கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 3, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!

 

 முதலாம் திருமணநாளின் போது தான் இளவரசியோடு அம்மா, அப்பா காலில் விழுந்து எழுந்தபோது அம்மா சொன்னாள். “யாராவது நல்ல டாக்டரா பாரு குமரா!” “எதுக்கும்மா?” “உங்களுக்கு அப்புறமா கல்யாணம் ஆன பாங்க்காரம்மா மருமவ கூட ஆறுமாசம்” “……..” “எங்கே போனாலும் ‘மருமவளுக்கு விசேஷமா?’ன்னு கேட்குறாங்க. பதில் சொல்லி மாளலை!” “சரிம்மா. பார்க்குறேன்!” டாக்டரம்மாவுக்கு வயது 30களின் மத்தியில் இருந்தது. சினிமாவில் வரும் டாக்டர்களைப் போலவே கோல்ட் ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். ஆனால் வெள்ளை அங்கி எதுவுமில்லாமல்


சப்புமல் குமாரயாவின் புதையல்

 

 குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். “யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு” கிணற்றடியில் நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I


கோபாலா…கோபாலா…!

 

 புது வீட்டில் தொலைக்காட்சிப் பேட்டி குறை. கலர்தானென்றாலும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. பழசு! வரவேற்பறையில்…. புது சோபா, புது பாலிமர் நாற்காலி. சுவரில் மாடர்ன் ஆர்ட் படங்கள். ஷோ கேசில் பொம்மைகள், பூக்கள். ” இந்த வீட்ல டி. வி. மட்டும்தான்ப்பா பழசு..! ” என் பெரிய மகன் நிர்மல் வாய்விட்டே சொல்லிவிட்டான். ” வித்துட்டு புதுசு வாங்கலாம்ப்பா. .! ” அடுத்தவன் விமல் ஆலோசனை சொன்னான். அருகே இருந்த என் மனைவிக்குப் பொறுக்க முடியவில்லை.


சுட்ட கதை

 

 ஐயா, விசாரனைக்காக எனச் சொல்லி அழைத்து வந்து இருக்கோம், நீங்க ஏதாவது பண்ணிடாதிங்க! என பயம் காட்டினார், பள்ளிக்கரனை காவல் நிலைய சிறப்பு எஸ்ஜ சிங்காரம். எஸ் பியே ஆசைப் படறாருனு, டிஎஸ்பி இன்ஸ்ட்ரெக்சன் கொடுத்து இருக்கார்,அப்புறம் என்ன? நமக்கும் நல்லதுதானே? இருந்தாலும் தப்பு தானே? வழக்கு, விசாரனைனு .வந்தா, நாமதான் அலையனும், அவங்க ஒதுங்கிடுவாங்க! என இழுத்தார்..சிங்காரம். தப்புதான்! ஆனா, அவங்களே செய்யச் சொல்றாங்க, நமக்கென்ன? நான் பார்த்துக்கிறேன். நீங்க என் கூட மட்டும் வாங்க.


பெண் தேடல்

 

 (இதற்கு முந்தைய ‘தனிமை’ மற்றும் ‘கோணலான பார்வை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனுக்கு அடுத்த கல்யாணம் முடிந்து, புதுப் பெண்டாட்டி வருவதற்கு முன்பே தன்னைக் கழட்டி விட்டு விட்டதைத்தான் சிவக்குமாரால் சற்றும் பொறுத்தக்கொள்ள முடியவில்லை. பழிக்கு பழி வாங்கும் உணர்ச்சியை அவரும் பதிலுக்கு வார்த்தைகளால் கொட்டி விட்டார். “என்னைய வேலையை விட்டு திடீர்ன்னு போகச்சொல்லிட்டீங்க; ரொம்ப சரி. ஒங்க சொல்படி நான் இங்கேயே என் மகன்களோட இருக்கேன். நீங்களும் ஒங்க இரண்டாம் கல்யாணத்துக்கு