கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2019

116 கதைகள் கிடைத்துள்ளன.

ஷாலினிக்குப் பாராட்டு….!

 

 அன்னை அருள்மேரி ஆங்கிலப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தினுள் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்களாக மாணவ, மாணவியர்கள் பெற்றோர், உற்றார் உறவினர், பொது மக்கள் என அனைவரும் திரண்டிருந்தனர். இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் போக மீதி சூழ்ந்திருந்தனர். மேடையில்… சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அதிகாரி ஆரோக்கியதாஸ் அமர்ந்திருந்தார். ஆசிரியை ஆர்த்தியின் அறிவிப்பின்படி…தலைமை ஆசிரியை மரிபிலோமினா மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பித்துக் கொண்டிருந்தாள். “எங்கள் பள்ளியில் ஆங்கிலத்திற்கு மட்டுமில்லாமல் தமிழுக்கும் முதலிடம், முக்கியத்துவம் கொடுத்து மாணவமணிகளைத்


செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்

 

 சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள். மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன


கனா கண்டேன் தோழா நான்!

 

 நண்பன் நாராயணன் ஏதாவது கனவு கண்டால் அவனது மனைவியிடம்கூடச் சொல்லமாட்டான். (அப்படியே அவன் சொன்னாலும் அந்த அம்மையார் பொறுமையாக காது கொடுத்துக் கேட்கமாட்டாள்.) ஆகவே தனது கனவுகளை சுடச்சுட சொல்லுவதற்கு சில வேளைகளில் என் வீட்டிற்குக் காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவான். அன்றைக்குக் காஃபி சாப்பிட்டானதும் தன் கனவைப் பற்றிக் கூறினான். ஏதோ ஒரு சத்திரத்தில் நிறைய மனிதர்கள் மூட்டை முடிச்சுகளுடன் காத்திருக்கிறார்களாம். அவர்களுக்கு நடுவில் நாராயணனும் போய் உட்கார்ந்து கொள்கிறானாம். சாப்பாடு இன்னும் வரவில்லையே


அப்புவின் கதை

 

 முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக இருந்தது; அதை அடைவது சிரமம், அதனால் அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். பக்கத்து நகரம் கூடப் பல மைல் தூரத்தில் இருந்தது. இரண்டு மைல் தள்ளி கூடம், ஒரு இரவு படகுப் பயணம் போனால், பாலம், குதிரை வண்டியில் ஒரு மணி நேரம் சவாரி செய்து பிறகு பஸ்ஸில் மூன்று


அருமருந்து

 

 “தொடரும்”….. என்று இரவு 10.30 நாடகம் முடிந்ததும் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டது. மரம் செடி கொடிகள் மூலம் இயற்கை இரவோடு பேசிக்கொண்டிருக்க…என் மனம் உன்னையே அசைபோட்டுக்கொண்டிருந்தது. “நீ வந்துவிடுவாய் ! ” என்பதால், போர்வை, தலையணை உதறி படுக்கையை சரிசெய்து கொண்டேன். கொசுவோடு போர் செய்ய ஆல்அவுட்டும் வைத்துவிட்டேன். சன்னலை அடைத்து அறையை மேலும் இருட்டாக்கி கொண்டேன். உனக்குப் பிடித்த “நீல நைட்லாம்ப்” மட்டும் போட்டுக்கொண்டேன். அம்மா அப்பா உறங்கிவிட்டார்கள் !. உன் வருகைக்கான எல்லா ஏற்பாடையும்


தெரு நாயை துன்புறுத்த வேண்டாம்

 

 கோவிந்தாபுரம் என்னும் சிற்றூர், அந்த ஊரில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். விவசாயத்திற்கு ஏற்றவாறு அந்த ஊரில் பெரிய ஆறு ஒன்றும், நிறைய வாய்க்கால்களும் உண்டு. வாய்க்கால்களில் ஓடும் நீரில் விவசாய்மும், ஆற்றில் ஓடும் தண்ணீரில் குடிதண்ணீர், மற்றும் பல தேவைகளை அங்குள்ள மக்கள் பூர்த்தி செய்து கொள்வர். அந்த ஊரில் சிவனேசன் என்ன்னும் விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவியும், பூபதி என்னும் ஒரு பையனும், பூங்க்கொடி என்னும் பெண்ணும் உண்டு. பூங்கொடி


சிவ சக்தி

 

 என்னங்க! இன்னும் நம்ம சமையல்காரர் வரலை! வேலைக்கார்ரும் வரலை! மணி ஒன்பது ஆகிடுச்சு. அவங்கவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும். நமக்குத்தான் ஒரு வேலையும் இல்ல, காத்துகிட்டு இருக்கிறதைத் தவிர, அப்படினு நினைச்சுகிட்டாங்க போல. இன்றைக்கு பிரதோஷம்! அவங்க விரதங்கிற பேரிலே பட்டினியா கிடக்கிறாங்களோ, இல்லையோ? நம்மலை பட்டினி போட்டு ஒரு கால பூஜையை சாயங்காலாம் பண்ணலாம்னு இருக்கலாம். என ஆதிசிவனாயும், உமா மகேஸ்வரியாய் குடிக்கொண்டுள்ள ஆதிபுரம் கோவிலில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டு இருந்தனர். யாரோ, வாரப்ல


இசக்கியின் பள்ளிப் பருவம்

 

 (இதற்கு முந்தைய ‘பூரணி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). இசக்கிப் பாண்டியை நன்றாகத் தயார்செய்து பெரிய பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் கஸ்தூரி ஐயங்கார் கிட்ட கூட்டிட்டுப்போனா பூரணி. “ஏம்மா, இந்தப் பயலைப் பார்த்தா ஏழெட்டு வயசுப் பயலாட்டம் இருக்கான்… நீ என்னமோ ஐந்து வயசுன்னு சொல்றயே?” எடுத்த எடுப்பிலேயே கஸ்தூரி ஐயங்கார் கேட்டார். “நெசமாத்தேன் சாமி… இப்பத்தேன் இவனுக்கு அஞ்சு வயசு முடிஞ்சிருக்கு. பாக்கறதுக்குத்தேன் இப்படியிருக்கான்.” “நீ சொல்றே, எப்படி நான் நம்புறது?”


வெயில் வா மழை போ..!

 

 என்றும் இல்லாதவாறு இன்று வாசலில் அதிக கூட்டமாக இருந்தது. டாக்டர் அஞ்சலி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள். கடமையில் இருந்த தாதிகளால் கூட அவளுக்கு ஈடாக நின்று பிடிக்க முடியவில்லை. இடியும் மின்னலுமாய் இருந்த வானம் சற்று ஓய்ந்திருப்பது போலத் தோன்றினாலும், இன்னும் மழை கொட்டலாம் என்ற எதிர்பார்ப்போடு வானம் காத்திருப்பது தெரிந்தது. ‘டாக்டர் எங்க அம்மாவைக் காப்பாற்றுங்க..!’ ‘டாக்டர் என்னோட ஒரே பிள்ளை, பிளீஸ் காப்பாற்றுங்க..!’ பரிதவிப்போடு ஓடி வந்த எல்லோருக்கும் அவள் கைகொடுத்தாள். ஒவ்வொரு


குளத்தில் முதலைகள்

 

 பகல் பொழுது போனால் இரவு. இருட்டு நிறைந்த கால பொழுதுகள். அதில் நல்ல இரவு கெட்ட இரவு என்பது எல்லாம் கிடையாது. அதை அனுபவிக்கும் மனிதரிடம் தான் இருக்கு. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு நடக்க போகும் சம்பவங்கள்; அது நல்ல இரவா அல்லது கெட்ட இரவா என முடிவு செய்ய போகிறது. நடு இரவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுக் கொண்டிருக்கிறது. அந்த மோட்டார்