்றை திறம்;பட செய்யும் இல்லத்தரசி.


நல்ல சம்பளம்! – ஒரு பக்க கதை

 

 “ஏண்டா!… வயசு இருபதாகுது!…… படிப்பு தான் ஏறலை…எட்டாவதோடு நின்று விட்டாய்….. ஏதாவது ஒரு கடையில் ஒரு வேலை தேடிக் கொள்ள துப்பு இல்லே? …காலங்காத்தாலே தோட்டத்திற்கு வந்து வக்கணையா இளநீர் சீவி குடித்துக் கொண்டிருக்கிறாய்?….” “அப்பா!…இன்னையோட இந்த பேச்சை வுட்டு விடு!… நானும் மெட்ராஸில் வேலை தேடிக் கொண்டேன் …புதன் கிழமை நான் அங்கு போய் வேலையை ஏத்துக்கப் போறேன்!..” “இவரு பெரிய ஐ.ஏ. எஸ். படிச்சிருக்கிறாரு… இவருக்கு மெட்ராஸில் கூப்பிட்டு வேலை தருகிறாங்களாம்!..” “அப்பா! என்


மாம்பழச் சண்டை

 

 ஒரு மாமரத்தில் ஒரு மாங்காய் காய்த்தது. ஒரு மாங்காய் என்றால், ஒரே ஒரு மாங்காய்தான், ரெண்டு மாங்காய் இல்லை, மூணு மாங்காய் இல்லை, ஒரே ஒரு மாங்காய்! அந்த மாங்காய் சுற்றிலும் பார்த்தது. தனக்கு யாராவது தோழர்கள் கிடைப்பார்களா என்று தேடியது. ம்ஹூம், எவ்வளவு தேடினாலும் ஒரு மாங்காயைக்கூடக் காணோம். ஆகவே, அந்த மாங்காய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. இதைப்பார்த்த ஒரு மாம்பூ அந்த மாங்காய்க்கு ஆறுதல் சொன்னது, ‘கவலைப்படாதே, இன்னும் கொஞ்சநாள்ல நாங்க எல்லாரும் மாங்காயா மாறிடுவோம்,


யார் வென்றவன்?

 

 என்னை பற்றி சிறிய அறிமுகம், நான் டிடெக்டிவ் ஏஜன்ஸி ஒன்று வைத்துள்ளேன். இதற்கு தேவைப்படும் தகுதியாக நான் பழைய இராணுவ அதிகாரி ஆகவோ,போலீஸ் அதிகாரியாகவோ, பணி செய்து கொண்டிருந்ததில்லை.வக்கீல் தொழில் கூட செய்ததில்லை. அப்புறம் எப்படி இந்த டிடெக்டிவ் ஏஜன்ஸி வைத்திருக்கிறாய் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நான் சிறு சிறு வழக்குகளுக்காக குற்றவாளியாக சிறைக்கு போயிருக்கிறேன்.அதன் பின் இந்த தொழில் நமக்கு சரிப்பட்டு வராது என்று சின்னதாய் டிடெக்டிவ் ஏஜன்ஸி ஒன்று ஆரம்பிக்கலாம், என்று